இந்த கார் சேல்ஸ்க்கு வந்துருச்சுன்னு சொன்னதும் பணத்தை அள்ளி எடுத்துட்டு ஷோரூமில் குவிந்த மக்கள்!

ஹூண்டாய் நிறுவனத்தின் ஐயானிக் 6 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட 24 மணி நேரத்திலேயே விற்றுத் தீர்ந்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் சர்வதேச பிராண்டில் ஐயானிக் என்ற எலெக்ட்ரிக் காரை விற்பனை செய்து வருகிறது. இந்த கார் தன் ஏரோ டைமனகமிக்கிற்காக புகழ்பெற்றது. இந்நிலையில் ஐயானிக் 5 காருக்கு அடுத்த தலைமுறையாக ஐயானிக் 6 காரை ஹூண்டாய் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது.

இந்த கார் சேல்ஸ்க்கு வந்துருச்சுன்னு சொன்னதும் பணத்தை அள்ளி எடுத்துட்டு ஷோரூமில் குவிந்த மக்கள்!

ஏற்கனவே ஹூண்டாயில் ஐயானிக் கார் மிகவும் புகழ்பெற்றது. இந்த கார் அமெரிக்காவில் டெஸ்லா, ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ்க்கு பிறகு அதிகமாக கார்கள் விற்பனையாகியுள்ளது. பலர் இந்த காரின் உள்ள அம்சங்கள் மற்றும் டிசைனிற்காகவே இந்த காரை விரும்பினர். ஐயானிக் 6 கார் ஹூண்டாயின் இஜிஎம்பி பிளாட்ஃபார்மில் 800 வி ஆர்க்கிடெக்ஷரில் உருவாக்கப்பட்டது.

ஐயானிக் 6 காரை பார்க்கும் போதே இது ஹூண்டாய் டிடி மற்றும் போர்ஷே 911 ஆகிய கார்களின் பின்பகுதியை ஒத்து இருப்பது போல டிசைன் செய்யப்பட்டுள்ளது. மற்ற எல்லாவற்றைம் விட இந்த காரின் ரேஞ்ச் தான் மிகவும் முக்கிய அம்சமாகும். இந்த கார் முழு சார்ஜில் WLTP ஸ்டாண்டர்ட்க்கு 610 கி.மீ பயணிக்கும் திறன் கொண்டது. இந்த காரில் 77.4 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்டது.

இந்த கார் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் ஜெர்மனி, நார்வே, பிரான்ஸ், லண்டன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் விற்பனை 24 மணி நேரத்திற்குள்ளாகவே முடிந்துவிட்டது. அதாவது. இந்த கார்களை போட்டிபோட்டு மக்கள் புக் செய்த செய்த நிலையில் போதுமான புக்கிங்கள் வந்துவிட்டதால் அந்நிறுவனம் இந்த காருக்கான புக்கிங்கை நிறுத்திவிட்டது. இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்ட போதே மக்கள் இந்த கார் மீது பெரும் ஆர்வம் கொண்டு புக் செய்ய முடிவு செய்திருந்தனர்.

இந்த காரின் பேட்டரியை பொருத்தவரை அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யக்கூடியது. இது 350 கிலோ வாட் டிசி சார்ஜர் மூலம் 18 நிமிடத்தில் 80 சதவீத பேட்டரியை சார்ஜ் செய்துவிடும். இது அதிகபட்சமாக மணிக்கு 185 கி.மீ வேகத்தில் செல்லம் திறன் கொண்ட காராகும். இந்த காரில் மொத்தம் 5 லிங்க் ரியர் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கார் குறித்து ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகாரிகள் கூறும் போது "ஐயானிக் 6 முதல் எடிசன் காரின் மக்கள் மீது அதிக ஆர்வமும், இந்த காருக்கான அதிக டிமாண்டும் ஏற்பட முக்கியமான காரணம், இந்த காரின் எரோடைனமிக் முறையில் வடிவமைக்கப்பட்ட வடிவம், மற்றும் நீண்ட ரேஞ்ச் தான். மேலும் இந்த காரின் உட்புற கட்டமைப்பு எல்லாம் மேம்படுத்தியுள்ளோம். " எனக் கூறினார்.

Most Read Articles
English summary
Hyundai ioniq 6 cars sold out in 24 hours
Story first published: Saturday, November 19, 2022, 11:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X