மாருதியை தட்டி உட்கார வைக்க போகும் ஹூண்டாய்! யார் எடத்துல வந்து யார் சீன் போட்றது! வேடிக்கைய மட்டும் பாருங்க!

இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) செக்மெண்ட்டில் நாளுக்கு நாள் போட்டி அதிகரித்து கொண்டே வருகிறது. புதிய கார்களின் வருகைதான் இதற்கு மிக முக்கியமான காரணம். முன்பு ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) போன்ற கார்கள்தான் இந்த செக்மெண்ட்டில் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்தன.

ஆனால் அதற்கு பிறகு ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) ஆகிய கார்களின் வருகையால் போட்டி அதிகரித்தது. இந்த சூழலில், மாருதி க்ராண்ட் விட்டாரா (Maruti Grand Vitara) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) ஆகிய 2 கார்களும், இந்த செக்மெண்ட்டில் தற்போது புதிதாக களமிறங்கியுள்ளன. எனவே முன்பை காட்டிலும் பல மடங்கு போட்டி அதிகரித்துள்ளது.

மாருதியை தட்டி உட்கார வைக்க போகும் ஹூண்டாய்! யார் எடத்துல வந்து யார் சீன் போட்றது! வேடிக்கைய மட்டும் பாருங்க!

இதன் காரணமாக இந்த செக்மெண்ட்டின் ராஜாவாக திகழ்ந்து வந்த ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே அதிகரித்து கொண்டே வரும் போட்டியை சமாளிக்கும் வகையில், ஹூண்டாய் நிறுவனம் க்ரெட்டா காரை பல்வேறு விதங்களிலும் மேம்படுத்தவுள்ளது. க்ரெட்டா காரின் அப்டேட் செய்யப்பட்ட இந்த ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல் 2023ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த சூழலில், ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் குறித்த முக்கியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி ஹூண்டாய் நிறுவனம் வரும் 2023ம் ஆண்டின் மத்தியில் க்ரெட்டா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக வரும் ஜனவரியில் நடைபெறவுள்ள 2023 ஆட்டோ எக்ஸ்போவில் (2023 Auto Expo), புதிய ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காட்சிக்கு வைக்கப்படலாம். ஹூண்டாய் டூஸான் காரை மனதில் வைத்து, 2023 க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலை ஹூண்டாய் நிறுவனம் டிசைன் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த புதிய மாடலின் முன் பகுதியில், ஒருங்கிணைந்த பகல் நேர விளக்குகளுடன் பெரிய பாராமெட்ரிக் ஜூவல் க்ரில் அமைப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் இந்த புதிய மாடலின் பின் பகுதியில், பூமராங் வடிவ எல்இடி டெயில்லைட்களும், ரீ-டிசைன் செய்யப்பட்ட டெயில்கேட்டும் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் 2023 ஹூண்டாய் க்ரெட்டா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வசதிகளுக்கு சற்றும் பஞ்சமிருக்காது என நாம் எதிர்பார்க்கலாம். இதன்படி தற்போதைய மாடலில் வழங்கப்பட்டுள்ள அதே ட்யூயல் டோன் டேஷ்போர்டு, புதிய மாடலிலும் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

அத்துடன் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பேடில் ஷிஃப்டர் வசதியுடன் 4 ஸ்போக் ஸ்டியரிங் வீல் ஆகியவையும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை எல்லாம் தவிர, 2023 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலில், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) தொழில்நுட்ப வசதி வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடாஸ் என்பது, பல்வேறு பாதுகாப்பு வசதிகளின் தொகுப்பாகும்.

எனவே அடாஸ் வசதி உள்ள கார்களுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது நல்ல வரவேற்பை வழங்கி வருகின்றனர். இதன் காரணமாக 2023 க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஹூண்டாய் நிறுவனம் அடாஸ் வசதியை வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடாஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டால், அதுதான் புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரின் மிக முக்கியமான வசதியாக இருக்கும். ஆனால் ஹூண்டாய் க்ரெட்டா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், இன்ஜின் ஆப்ஷன்கள் மாற்றம் செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டுள்ள அதே இன்ஜின் ஆப்ஷன்கள்தான், ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் இடம்பெறும் என கூறப்படுகிறது. இதன்படி 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என 2023 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் 2023 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என 2 வகையான கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் கொடுக்கப்படலாம்.

பல்வேறு வகையான இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள், அடாஸ் உள்பட ஏராளமான அதிநவீன வசதிகள் உள்ளிட்ட காரணங்களால், போட்டியாளர்களுக்கு ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மிகவும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் தவிர, கியா நிறுவனமும் தனது செல்டோஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு தயாராகி வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 27, 2022, 20:35 [IST]
English summary
Hyundai creta facelift new details out
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+