காதலர் தினத்தை மகளுக்கு மறக்க முடியாத நாளாக மாற்றிய தந்தை... இந்தியாவில் யாரிடமும் இல்லாத கார் பரிசளிப்பு!
இந்த காதலர் தினத்தை தனது மகளுக்கு மறக்க முடியாத நாளாக மாற்ற வேண்டும் என்பதற்காக சூப்பரான லம்போர்கினி ஹூராகேன் எவோ ஃப்ளூ கேப்ஸ்யூல் (Huracán EVO Fluo Capsule) காரை சென்னையச் சேர்ந்த ஓர் தந்தை வாங்கிக் கொடுத்திருக்கின்றார். இந்த கார் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும். ஆகையால், பலரின் கவனத்தை இந்த நிகழ்வு ஈர்த்திருக்கின்றது.

லம்போர்கினி நிறுவனத்தின் பெருமைமிக்க தயாரிப்புகளில் ஹூராகேன் எவோ ஃப்ளூ கேப்ஸ்யூல் (Huracán EVO Fluo Capsule) சூப்பர் காரும் ஒன்று. இந்த காரே தற்போது முதல் முறையாக இந்தியா வந்தடைந்திருக்கின்றது. நிறுவனத்தின் மிகவும் துடிப்பான தயாரிப்புகளில் ஒன்றாக இக்கார் காட்சியளிக்கின்றது.

இதனையேச் சென்னையைச் சேர்ந்த ஓர் தந்தை அவரது மகளுக்கு பரிசாக வழங்கியிருக்கின்றார். தனது எல்லையில்லா அன்பை மகளுக்கு வெளிக்காட்டும் வகையில் இக்காரை பரிசாக வழங்கியிருக்கின்றார் அந்த அடையாளம் வெளிவராத தந்தை. லம்போர்கினி நிறுவனத்தின் அறிக்கையின் வாயிலாகவே இந்த பரிசளிப்பு நிகழ்வு பற்றிய தகவல் தற்போது வெளி வந்திருக்கின்றது.

இச்சூப்பர் காரின் வருகையை முன் கூட்டியே அறிந்து ஸ்பெஷலாக இந்த தினத்தில்தான் தனக்கு கார் டெலிவரி வேண்டும் என அந்த தந்தை காரின் டெலிவரியை ஷெட்யூல் செய்து பெற்றிருக்கின்றார். அரன்சியோ லிவ்ரியா நிறத்திலான ஹூராகேன் எவோ ஃப்ளூ கேப்ஸ்யூல் காரே பரிசாக வழங்கப்பட்டிருக்கின்றது.

மிகவும் துடிப்பான வேகம் மற்றும் கவர்ச்சியான தோற்றத்தை விரும்புவோர்களின் தேர்வாக ஹூராகேன் எவோ ஃப்ளூ கேப்ஸ்யூல் சூப்பர் கார் இருக்கின்றது. இந்த காரையே இன்று (பிப்ரவரி 14) இந்தியாவில் அறிமுகமும் செய்திருக்கின்றது. மிகவும் பிரகாசமான மற்றும் போல்டான நிற தேர்வுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

வெளிப்புறத்தில் மட்டுமில்லைங்க உட்புறத்திலும் பிரத்யேகமான நிறங்களை வழங்க இருப்பதாகவும் அது அறிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான உள் மற்றும் வெளிப்புற நிற தேர்வுகளில் ஹூராகேன் எவோ ஃப்ளூ கேப்ஸ்யூல் விற்பனைக்குக் கிடைக்கும்.

வெர்டே ஷாக் -பச்சை (Verde Shock - green), அரன்சியோ லிவ்ரியா - ஆரஞ்சு (Arancio Livrea - orange), செலஸ்டே ஃபெட்ரா - ப்ளூ (Celeste Fedra - blue), அரன்சியோ டக் - ஆரஞ்சு (Arancio Dac - orange) மற்றும் கியல்லோ க்ளாரஸ் - மஞ்சள் (Giallo Clarus - yellow) ஆகிய நிற தேர்வுகளிலேயே ஹூராகேன் எவோ ஃப்ளூ கேப்ஸ்யூல் கார் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

மேலே பார்த்த நிறம் மட்டுமின்றி மேட் கருப்பு நிறமும் இக்காரில் இடம் பெற இருக்கின்றது. ரூஃப், முன் பக்க பம்பர் மற்றும் சைடு ஸ்கர்ட் உள்ளிட்டவையே இந்த நிறத்திலும் காட்சியளிக்கும். இதுதவிர சில பிரத்யேக கஸ்டமைசேஷன் ஆப்ஷனை இக்காரில் லம்போர்கினி நிறுவனம் வழங்க இருக்கின்றது. இது தங்களை சாலையில் செல்லும்போது மேலும் தனித்துவமாகக் காண்பித்துக் கொள்ள உதவும்.

சாதாரணமாகவே இந்த காரில் சென்றால் ஊரே திரும்பி பார்க்கும். இதை அதிகமாக்கவே சிறப்பு கஸ்டமைசேஷன் வசதி வழங்கப்படுகின்றது. இதுமட்டுமில்லைங்க கூடுதல் ஸ்போர்ட்டியான தோற்றத்தில் ஹூராகேன் எவோ ஃப்ளூ கேப்ஸ்யூல் காரை காண்பிக்கவும் இந்த கஸ்டமைசேஷன் வசதி வழி வகுக்கும். இக்காரில் லம்போர்கினி நிறுவனம் 5.2 லிட்டர், வி10 நேச்சுரல்லி அஸ்பைரேடட் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது அதிக பவர்ஃபுல்லான மோட்டாராகும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 631 பிஎச்பி மற்றும் 600 என்எம் டார்க்கை வெளியேற்றும். இது ஓர் நான்கு வீல் இயக்கம் கொண்ட சூப்பர் காராகும். இந்த காரை நிறுவனம் ரியர் வீல் டிரைவ் வசதி உடனும் உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த தேர்வு 601 பிஎச்பி மற்றும் 560 என்எம் டார்க்கை மட்டுமே வெளியேற்றும். இக்காரில் 7 ஸ்பீடு ட்யூவல் க்ளட்ச் யூனிட் ஸ்டாண்டர்டான அம்சமாக வழங்கப்படுகின்றது.

ஹூராகேன் எவோ ஃப்ளூ கேப்ஸ்யூல் இந்திய வருகை குறித்து லம்போர்கினி இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஷரத் அகர்வால் கூறியதாவது, "எங்கள் வி10 சூப்பர் ஸ்போர்ட்ஸ் காரை இந்தியா கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இதன் சுறுசுறுப்பான வேகம் மற்றும் நிறம் இக்காரின் சாலை இருப்பை அடிக்கோடிட்டுக் காட்டும். இந்திய நுகர்வோர் மத்தியில் ஹூராகேன் சீரிஸ் கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையிலேயே புதிய ஹூராகேன் எவோ ஃப்ளூ கேப்ஸ்யூல் காரை இந்த பிரிவில் சேர்த்துள்ளோம். இது, வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய உதவும்" என்றார்.


Click it and Unblock the Notifications








