பணி பெண்ணுக்கு விலை உயர்ந்த கார் பரிசளித்த முதலாளி! இந்த கிறிஸ்துமஸை அவங்க வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டாங்க!

பணி பெண்ணுக்கு விலை உயர்ந்த காரை வீட்டின் எஜமான் ஒருவர் பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தி உள்ளார். இந்த சூப்பரான சம்பவம் பற்றியும், என்ன மாதிரியான கார் பரிசாக வழங்கப்பட்டு உள்ளது என்பது பற்றிய முழுமையான விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சில முன்னணி கார்பரேட் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தின. கார்பரேட் நிறுவனம் மட்டுமின்றி சில நகைக் கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலதிபர்களும் தங்களிடம் பணியாற்றிய ஊழியர்களுக்கு கார், பைக் ஆகியவற்றை பரிசாக வழங்கினர். இந்த மாதிரியான ஓர் பரிசளிப்பு சம்பவமே தற்போது அரங்கேறியிருக்கின்றது.

பரிசு

ஆனால், இந்த நிகழ்வில் வீட்டு பணியாளருக்கே விலை உயர்ந்த கார் பரிசாக வழங்கப்பட்டிருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே இந்த பரிசளிப்பு நிகழ்வு பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. அதேவேலையில், இப்பரிசளிப்பு சம்பவம் இந்தியாவில் அரங்கேறியது அல்ல என்பதும் குறிப்பிடத்தகுந்தது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலேயே இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. பொதுவாக லாபம் ஈட்டி தரும் வகையில் உழைக்கும் தொழிலாளர்களுக்கே பெரும் நிறுவனங்களும், முதலாளிகளும் இதுவரை வாகனங்களை பரிசாக வழங்கியிருக்கின்றனர். ஆனால், இங்கோ வீட்டில் விசுவாசமாக பணியாற்றி வந்த பணியாளருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டிருக்கின்றது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டே கார் பரிசளிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. பொதுவாக இந்த விழா நாளில் அவருக்கு மிகவும் சாதாரணமான பரிசே கடந்த காலங்களில் வழங்கப்பட்டு வந்திருக்கின்றது. இந்த நிலையிலேயே இம்முறை அவரை கூடுதலாக மகிழ்விக்க வேண்டும் என எண்ணி இந்த கிறிஸ்துமஸுக்கு காரை பரிசாக வழங்கியிருக்கின்றனர். இந்த முடிவை தங்களின் பிள்ளைகளே எடுத்ததாக காரை பரிசாக வழங்கிய தொழிலதிபர் தெரிவித்துள்ளார். மேலும், கார் பரிசளிப்பு நிகழ்வை முழுவதுமாக காட்சிப்படுத்தியிருக்கின்றனர்.

அந்த வீடியோவையே தனது இன்ஸ்டா பக்கத்திலும் அவர்கள் பதிவிட்டுள்ளனர். ஸ்டெப் ஹால்மேன் (Stephanie Hollman) எனும் நபரே காரை பரிசாக வழங்கியவர் ஆவார். ஹூண்டாய் எலன்ட்ரா சொகுசு செடான் ரக காரே பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் மாடல் இப்போது இந்தியாவில் விற்பனையில் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. போதுமான வரவேற்புக் கிடைக்காத காரணத்தினால் இது இந்தியாவில் இருந்து அகற்றப்பட்டிருக்கின்றது. இங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தாலும் உலக சந்தையில் இந்த கார் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

எலன்ட்ரா எனும் பெயரில் இல்லாமல் அது வேறு பெயரில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஹூண்டாய் அவன்டே எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் காரே வீட்டு பணிப் பெண்ணுக்கு கார் பரிசாக வழஙக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் ஆரம்ப நிலை சொகுசு கார்களுக்கு இணையான வசதிகளுடன் இந்த கார் விற்கப்பட்டு வருகின்றது. இதுமட்டுமில்லைங்க, பன்முக சிறப்பு தொழில்நுட்ப வசதிகளும் இந்த காரில் வாரி வழங்கப்பட்டிருக்கின்றன.

பரிசு

அந்தவகையில், ஷார்ப்பான வெளிப்புற தோற்றம், எல்இடி டிஆர்எல்கள், ஹாலோஜன் புரஜெக்டர்கள், 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என பன்முக சிறப்புகளால் இந்த கார் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த 7 அங்குல திரையானது ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய பன்முக சிறப்பு வசதிகள் கொண்ட காரையே இந்தியாவில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் ஹூண்டாய் வெளியேற்றியது.

இதற்கு இக்காரின் அதிக விலையே காரணம் என கூறப்படுகின்றது. இந்தியாவில் ரூ. 16 லட்சத்திற்கும் அதிகமான விலையிலேயே இந்த கார் விற்கப்பட்டது. இதன் விளைவாகவே பலர் இந்த காரை தவிர்த்திருக்கின்றனர். இந்த நிலையே நாட்டில் இருந்து எலன்ட்ராவை வெளியேற்றியிருக்கின்றது. அதேவேலையில் இப்போதும் சில முன்னணி தொழிலதிபர்களின் பயன்பாட்டில் இந்த கார் இருப்பதை நம்மால் காண முடிகின்றது. இதற்கு சொகுசு கார்களுக்கு இணையான சிறப்பு வசதிகளை ஹூண்டாய் எலன்ட்ரா கொண்டிருப்பதே முக்கிய காரணம் ஆகும்.

ஹூண்டாய் நிறுவனம் அதன் அவென்டே கார் மாடலில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினையே பயன்படுத்தி உள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 124 எச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டாரில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய அதிக வசதிகள் கொண்ட சூப்பரான ஹூண்டாய் எலன்ட்ரா காரையே தன்னுடைய வீட்டு பணிப் பெண்ணிற்கு ஸ்டீபனி ஹால்மேன் பரிசாக வழங்கி இருக்கின்றார்.

More from DriveSpark

Article Published On: Saturday, December 17, 2022, 10:34 [IST]
English summary
Hyundai elantra gifted to house keeper
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+