கார்களின் விற்பனை கடுமையாக சரிவு... ஹூண்டாய் நிறுவனத்திற்கு இப்படி ஒரு மோசமான நிலைமையா?

இந்தியாவில் ஹூண்டாய் கார்களின் விற்பனை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார்களின் விற்பனை கடுமையாக சரிவு... ஹூண்டாய் நிறுவனத்திற்கு இப்படி ஒரு மோசமான நிலைமையா?

இந்தியாவில் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்த கார்களின் மாடல் வாரியான எண்ணிக்கை விபரங்கள் வெளியாகியுள்ளன. இதில், வெனியூ முதலிடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு பிப்ரவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார் என்ற பெருமையை பெற்றுள்ள வெனியூ, சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும்.

கார்களின் விற்பனை கடுமையாக சரிவு... ஹூண்டாய் நிறுவனத்திற்கு இப்படி ஒரு மோசமான நிலைமையா?

நடப்பாண்டு பிப்ரவரி மாதம் ஹூண்டாய் நிறுவனம் 10,212 வெனியூ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த எண்ணிக்கை 11,224 ஆக இருந்தது. இதன் காரணமாக ஹூண்டாய் வெனியூ காரின் விற்பனை 9.02 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. நடப்பாண்டு பிப்ரவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் கார்களின் பட்டியலில் கிரெட்டா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

கார்களின் விற்பனை கடுமையாக சரிவு... ஹூண்டாய் நிறுவனத்திற்கு இப்படி ஒரு மோசமான நிலைமையா?

இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 9,606 கிரெட்டா கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த எண்ணிக்கை 12,428 ஆக இருந்தது. இது 22.71 சதவீத வீழ்ச்சியாகும். ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன் போன்ற புதிய கார்களின் வருகை, ஹூண்டாய் கிரெட்டாவிற்கு போட்டியை அதிகரித்துள்ளது.

கார்களின் விற்பனை கடுமையாக சரிவு... ஹூண்டாய் நிறுவனத்திற்கு இப்படி ஒரு மோசமான நிலைமையா?

இந்த பட்டியலில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இது ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10,270 ஆக இருந்த ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 8,552 ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் விற்பனை 16.73 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

கார்களின் விற்பனை கடுமையாக சரிவு... ஹூண்டாய் நிறுவனத்திற்கு இப்படி ஒரு மோசமான நிலைமையா?

இந்த பட்டியலில் ஹூண்டாய் ஐ20 நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இது பிரீமியம் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9,001 ஆக இருந்த ஹூண்டாய் ஐ20 காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரி மாதம் வெறும் 5,830 ஆக குறைந்துள்ளது. இது 35.23 சதவீத வீழ்ச்சியாகும்.

கார்களின் விற்பனை கடுமையாக சரிவு... ஹூண்டாய் நிறுவனத்திற்கு இப்படி ஒரு மோசமான நிலைமையா?

இந்த செக்மெண்ட்டில் டாடா அல்ட்ராஸ் கார் ஏற்கனவே ஹூண்டாய் ஐ20 காருக்கு வலுவான போட்டியாளராக இருந்து வருகிறது. இந்த சூழலில் டாடா அல்ட்ராஸ் காரின் ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் மாடல் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் காரணமாக வரும் மாதங்களில் ஹூண்டாய் ஐ20 காருக்கு போட்டி கடுமையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்களின் விற்பனை கடுமையாக சரிவு... ஹூண்டாய் நிறுவனத்திற்கு இப்படி ஒரு மோசமான நிலைமையா?

இந்த பட்டியலில் ஹூண்டாய் அவ்ரா ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. இது செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4,300 ஆக இருந்த அவ்ரா காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 3,668 ஆக குறைந்துள்ளது. இது 14.70 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் ஆறாவது இடத்தை ஹூண்டாய் அல்கஸார் பிடித்துள்ளது.

கார்களின் விற்பனை கடுமையாக சரிவு... ஹூண்டாய் நிறுவனத்திற்கு இப்படி ஒரு மோசமான நிலைமையா?

நடப்பாண்டு பிப்ரவரி மாதம் ஹூண்டாய் நிறுவனம் 2,516 அல்கஸார் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த கார் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையை கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிட முடியாது. ஹூண்டாய் அல்கஸார் காருக்கு சமீப காலமாக மஹிந்திரா எக்ஸ்யூவி700 கடுமையான போட்டியை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்களின் விற்பனை கடுமையாக சரிவு... ஹூண்டாய் நிறுவனத்திற்கு இப்படி ஒரு மோசமான நிலைமையா?

இந்த பட்டியலில் ஏழாவது இடத்தை ஹூண்டாய் சாண்ட்ரோ பிடித்துள்ளது. அறிமுகமே தேவையில்லை என்னும் அளவிற்கு இது மிகவும் பிரபலமான கார் ஆகும். கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2,128 ஆக இருந்த சாண்ட்ரோ காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 2,393 ஆக உயர்ந்துள்ளது. இது 12.45 சதவீத வளர்ச்சியாகும்.

கார்களின் விற்பனை கடுமையாக சரிவு... ஹூண்டாய் நிறுவனத்திற்கு இப்படி ஒரு மோசமான நிலைமையா?

நடப்பாண்டு பிப்ரவரி மாதம் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்த ஒரு சில ஹூண்டாய் கார்களில் சாண்ட்ரோவும் ஒன்று. இந்த பட்டியலில் எட்டாவது இடத்தை ஹூண்டாய் வெர்னா பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2,047 ஆக இருந்த வெர்னா காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 1,058 ஆக குறைந்துள்ளது. இது 48.31 சதவீத வீழ்ச்சியாகும்.

கார்களின் விற்பனை கடுமையாக சரிவு... ஹூண்டாய் நிறுவனத்திற்கு இப்படி ஒரு மோசமான நிலைமையா?

இந்த பட்டியலில் ஹூண்டாய் டூஸான் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 152 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 172 ஆக உயர்ந்துள்ளது. இது 13.16 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் ஹூண்டாய் கோனா பத்தாவது இடத்தை பிடித்துள்ளது. இது எலெக்ட்ரிக் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

கார்களின் விற்பனை கடுமையாக சரிவு... ஹூண்டாய் நிறுவனத்திற்கு இப்படி ஒரு மோசமான நிலைமையா?

கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெறும் 10 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 43 ஆக உயர்ந்துள்ளது. இது 330 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் 11வது மற்றும் கடைசி இடத்தை ஹூண்டாய் எலாண்ட்ரா பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 40 ஆக இருந்தது. ஆனால் நடப்பாண்டு பிப்ரவரியில் ஒரு எலாண்ட்ரா காரை கூட ஹூண்டாய் விற்பனை செய்யவில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 23, 2022, 23:58 [IST]
English summary
Hyundai february 2022 model wise sales venue compact suv leads chart
மேலும்... #ஹூண்டாய் #hyundai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+