மைக்ரோஃபைபர் துண்டை பயன்படுத்துவதால் கார்களுக்கு இவ்ளோ நன்மைகள் கிடைக்குமா?.. அட இத்தன நாளா இது தெரியாம போச்சே
மைக்ரோஃபைபர் துண்டினால் வாகனங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் அவற்றை எப்படி பராமரிப்பது என்பது பற்றிய பயனுள்ள தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

உங்கள் வாகனத்தை வேறொருவரின் கைகளில் வழங்காமல் நீங்களே சுத்தம் செய்ய விரும்பவர் என்றால் நிச்சயம் நீங்கள் மைக்ரோஃபைபர் டவல் (Microfibre Towels) பற்றி அறிந்தே ஆக வேண்டும். இதன் வாயிலாக உங்கள் வாகனத்தை சுத்தமாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் தேவையற்ற ஸ்கிராட்சுகளையும் தவிர்க்க முடியும். இதுபோன்று எண்ணற்ற பயன்களைக் கொண்டதாக மைக்ரோ டவல்கள் உள்ளன.

காரின் வெளிப்புறத்தை மட்டுமின்றி உட்புறத்தையும் சுத்தம் செய்யவும் இந்த மைக்ரோ டவல்கள் மிகுந்த பயனுள்ளதாக உள்ளன. மேலும், கண்ணாடிகளையும் இதன் வாயிலாக சுத்தம் செய்து கொள்ள முடியும். இவை உலர்ந்த மற்றும் ஈரமான நிலைகளிலும் மிக சூப்பராக சுத்தம் செய்ய உதவுகின்றன. மிக சரியாக மைக்ரை டவல்களை பயன்படுத்தினோம் என்றால் இதன் ஆயுட்காலத்தை பல நாட்களுக்கு நீட்டித்துக் கொள்ள முடியும். குறிப்பாக, சிறந்த கவனிப்பின் வாயிலாக அதன் ஆயுட்காலத்தை நீட்டித்துக் கொள்ள முடியும். அது எப்படினு கேக்குறீங்களா? வாங்க இதுகுறித்த விரிவான தகவல்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம்.

மைக்ரோஃபைபர் டவல்கள் என்றால் என்ன?
முதில் மைக்ரோஃபைபர் டவல் என்றால் என்ன என்பதை சுருக்கமாக பார்க்கலாம். பாலிமைடு மற்றும் பாலிஸ்டர் ஆகிய இரண்டின் கலவையே மைக்ரோஃபர் துண்டு. இவற்றாலேயே அது உருவாக்கப்படுகின்றது. மனிதர்களின் முடியை போல் மிகவும் நுண்ணியதாக அது இருக்கும். எனவே ஸ்கிராட்ச் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. பொதுவாக மைக்ரோ ஃபைபர் டவல்கள் 90/10 அல்லது 75/25 என்கிற பாலிஸ்டர் மற்றும் பாலிமைடு கலவைகளால் உருவாக்கப்படுகின்றன.

இதேபோல் அடர்த்தி வாரியாகவும் மைக்ரோஃபைபர் தரம் பிரிக்கப்படுகின்றன. அது அதன் அடர்த்திக்கு ஏற்பவாறு தண்ணீரை உறிஞ்சும் தண்மையைக் கொண்டிருக்கின்றது. எனவேதான் அடர்த்திக்கு ஏற்றவாறு பயன்பாட்டை வழங்கக் கூடியதாக மைக்ரோஃபபர் டவல் காட்சியளிக்கின்றது. இதேபோல் அதன் விலை மாறுபட்டு உள்ளது.

மைக்ரோஃபைபர் டவலின் அளவுகளும், அவற்றின் பயன்பாட்டு விபரமும்:
பொது பயன்பாட்டிற்கு உகந்த மைக்ரோ ஃபைபர் டவல் 80/20 220 ஜிஎஸ்எம் (Grammes Square Metre) என்ற அளவில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. காரின் வெளிப்புறம், வீல்கள், உட்புறம் டூர்கள் மற்றும் ஜன்னல்களுக்கு உகந்ததாக இந்த அளவுள்ள டவல் இருக்கின்றது.
75/25 360 ஜிஎஸ்என் என்கிற அளவில் விற்பனைக்குக் கிடைக்கும் மைக்ரோஃபைபர் டவல் மிகுந்த பாதுகாப்பானதாக காட்சியளிக்கின்றது. இதைக் கொண்டு வாகனத்தின் அனைத்து பாகங்களையும் தூய்மைப்படுத்த முடியும். குறிப்பாக வேக்ஸ் மற்றும் பாலிஷ் போடப்பட்ட பின்னர் இதைக் கொண்டு வாகனத்தைத் தாரளமாக சுத்தப்படுத்தலாம்.

டெலிகேட் டவலாக (Delicate Towel) 75/25 600 ஜிஎஸ்எம் என்கிற அளவில் விற்பனைக்குக் கிடைக்கும் மைக்ரோஃபைபர் டவல் இருக்கின்றது. இது பாதுகாப்பான டவலை விட மிகவும் மென்மையானதாகக் காட்சியளிக்கின்றது. மெழுகு மற்றும் பாலிஷ் ஆகியவற்றை அகற்ற இது பயன்படும்.
காரின் கண்ணாடி பகுதியை தூய்மைப்படுத்துவதற்கு உகந்ததாக 80/20 ஜிஎஸ்எம் X 350 ஜிஎஸ்எம் என்கிற அளவில் கிடைக்கும் மைக்ரோஃபைபர் டவல் இருக்கின்றது.

மைக்ரோ ஃபைபர் டவலைக் பராமரிக்கும் முறை:
மேலே கூறியதை போல் அந்தந்த பாகத்திற்கு ஏற்ப மைக்ரோஃபைபர் டவலை வாங்கி பயன்படுத்துவது நல்லது. தேவையற்ற சிராப்பு மற்றும் பொலிவு இழப்பை தவிர்க்க இந்த நிலைப்பாடு உதவும். மிக தெளிவாக கூற வேண்டும் எனில் வெளிப்புறம் பறவை எச்சம் மற்றும் தூசியால் நிரம்பியிருக்கும். அவற்றை சுத்தம் செய்தால் டவலால் உட்புறத்தை சுத்தம் செய்யும்போது தேவையற்ற துர்நாற்றம் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனைத் தவிர்க்கவே அந்தந்த பாகத்திற்கென தனி துண்டை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.

அனைத்து துண்டுகளையும் ஒரே நேரத்தில் ஒரு மாதரியாக ஊற வைத்து துவைப்பதைத் தவிர்க்கவும். இதன் வாயிலாகவும் துண்டுகள் பாதிப்படைய தொடங்கும். வெளிப்புறத்தை சுத்தம் செய்ய பயன்படுத்தும் துண்டை தனியாகவும், உட்பக்கத்தை சுத்தம் செய்ய பயன்படுத்தும் துண்டை தனியாகவும் வாஷ் செய்து பயன்படுத்துவது மிக சிறந்தது.

லிக்யூடு டிடெர்ஜன்டை பயன்படுத்துவதாலும், பிரத்யேகமாக மைக்ரோஃபைர் டவலை சுத்தம் செய்வதற்கென சந்தையில் கிடைக்கும் கெமிக்கலை பயன்படுத்துவதாலும் அந்த துண்டின் ஆயுட் காலத்தையும், பயன்பாட்டையும் பல மடங்கு அதிகரித்துக் கொள்ள முடியும். இதற்கு பின்னர் சுடு நீரிலும் போட்டு அதை சில நேரங்கள் ஊற விடலாம். இதன் வாயிலாக நுண்ணிய கிருமிகளை அழித்து, கூடுதல் புத்துணர்வை பெற்றுக் கொள்ள முடியும்.

அதேநேரத்தில் ப்ளீச் அல்லது பவுடர் டிடெர்ஜென்டை பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள். இதன் வாயிலாக துணியின் குவாலிட்டு படுமோசமானதாக மாறிவிடும். இதேபோல் உச்சி வெயிலில் அந்த துணியை காய வைக்க வேண்டாம். மிதமான மாலை நேர வெயிலில் காய வைத்தாலே போதும். எந்த காரணத்தைக் கொண்டும் துணியை வெட்ட வெளியில் அப்படியே விட்டு வேண்டும். பாதுகாப்பாக ஓர் கவரில் அடைத்து பயன்படுத்துவது நல்லது.


Click it and Unblock the Notifications