இளசுகளை சுற்றி வளைக்க திட்டம்.. கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலில் புதிய சிறப்பு பதிப்பு அறிமுகம்! இதோட விலை எவ்வளவு?

ஹூண்டாய் நிறுவனம் அதன் கிராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios) கார் மாடலில் சிறப்பு பதிப்பு ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இளசுகளை சுற்றி வளைக்க திட்டம்... கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலில் புதிய சிறப்பு பதிப்பு அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios) கார் மாடலில் புதிய கார்பரேட் எடிசன் (Corporate Edition) எனும் தேர்வை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இது ஓர் சிறப்பு பதிப்பாகும். மேக்மா ட்ரிம் (Magma trim)மை அடிப்படையாகக் கொண்டே இந்த சிறப்பு பதிப்பை நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.

இளசுகளை சுற்றி வளைக்க திட்டம்... கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலில் புதிய சிறப்பு பதிப்பு அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

ஆனால், சிறப்பு வசதியில் மேக்மா ட்ரிம்மையே புதிய கார்பரேட் பதிப்பு தோற்கடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தளவிற்கு கூடுதல் சிறப்பு வசதிகளால் கார்பரேட் பதிப்பு நிரப்பப்பட்டுள்ளது. இதனால் அதன் விலை மேக்மா ட்ரிம்மைக் காட்டிலும் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை அதிக விலைக் கொண்டதாக விற்பனைக்கு வந்துள்ளது.

இளசுகளை சுற்றி வளைக்க திட்டம்... கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலில் புதிய சிறப்பு பதிப்பு அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் கார்பரேட் எடிசனில் 15 அங்குல வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை கூடுதலாக அலங்கரிக்கும் விதமாக பிரத்யேக கன் மெட்டல் ஸ்டைலிலான வீல்கள் கவர்களைக் கொண்டு அது மூடப்பட்டுள்ளது. இது தவிர, சில்வர் நிற ரூஃப் ரெயில், கருப்பு நிற ஓஆர்விஎம்-கள், முன் பக்கத்தில் கருப்பு நிற க்ரில், பூட் லிட் பகுதியில் குரோம் கார்னிஷ் மற்றும் கார்பரேட் என்கிற எம்பளம் உள்ளிட்டவை சிறப்பு அலங்காரப் பொருட்களாக கூடுதலாக சேர்கப்பட்டுள்ளன.

இளசுகளை சுற்றி வளைக்க திட்டம்... கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலில் புதிய சிறப்பு பதிப்பு அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இவற்றுடன், ஸ்மார்ட் போன் மிர்ரரிங் வசதிக் கொண்ட 6.75 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் அக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த வசதி பிற கிராண்ட் ஐ10 நியாஸில் இடம் பெறாது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், எலெக்ட்ரிக்கலி ஃபோல்டபிள் வசதிக் கொண்ட ஓஆர்விஎம் எல்இடி டர்ன் இன்டிகேட்டர்களுடனும் வழங்கப்பட்டுள்ளது.

இளசுகளை சுற்றி வளைக்க திட்டம்... கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலில் புதிய சிறப்பு பதிப்பு அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

தொடர்ந்து, காரின் கேபின் பகுதி முழுக்க முழுக்க கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. கூடுதல் நிற சேர்ப்பாக சிவப்பு நிற இன்செர்டுகள் காரின் இருக்கைகள் போன்ற சில முக்கிய பகுதிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிற இன்செர்டுகள் ஏசி மற்றும் கியர் லிவர் பகுதிகளிலும் வழங்கப்பட்டிருக்கின்றது.

இளசுகளை சுற்றி வளைக்க திட்டம்... கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலில் புதிய சிறப்பு பதிப்பு அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இவையே வழக்கமான கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் தற்போது புதிதாக விற்பனைக்கு வந்திருக்கும் கிராண்ட் ஐ10 நியோஸ் கார்பரேட் எடிசன் ஆகிய இரண்டிற்கும் இடையில் உள்ள வித்தியாசங்களாக தென்படுகின்றன. மேற்படி எந்தவொரு மாற்றத்தையும் கார்பரேட் எடிசனில் ஹூண்டாய் வழங்கவில்லை.

இளசுகளை சுற்றி வளைக்க திட்டம்... கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலில் புதிய சிறப்பு பதிப்பு அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இக்காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் தற்போது பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 82 பிஎச்பி மற்றும் 114 என்எம் டார்க்கை வழங்கும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி ஆகிய டிரான்ஸ்மிஷன் தேர்வுகளும் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன.

இளசுகளை சுற்றி வளைக்க திட்டம்... கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலில் புதிய சிறப்பு பதிப்பு அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் கார்பரேட் எடிசன் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட தேர்விற்கு ரூ. 6,28,900 விலையும், தானியங்கி கியர்பாக்ஸ் தேர்விற்கு ரூ. 6,97,700 விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். நிறுவனம் சமீபத்தில்தான் இக்கார் மாடலின் டீசல் எஞ்ஜின் கொண்ட வேரியண்டுகளை விற்பனையில் இருந்து அகற்றியது.

இளசுகளை சுற்றி வளைக்க திட்டம்... கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலில் புதிய சிறப்பு பதிப்பு அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இந்த நிலையில் கூடுதல் தேர்வை வழங்கும் விதமாக கிராண்ட் ஐ10 நியோஸ் கார் மாடலில் சிறப்பு பதிப்பை ஹூண்டாய் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இது இக்கார் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக, இக்காரை அதிகம் விரும்புவோர்களுக்கு ட்ரீட் வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

இளசுகளை சுற்றி வளைக்க திட்டம்... கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலில் புதிய சிறப்பு பதிப்பு அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

கிராண்ட் ஐ10 நியோஸ் கார்பரேட் எடிஷனின் அறிமுகம் குறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர், தருண் கர்க் கூறியதாவது, "இந்தியாவில் உள்ள முற்போக்கான மற்றும் இளம் வயது வாடிக்கையாளர்களுக்காக ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸை உருவாக்கியுள்ளது. அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து தற்போது வரை அமோகமான விற்பனையை அது கண்டு வருகின்றது.

இளசுகளை சுற்றி வளைக்க திட்டம்... கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலில் புதிய சிறப்பு பதிப்பு அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இதனை கூடுதலாக்கும் வகையிலேயே ஸ்போர்ட்டி மற்றும் ஹைடெக் வசதிகள் கொண்ட கார்ப்பரேட் பதிப்பு கிராண்ட் ஐ10 நியோஸ் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றது. இதை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். தனித்துவமான மற்றும் புதுமையான அழகியல் மேம்பாடுகள் மற்றும் தொழில்நுட்பத்துடன், கார்ப்பரேட் பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களை அதிகளவில் ஈர்க்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்" என்றார்.

Most Read Articles
English summary
Hyundai launched grand i10 nios corporate edition in india at inr 6 29 lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X