எவ்ளோ பெரிய விபத்தா இருந்தாலும் தப்பிச்சுடலாம்.. ரிஷப்பை போல ஈசியா எஸ்கேப் ஆக இத செய்தா மட்டும்தான் முடியும்!
நாட்டையே உலுக்கும் வகையில் அரங்கேறிய விபத்து சம்பவங்களில் இந்திய கிரிக்கெட் ஆண்கள் அணியைச் சேர்ந்த ரிஷப் பந்தின் கார் விபத்து சம்பவமும் ஒன்று. அதி வேகத்தில் சீறி பாய்ந்த இவரின் சொகுசு கார், சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டு இருந்த டிவைடரின் மீது மோதி மிகப் பெரிய விபத்தைச் சந்தித்தது.
விபத்து நேர்ந்தபோது இந்த பிரபலம் சீட் பெல்ட் அணியவில்லை என கூறப்படுகின்றது. ஆகையால், முகம் மற்றும் முதுகுப் பகுதியில் மிகக் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிலையிலும் காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு அவர் வெளியேறினார். ஆகையால், கடுமையான காயங்களுடன் அவரால் உயிர் தப்ப முடிந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சம்பவ தினத்தன்றே ஆபத்தான கட்டத்தை கடந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்த விபத்து சம்பவத்தில் ரிஷப் பந்தின் விலையுயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவி ரக கார் முற்றிலுமாக தீயிற்கு இரையாகி வெறும் கூடாக மாறியது. இந்த நிகழ்வு பலருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. குறிப்பாக, ஒரு சில விபத்து சம்பவங்களில் மட்டும் கார்கள் தீ பிடித்து எரிவது எப்படி என்கிற சந்தேகமே பலருக்கு எழும்பி இருக்கின்றது. இதற்கான காரணத்தையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, விபத்தின்போது ஏன் கார்கள் தீ பிடிக்கின்றன, இந்த மாதிரியான நேரங்களில் நம்மை தற்காத்துக் கொள்ள செய்ய வேண்டும் என்பதற்கான வழிக்காட்டுதல்களையே இந்த பதிவில் வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
கார் தீ பிடிப்பதற்கான காரணங்கள்:
அதிக வேகத்தில் செல்லும் கார்கள் விபத்தைச் சந்திக்கும்போது தீயிற்கு இரையாகுவது புதுமையானது அல்ல. நவீன கால கார்களில் எளிதில் தீ பிடிக்கக் கூடிய பொருட்கள் பல உள்ளன. துணிகள், பஞ்சுகள், ஃபோம், பிளாஸ்டிக், எலெக்ட்ரிக்கல் ஒயரிங் மற்றும் பேட்டரி போன்ற பல எளிதில் தீ பிடிக்கக் கூடிய பொருட்கள் உள்ளன. இவற்றுடன், விபத்தின்போது ஏற்படும் எரிபொருள் கசிவும் இணையும்போது அது கடுமையான தீ விபத்தாக மாறிவிடுகின்றது. இந்த மாதிரியான நேரங்களில் தீயை அவ்வளவு எளிதில் கட்டுப்படுத்திவிட முடியாது.

எனவேதான் அவசர கால உதவிக்காக காரில் தீ அணைப்பானை வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. ஆனால், இந்த கருவியை எந்தவொரு கார் உற்பத்தியாளரும் வழங்குவதில்லை. ஆகையால், நாமே வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் விபத்துகள் எப்போது வேண்டுமானாலும் அரங்கேறலாம். நாம்தான் கவனமாக இருக்கின்றோமே எதற்கு இது எல்லாம் என நீங்கள் நினைக்கலாம். எதிரில் வருபவர்களும் நம்மைபோல் கவனமாகவே வருவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம். ஆகையால், பாதுகாப்பு கருவிகளை கையோடு வைத்திருப்பது மிக மிக நல்லது.
தீயை விட்டு வெளியேறுவது:
விபத்திற்கு பின் வாகனம் தீப்பற்ற தொடங்குகிறது என்றால் முதலில் அந்த வாகனத்தை விட்டு வெளியேறுவதே முதன்மையான கடமை ஆகும். இதற்கு பின்னரே தீயை அணைக்கும் முயற்சியில் களமிறங்க வேண்டும். விபத்தின்போது ரிஷப் பந்தும் இப்படிதான் செய்திருக்கின்றார். விபத்து நேர்ந்த உடன் அவர் கார் கதவை திறக்க முயற்சி செய்திருக்கின்றார். அது பயனற்று போனதன் விளைவாக உடனடியாக சற்றும் யோசிக்காமல் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு அவர் வெளியேறி இருக்கின்றார்.
இதுபோல ஆபத்தை அதிகரித்துக் கொள்ளாமல், வாகனம் விபத்தைச் சந்தித்த உடன் அதை வெளியேறி விட வேண்டும். நம்மை பத்திரப்படுத்திய பின்னரே பிற பொருட்களை பாதுகாக்கும் முயற்சியில் களமிறங்க வேண்டும். இதேபோல், ஏற்கனவே கூறியதைப் போல் தீ அணைப்பான் ஒன்றை காருக்குள்ளேயே வைத்திருத்தல் வேண்டும். இதுமட்டுமின்றி, அவசர காலத்தில் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியேறுவதற்கான கருவியை வைத்திருந்தாலும் மிகவும் நல்லது. இது உங்களை உடனடியாக காரை விட்டு வேளியேறுவதற்கு உதவியாக இருக்கும்.
காரை விட்டு வெளியே வந்த பின்னர் முடிந்த அளவு தள்ளி போய் விட வேண்டும்:
கார்களில் உள்ள சில பொருட்கள் வெடிக்கும் திறன் கொண்டவையாக இருக்கின்றன. ஆகையால், கார் விபத்தைச் சந்தித்த பின்னர் அதை விட்டு சில மீட்டர் தள்ளி போய் விடுவதே மிக மிக நல்லது. எரிபொருள் தொட்டி போன்றவை அதிக வெப்பத்தின் காரணமாக வெடித்து சிதற நேரிடலாம். இதேபோல், உங்கள் கண் எதிரில் வேறு ஏதேனும் வாகனம் தீ பற்றி எரிகிறது என்றால் உடனடியாக அந்த பகுதியில் நிற்கும் உங்களது வாகனத்தை அப்புறத்திவிடுங்கள். தீ ஆரம்ப நிலையில் இருக்கும்போது மட்டுமே இந்த முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஓர் வாகனத்தில் பிடிக்கும் அடுத்தடுத்த வாகனங்களையும் அதன் பசிக்கு இரையாக்கிக் கொள்ளலாம். இதற்கு உதாரணமாக பல்வேறு சம்பவங்கள் நாட்டில் அரங்கேறி இருக்கின்றன. எனவேதான், அங்கிருந்து உங்களது வாகனங்களை பத்திரப்படுத்த வேண்டும் என்பது அவசியமாக உள்ளது.
முதலுதவி பெட்டி:
ஒவ்வொரு வாகன உரிமையாளரும் தங்களுடைய வாகனத்தில் முதலுதவி பெட்டியை வைத்திருப்பது அவசியம் ஆகும். வாகன உற்பத்தியாளர்கள் இதன் அவசியத்தை உணர்ந்து ஒவ்வொரு புதிய காருடன் முதலுதவி பெட்டியை வழங்குகின்றனர். இதில் உள்ள மருந்து பொருட்களுக்கும் காலவதி தேதி உள்ளது. ஆகையால், சரியான காலாவதி தேதியை பார்த்து, அவ்வப்போது அதை மாற்றிவிடுவது நல்லது. அது ஒரு பக்கம் இருந்துட்டுபோகுது நமக்கு என்ன தேவையாபட போகுது என்ற அலட்சியம் வேண்டாம். நம் நாட்டில் இன்னும் குறிப்பிட்ட சில பகுதிகளில் மருத்துவமனைகளே இல்லாத நிலையை நம்மால் காண முடிகின்றது. ஆகையால், இந்த விஷயத்தில் அலட்சியத்தை தவிர்ப்பது மிக நல்லது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல்:
நாம் பயணிக்கும் வாகனம் விபத்திற்கு ஆளாகினாலோ அல்லது பிறருடைய வாகனம் விபத்திற்கு ஆளாகினாலோ அதில் இருப்பவர்களைக் காப்பாற்றுவது நம்முடைய கடமை ஆகும். முதலில் பாதுகாப்பாக நாம் வெளியேறிய பின்னர் அடுத்தடுத்ததாக பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்க வேண்டும். ரிஷப் பந்தின் விஷயத்திலும் இவ்வாறே பொதுமக்கள் சிலர் செய்திருக்கின்றனர். கார் தீ விபத்தை சந்தித்த பின்னர் தீ பிடிக்க தொடங்கி இருக்கின்றது. அந்த நேரத்தில் காரை வெளியேறும் முயற்சியில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரருக்கு அந்த பகுதி வாசிகளும் உதவி கரம் நீட்டி இருக்கின்றனர்.
அவசர கால உதவிக்கு அழைப்பு விடுத்தல்:
தீ விபத்து, வாகன விபத்து எது நடைபெற்றாலும் உடனடியாக அவசர உதவிக்கு அழைப்பு விடுவது நல்ல யோசனை ஆகும். ரோடு சைடு அசிஸ்டன்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு இதுகுறித்த தகவலை தெரிவிப்பதும் மிக மிக சிறந்தது. அவசர கால உதவியின் வாயிலாக உயிரை காப்பாற்ற முடியும். இதேபோல், ரோடு சைடு அசிஸ்டன்ஸை அழைப்பதன் வாயிலாக பாதிப்புக்கு உள்ளாகிய வாகனத்தை அந்த பகுதியை விட்டு அப்புறத்த முடியும். மேலும், காப்பீட்டு நிறுவனங்களுக்கு தெரிவிப்பதன் வாயிலாக விபத்தின் வாயிலாக ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டிக் கொள்ள முடியும். எனவேதான் இவையும் அவசியமானதாகப் பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








