மைலேஜை வாரி வழங்கும் காரை களமிறக்கும் ஹூண்டாய்! இதுக்கு முன்னாடி மாருதி எல்லாம் ஓரமாதான் நிக்கணும்!

இந்தியாவில் பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) விலை மிகவும் அதிகமாக உள்ளதால், மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் மீது மக்களின் கவனம் திரும்பியுள்ளது. இதன் காரணமாக சிஎன்ஜி (CNG - Compressed Natural Gas) வாகன சந்தை மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

இந்தியாவின் சிஎன்ஜி கார் சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் கைதான் ஓங்கியுள்ளது. ஆனால் ஹூண்டாய் (Hyundai) நிறுவனமும் சிஎன்ஜி கார் சந்தையில் தனக்கென தனி இடத்தை பிடிக்க முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹூண்டாய் க்ரெட்டா சிஎன்ஜி (Hyundai Creta CNG) கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஹூண்டாய் க்ரெட்டா, இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள எஸ்யூவி (SUV) ரக கார் ஆகும்.

மைலேஜை வாரி வழங்கும் காரை களமிறக்கும் ஹூண்டாய்! இதுக்கு முன்னாடி மாருதி எல்லாம் ஓரமாதான் நிக்கணும்!

இதன் சிஎன்ஜி வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஹூண்டாய் நிறுவனம் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஹூண்டாய் க்ரெட்டா சிஎன்ஜி கார் இந்திய சாலைகளில் தற்போது சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக ஹூண்டாய் கார்களில் அதிநவீன வசதிகளுக்கு சற்றும் பஞ்சமிருக்காது. இதன்படி ஹூண்டாய் க்ரெட்டா சிஎன்ஜி காரிலும் ஏராளமான வசதிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் சன்ரூஃப், முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள், 6 ஏர்பேக்குகள், ஹில் அஸிஸ்ட் கண்ட்ரோல் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் போன்ற பல்வேறு வசதிகள், ஹூண்டாய் க்ரெட்டா சிஎன்ஜி காரில் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஹூண்டாய் க்ரெட்டா சிஎன்ஜி காரில், 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 138 பிஹெச்பி பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

ஆனால் சிஎன்ஜி வெர்ஷனில், இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் சிஎன்ஜி எரிபொருளில் இயங்குவதால், சிறப்பான மைலேஜ் (Mileage) கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் க்ரெட்டா சிஎன்ஜி காரில், மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 2023ம் ஆண்டின் மத்தியில், ஹூண்டாய் க்ரெட்டா சிஎன்ஜி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஹூண்டாய் நிறுவனம் 2023ம் ஆண்டின் மத்தியில் க்ரெட்டா காரின் வெகுவாக மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனுடன் சேர்த்து, சிஎன்ஜி வெர்ஷனும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த தகவல் ஆவலை தூண்டியுள்ளது. ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு போட்டியாக, இந்த செக்மெண்ட்டில் மாருதி க்ராண்ட் விட்டாரா (Maruti Grand Vitara) கார் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இது சிறப்பான மைலேஜை வழங்க கூடிய ஹைப்ரிட் கார் (Hybrid Car) ஆகும். இந்த சூழலில், க்ராண்ட் விட்டாரா காரின் சிஎன்ஜி வெர்ஷனையும் மாருதி சுஸுகி நிறுவனம் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதன் காரணமாக கடுமையான போட்டி ஏற்படும் என்பதை உணர்ந்துள்ள ஹூண்டாய் நிறுவனம், அதை சமாளிப்பதற்காகவே, க்ரெட்டா காரின் சிஎன்ஜி வெர்ஷனை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

சிஎன்ஜி வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, ஹூண்டாய் க்ரெட்டா காரின் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன. சிஎன்ஜி தவிர, புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளிலும் ஹூண்டாய் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே கோனா (Hyundai Kona) என்ற எலெக்ட்ரிக் காரை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்து வரும் நிலையில், இதற்கு அடுத்தபடியாக ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) என்ற எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள 2023 ஆட்டோ எக்ஸ்போவில் (2023 Auto Expo), ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காருக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளம் மூலமாகவோ அல்லது ஹூண்டாய் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்கள் மூலமாகவோ ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரை முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 28, 2022, 13:26 [IST]
English summary
Hyundai creta cng in the works all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+