டாடாவை முடித்து கட்ட பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்தது ஹூண்டாய்... கதையே இப்பதான் ஆரம்பிக்குது!

டாடாவை முடித்து கட்ட ஹூண்டாய் நிறுவனம் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் அதிக கார்களை விற்பனை செய்யும் டாப்-10 நிறுவனங்களின் பட்டியலில் மாருதி சுஸுகி நிறுவனத்திற்குதான் எப்போதுமே முதலிடம். ஆனால் இரண்டாவது இடத்திற்கு சமீப காலமாக ஹூண்டாய் மற்றும் டாடா ஆகிய 2 நிறுவனங்களும் முட்டி மோதி வருகின்றன. சில சமயங்களில் ஹூண்டாயும், சில சமயங்களில் டாடாவும் இரண்டாவது இடத்தை மாறி மாறி பிடிக்கின்றன.

இதன்படி கடந்த அக்டோபர் மாதம் ஹூண்டாய் நிறுவனம் இரண்டாவது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. 48,001 கார்களை விற்பனை செய்து அசத்தியதன் மூலம், ஹூண்டாய் நிறுவனத்திற்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. ஆனால் டாடா நிறுவனம் 45,217 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. எனவே டாடா நிறுவனத்திற்கு மூன்றாவது இடம்தான் கிடைத்துள்ளது.

டாடாவை முடித்து கட்ட பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்தது ஹூண்டாய்... கதையே இப்பதான் ஆரம்பிக்குது!

ஹூண்டாய் இரண்டாவது இடத்தை பிடிக்க உதவிய மூன்று முக்கியமான கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். இவைதான் இந்தியாவில் கடந்த அக்டோபரில் ஹூண்டாய் அதிகமாக விற்பனை செய்த டாப்-3 கார்கள் ஆகும். அத்துடன் டாடாவிற்கு ஹூண்டாய் வைக்கவுள்ள செக் குறித்த தகவல்களும் இந்த செய்தியில் அடங்கியுள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta)

கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் கார் என்ற பெருமையை க்ரெட்டா பெற்றுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் 11,880 க்ரெட்டா கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெறும் 6,455 க்ரெட்டா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

இதன் மூலம் விற்பனையில் 84 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருப்பதுடன், அதிகம் விற்பனையான ஹூண்டாய் கார்களின் பட்டியலில் க்ரெட்டா முதலிடத்தையும் பிடித்துள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடல் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. அதன்பின் க்ரெட்டா காரின் விற்பனை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue)

ஹூண்டாய் வெனியூ காரின் விற்பனை 9 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இருப்பினும் கடந்த அக்டோபர் மாதம் அதிகமாக விற்பனையான ஹூண்டாய் கார்களின் பட்டியலில் வெனியூ இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10,554 ஆக இருந்த ஹூண்டாய் வெனியூ காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு அக்டோபர் மாதம் 9,585 ஆக குறைந்துள்ளது. இது 9 சதவீத சரிவாகும்.

டாடாவை முடித்து கட்ட பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்தது ஹூண்டாய்... கதையே இப்பதான் ஆரம்பிக்குது!

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios)

ஹூண்டாய் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் 8,855 க்ராண்ட் ஐ10 நியோஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் இந்த பட்டியலில் க்ராண்ட் ஐ10 நியோஸ் காருக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. அத்துடன் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், க்ராண்ட் ஐ10 நியோஸ் கார், 47 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

ஏனெனில் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹூண்டாய் நிறுவனம் வெறும் 6,042 க்ராண்ட் ஐ10 நியோஸ் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. கார் விற்பனையில் தற்போது ஏற்பட்டுள்ள உத்வேகத்தை தக்க வைத்து கொள்வதற்கும், விற்பனை எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கும் ஹூண்டாய் நிறுவனம் வரும் மாதங்களில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.

டாடாவுக்கு செக்!

டாடா நிறுவனம் தற்போது ஹூண்டாய் நிறுவனத்திற்கு கடுமையான சவாலை அளித்து கொண்டிருப்பதற்கு பன்ச் கார்தான் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. மைக்ரோ எஸ்யூவி ரகத்தை சேர்ந்த டாடா பன்ச் காரின் விற்பனை தற்போது அமோகமாக உள்ளது. எனவே டாடா பன்ச் காருக்கு போட்டியாக ஹூண்டாய் நிறுவனமும் மிகவும் குறைவான விலையில் புதிய மைக்ரோ எஸ்யூவி கார் ஒன்றை வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

வரும் ஜனவரி மாதம் இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போ திருவிழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. அப்போது ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த மிகவும் விலை குறைவான எஸ்யூவி கார் காட்சிப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அடுத்த வருடத்தின் பண்டிகை காலத்தில், விலைகள் அறிவிக்கப்பட்டு இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

Article Published On: Tuesday, November 8, 2022, 14:15 [IST]
English summary
Hyundai creta venue grand i10 nios sales report
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+