வீட்டுக்கு பதிலா இதுலயே குடி இருந்துக்கலாம்... குறைவான விலையில் வரும் ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5). இது எலெக்ட்ரிக் கார் ஆகும். இன்னும் சில வாரங்களில், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதற்கு முன்னதாக இந்த காரின் இன்டீரியர் எப்படி இருக்கும்? என்பதை ஹூண்டாய் நிறுவனம் புகைப்படங்கள் மூலம் நமக்கு தெரியப்படுத்தியுள்ளது. இதன்படி இந்த காரின் முன் பகுதியில் எலெக்ட்ரிக் முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ஸ்லைடிங் சென்டர் கன்சோலையும் ஹூண்டாய் ஐயோனிக் 5 கார் பெற்றுள்ளது. அதே சமயம் இந்த காரில் உட்புறத்தில் வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில் ட்யூயல் டோன் இன்டீரியம் தீம் கொடுக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்கு பதிலா இதுலயே குடி இருந்துக்கலாம்... குறைவான விலையில் வரும் ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்!

மேலும் 2 ஸ்போக் மல்டி ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல், க்ரோம் அலங்கார வேலைப்பாடுகள், மூட் லைட்டிங், பனரோமிக் சன்ரூஃப் ஆகிய அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த காரின் டேஷ்போர்டில், பெரிய திரை ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதி டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும், மற்றொரு பகுதி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் ஆகவும் செயல்படும். இதுபோன்ற வடிவமைப்பு தற்போது பல்வேறு கார்களிலும் வேகமாக பிரபலமடைந்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இதுகுறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான வுன்சூ கிம் கூறுகையில், ''இது வெறும் போக்குவரத்திற்கான காராக மட்டும் இருக்காது. வீட்டிற்கு வெளியே ஒரு வீட்டை போன்று இந்த கார் வாடிக்கையாளர்களுக்கு இருக்கும். இந்த காரில் உட்புறத்தில் தாராளமான இடவசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறை மேம்படும். ஹூண்டாய் ஐயோனிக் 5 கார், வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதிகள், சௌகரியம், சிறப்பான அனுபவம் ஆகியவற்றை வழங்கும்'' என்றார்.

ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரானது, இ-ஜிஎம்பி (E-GMP) பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. Electric Global Modular Platform என்பதன் சுருக்கம்தான் E-GMP. இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் உள்ள கியா இவி6 (Kia EV6) எலெக்ட்ரிக் காரும் இதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்திய சந்தையில் கியா இவி6 எலெக்ட்ரிக் கார்தான், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காருக்கு முக்கியமான போட்டியாளர் ஆகும்.

ஆனால் கியா இவி6 எலெக்ட்ரிக் காருடன் ஒப்பிடும்போது, ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் முக்கியமான சிறப்பம்சம் ஆகும். இதன் காரணமாக கியா இவி6 எலெக்ட்ரிக் காருக்கு, ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இதற்கிடையே ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காருக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் வரும் டிசம்பர் 20ம் தேதியில் இருந்து தொடங்குகின்றன. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் உள்ளதால், புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகள் குவிவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இது இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள 2வது எலெக்ட்ரிக் கார் ஆகும்.

முன்னதாக ஹூண்டாய் கோனா (Hyundai Kona) என்ற எலெக்ட்ரிக் காரை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இது எலெக்ட்ரிக் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் (MG ZS EV) மற்றும் டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் (Tata Nexon EV Max) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுடன் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் போட்டியிட்டு வருகிறது. வரும் காலங்களில் ஹூண்டாய் நிறுவனத்திடம் இருந்து இன்னும் பல்வேறு எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 13, 2022, 11:55 [IST]
English summary
Hyundai ioniq 5 electric car interiors officially revealed
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+