ஆட்டத்தை ஆரம்பித்த ஹூண்டாய்... கலக்கத்தில் டாடா, மாருதி... நின்னு விளையாட போறாங்க!

இந்திய சந்தையில் வரும் 2023ம் ஆண்டில் பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அத்துடன் ஏற்கனவே விற்பனையில் உள்ள பல்வேறு கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வரும் பணிகளிலும் ஹூண்டாய் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள 2023 ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) திருவிழாவில், ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் (Hyundai Creta Facelift), ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5), புதிய மைக்ரோ எஸ்யூவி கான்செப்ட் (Micro SUV Concept) ஆகியவற்றை ஹூண்டாய் நிறுவனம் காட்சிக்கு வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ஹூண்டாய் ஐயோனிக் 5, எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும்.

ஆட்டத்தை ஆரம்பித்த ஹூண்டாய்... கலக்கத்தில் டாடா, மாருதி... நின்னு விளையாட போறாங்க!

இதுதவிர புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா (New-generation Hyundai Verna) காரும், 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இவை எல்லாம் தவிர, ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios) மற்றும் ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura) ஆகிய கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களையும் 2023ம் ஆண்டில் ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

இதில், ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரானது, ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்தது ஆகும். மறுபக்கம் ஹூண்டாய் அவ்ரா காரானது, காம்பேக்ட் செடான் (Compact Sedan) ரகத்தை சேர்ந்தது. ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வரும் 2023ம் ஆண்டின் மத்தியிலும், ஹூண்டாய் அவ்ரா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல், 2023ம் ஆண்டின் இறுதியிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

2023 ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரில், புதிதாக டிசைன் செய்யப்பட்ட முன் பக்க பம்பர், பூமராங் வடிவ எல்இடி டிஆர்எல்கள் ஆகியவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் புதிய அலாய் வீல்களும் வழங்கப்படலாம். இதுதவிர கேபினுக்கு உள்ளேயும் ஒரு சில மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி புதிய இன்டீரியர் தீம் மற்றும் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவற்றை இந்த காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெறலாம்.

ஆனால் இன்ஜினில் மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே 83 பிஹெச்பி பவர் மற்றும் 114 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 100 பிஹெச்பி பவர் மற்றும் 172 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள்தான், புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் தொடர்ந்து வழங்கப்படும். இதுதவிர சிஎன்ஜி எரிபொருள் ஆப்ஷனும் வழங்கப்படும்.

அதே நேரத்தில் ஹூண்டாய் அவ்ரா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை பொறுத்தவரையில், உள்ளேயும், வெளியேயும் ஒரு சில மாற்றங்கள் மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி வெளிப்புறத்தில், புதிதாக டிசைன் செய்யப்பட்ட முன் பக்க க்ரில் அமைப்பு, அப்டேட் செய்யப்பட்ட முன் பக்க பம்பர், ஹெட்லேம்ப்கள் மற்றும் புதிய அலாய் வீல்கள் ஆகியவை வழங்கப்படலாம். செயல்திறனை பொறுத்தவரையில், 83 பிஹெச்பி பவரை வெளிப்படுத்த கூடிய 1.2 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் 100 பிஹெச்பி பவரை வெளிப்படுத்த கூடிய 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம்.

அத்துடன் சிஎன்ஜி ஆப்ஷனும் வழங்கப்படும். இப்படி பல்வேறு புதிய கார்களை விற்பனை அறிமுகம் செய்யும் யுக்திகளை வகுத்திருப்பதால், இந்திய சந்தையில் வரும் 2023ம் ஆண்டில் ஹூண்டாய் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன. இது மாருதி சுஸுகி (Maruti Suzuki) மற்றும் டாடா (Tata) போன்ற முக்கியமான போட்டி நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, December 18, 2022, 23:58 [IST]
English summary
Hyundai aura grand i10 nios facelift india launch timeline
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+