இந்த எலெக்ட்ரிக் காருக்காகதான் இந்தியாவே தவம் கிடந்துச்சு! ஒரு முறை சார்ஜ் செய்தாலே 630 கிலோ மீட்டர் ஓடும்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5). இப்போது வரும், அப்போது வரும் என மிக நீண்ட காலமாக வாடிக்கையாளர்களின் ஆவலை இந்த எலெக்ட்ரிக் கார் தூண்டி கொண்டிருந்தது.

ஒரு வழியாக தற்போது இந்த எலெக்ட்ரிக் காரை ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வந்துள்ளது. எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) செக்மெண்ட்டில், இந்த கார் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஹூண்டாய் ஐயோனிக் 5 இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டிருப்பதுடன், இந்த எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகளும் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 1 லட்ச ரூபாயை முன்பணமாக செலுத்தி, ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த எலெக்ட்ரிக் காருக்காகதான் இந்தியாவே தவம் கிடந்துச்சு! ஒரு முறை சார்ஜ் செய்தாலே 630 கிலோ மீட்டர் ஓடும்!

இது இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இரண்டாவது எலெக்ட்ரிக் கார் ஆகும். முன்னதாக கோனா எலெக்ட்ரிக் காரை ஹூண்டாய் (Hyundai Kona) நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. தற்போது பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ள ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரானது, கியா இவி6 (Kia EV6) எலெக்ட்ரிக் கார் போன்ற மாடல்களுடன் நேருக்கு நேராக போட்டியிடும்.

ஆனால் கியா இவி6 எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே E-GMP (Electric - Global Modular Platform) பிளாட்பார்ம் அடிப்படையில்தான் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தைக்கான ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில், 72.6 kWh பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 631 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அராய் அமைப்பு சான்று வழங்கிய ரேஞ்ச் (Range) ஆகும்.

350 kW DC சார்ஜரை பயன்படுத்தினால், இந்த பேட்டரியை வெறும் 18 நிமிடங்களில், 10ல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில், லெவல் 2 அடாஸ் (Level 2 ADAS) போன்ற பல்வேறு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ஹூண்டாய் கார்களுக்கே உரித்தான வகையில், இன்னும் பல்வேறு வசதிகளையும் (Features) ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது.

இதில், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, கனெக்டட் கார் தொழில்நுட்பம், போஸ் சவுண்ட் சிஸ்டம், வெண்டிலேட்டட் இருக்கைகள், ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் லெதர் சீட் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் டேஷ்போர்டில், சாஃப்ட் டச் மெட்டீரியல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் இந்த எலெக்ட்ரிக் காரில், பாதுகாப்பு வசதிகளுக்கும் பஞ்சமில்லை. 6 ஏர் பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், இன்ஜின் பார்க்கிங் பிரேக், நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில் ஹூண்டாய் நிறுவனம் வழங்கியுள்ளது. ஆனால் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள 2023 ஆட்டோ எக்ஸ்போவில்தான் (2023 Auto Expo) விலைகள் அறிவிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த பொங்கல் டபுள் டமாக்காதான்!

ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படவுள்ளதால், ஓரளவிற்கு குறைவான விலையில் எதிர்பார்க்க முடியும். குறிப்பாக கியா இவி6 எலெக்ட்ரிக் காருடன் ஒப்பிடும்போது, இதன் விலை மிகவும் குறைவாக இருக்கலாம். இதற்கிடையே ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் பூட் ஸ்பேஸ் 571 லிட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. க்ராவிட்டி கோல்டு மேட், ஆப்டிக் ஒயிட் மற்றும் மிட்நைட் பிளாக் பேர்ல் என 3 கலர் ஆப்ஷன்களில் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 20, 2022, 23:09 [IST]
English summary
Hyundai ioniq 5 electric car unveiled in india booking launch details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+