எக்கச்சக்க அப்டேட்களுடன் வரும் ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுக தேதி என்ன தெரியுமா?
ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டு விற்பனையாகி வரும் வென்யூ காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்தும் தேதியை அறிவித்துள்ளது. என் தேதியில் அறிமுகமாகிறது? அதில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது காணலாம் வாருங்கள்.

ஹூண்டாய் நிறுவனத்தின் எஸ்யூவி காரான வென்யூ காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் இந்த மாதம் வெளியாகும் என கூறப்பட்டு வந்தது. இந்த கார் இந்தியாவில் பல இடங்களில் டெஸ்ட்டிங் செய்யப்படும் புகைப்படம் கூட சமூகவலைத்தளங்களில் லீக் ஆகின. இந்நிலையில் இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை அந்நிறுவனம் வரும் 16ம் தேதி வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வாருங்கள் அந்த கார் குறித்த விபரங்களைக் காணலாம்.

ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரை பொருத்தவரை பழைய காரில் இருக்கும் அதே இன்ஜின் தான் இந்த காரிலும் பொருத்தப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் நேச்சுரல் அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.35 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகிய 3 ஆப்ஷன்களில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. புதிய ஃபேஸ்லிஃப்ட் வென்யூ காரின் டிசைன் மாற்றப்பட்டுள்ளது. புதிய காரின் வெளிப்புற டிசைனில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காரின் முன்பக்கத்தில் புதிதாக கிரில் பொருத்தப்பட்டுள்ளது. இது பாராமெட்ரிக் ஜூவல் பேட்டர்ன் டிசைனில் உள்ளது. இது போக முன்பக்கம் ஹெட்லைட்கள் புதிய டிசைனில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் முன்பக்க பம்பரும் புதிய வடிவம் பெற்றுள்ளது.

இந்த காரின் பக்கவாட்டு பகுதிகளைப் பொருத்தவரை பெரிய அளவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பழைய காரில் இருந்த அதே டிசைனே இந்த காரிலும் உள்ளது ஆனால் அலாய் வீல்டிசைன் மற்றும் மாற்றப்பட்டுள்ளது. புதிய அலாய் வீல் டிசைன் எடுப்பாக ஸ்போர்ட் லுக்கில் காட்சி தருகிறது.

பின்புறத்தைப் பொருத்தவரை
ஏராளமான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பின்புறத்தின் மையப்பகுதியில் வென்யூ பேட்ஜ் இடம் பெற்றுள்ளது. அடுத்ததாகப் பின்பக்க டெயில் லைட்கள் புதிதாக டிசைன் செய்யப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் இரு பக்க டெயில் லைட்களையும் இணைக்கும் வகையில் சிவப்பு லைட் பட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதுடெயில் லைட் உடன் சேர்ந்து ஒளிரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

காரின் உட்புறத்தில் பெரும்பாலான டிசைன் பழைய காரில் உள்ளதைப் போலவே இருக்கிறது. ஆனால் முக்கியமான சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் டேஷ் போர்டு மறு வடிவமைப்பைப் பெற்றுள்ளது. புதிய டிசைனில் டேஷ்போர்டு கொடுக்கப்பட்டுள்ளது. இது போக புதிய ஆப்ஷன்களாக டிரைவருக்கான இன்ஸ்ட்ரூமெண்ட் டிஸ்பிளே முழுவதுமாக டிஜிட்டலிலும், மேற்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படியாக இந்த காரில் பல புதிய அம்சங்கள் இருக்கிறது.

இந்த காரின் கியர் பாக்ஸை பொருத்தவரை மொத்தம் 3 ஆப்ஷனவ்கள் உள்ளன மேனுவல், ஆட்டோமெட்டிக் மற்றும் ஐ மேனுவல் என 3 விதமான கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இந்த கார் வரும் ஜூ16ம் தேதி அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பொழுது தான் இந்த காரின் விலை மற்றும் வேரியன்ட் விபரங்கள் தெரியவரும்.

தற்போது ஹூண்டாய் நிறுவனம் தற்போது விற்பனையாகும் வென்யூ காருக்கான புக்கிங்கை நிறுத்தி வைத்துள்ளது. ஏற்கனவே புக்கிங் செய்தவர்களுக்கு மட்டுமே கார்களை டெலிவரி செய்து வருகிறது. ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுகத்தின் போது இந்த காருக்கான புக்கிங்கை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








