அதிக வசதிகளுடன் அவுராவில் 2வது சிஎன்ஜி தேர்வை கொண்டு வந்தது ஹூண்டாய்... டாடா டிகோர் சிஎன்ஜி-க்கு ஆப்பு தயார்!

சிஎன்ஜி வாகனங்களுக்கு டிமாண்ட் அதிகம் நிலவுவதனால் இந்த பிரிவை அதகளப்படுத்தும் வகையில் அவுரா (Aura) -வில் இரண்டாவது சிஎன்ஜி (CNG) தேர்வை ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இப்புதிய தேர்வு அதிக சிறப்பு வசதிகள் தாங்கிய சிஎன்ஜி வாகனமாக விற்பனைக்கு வந்நதிருக்கின்றது. அவை என்ன?, காரின் விலை எவ்வளவு?, என்பது போன்ற முக்கிய விபரங்களைக் கீழே உள்ள பதிவில் வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

அதிக வசதிகளுடன் அவுராவில் 2வது சிஎன்ஜி தேர்வை கொண்டு வந்தது ஹூண்டாய்... டாடா டிகோர் சிஎன்ஜி-க்கு ஆப்பு வைக்க தயார்!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் அவுரா (Aura)-வும் ஒன்று. இது ஓர் செடான் ரக காராகும். இந்த கார் மாடலிலேயே புதிதாக ஓர் சிஎன்ஜி தேர்வை ஹூண்டாய் நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்திருக்கின்றது. ஏற்கனவே இந்த கார் மாடலில் ஓர் சிஎன்ஜி தேர்வு வழங்கப்பட்டு வரும்நிலையில் இரண்டாவது ஓர் புதிய சிஎன்ஜி ஆப்ஷனை கூடுதலாக ஹூண்டாய் அவுரா மாடலில் சேர்த்துள்ளது.

அதிக வசதிகளுடன் அவுராவில் 2வது சிஎன்ஜி தேர்வை கொண்டு வந்தது ஹூண்டாய்... டாடா டிகோர் சிஎன்ஜி-க்கு ஆப்பு வைக்க தயார்!

புதிய சிஎன்ஜி தேர்வு எஸ்எக்ஸ் சிஎன்ஜி (Aura SX CNG) என்ற பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும். இது ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எஸ் சிஎன்ஜி உடன் சேர்ந்து இனி சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும். எஸ்எக்ஸ் சின்ஜி-க்கு அறிமுக விலையாக ரூ. 8,56,600 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

அதிக வசதிகளுடன் அவுராவில் 2வது சிஎன்ஜி தேர்வை கொண்டு வந்தது ஹூண்டாய்... டாடா டிகோர் சிஎன்ஜி-க்கு ஆப்பு வைக்க தயார்!

அதேநேரத்தில் எஸ் சிஎன்ஜி ரூ. 7,87,600 க்கு விற்கப்படுகின்றது. இதைவிட சற்று அதிக விலையில் புதிய எஸ்எக்ஸ் சிஎன்ஜி-க்கு விற்பனைக்கு வந்திருப்பதை நம்மால் தெளிவாக பார்க்க முடிகின்றது. இதன் அதிக விலைக்கு, அதிக சிறப்பு வசதிகளை அக்கார் பெற்றிருப்பதே முக்கிய காரணமாக உள்ளது.

அதிக வசதிகளுடன் அவுராவில் 2வது சிஎன்ஜி தேர்வை கொண்டு வந்தது ஹூண்டாய்... டாடா டிகோர் சிஎன்ஜி-க்கு ஆப்பு வைக்க தயார்!

ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா, 15 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், குரோம் பூச்சுக் கொண்ட டூர் கை-பிடிகள், சுறாவின் துடுப்பு போன்ற அமைப்புடைய ஆன்டென்னா உள்ளிட்ட அம்சங்களும் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர, ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் குரல் கட்டளை வசதிக் கொண்ட தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் இக்காரில் கொடுக்கப்பட்டுள்ளது.

அதிக வசதிகளுடன் அவுராவில் 2வது சிஎன்ஜி தேர்வை கொண்டு வந்தது ஹூண்டாய்... டாடா டிகோர் சிஎன்ஜி-க்கு ஆப்பு வைக்க தயார்!

இத்துடன், கூடுதல் சிறப்பு வசதியாக ஸ்மார்ட் கீ, புஷ் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் பட்டன் ஆகியவையும் அவுரா எஸ்எக்ஸ் சிஎன்ஜி வேரியண்டில் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டாரே சிஎன்ஜியால் இயங்குவதற்கு ட்யூன்-அப் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதிக வசதிகளுடன் அவுராவில் 2வது சிஎன்ஜி தேர்வை கொண்டு வந்தது ஹூண்டாய்... டாடா டிகோர் சிஎன்ஜி-க்கு ஆப்பு வைக்க தயார்!

இந்த மோட்டார் அதிகபட்சமாக 68 பிஎச்பி மற்றும் 95 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த வாகனம் ஏற்கனவே விற்பனையில் உள்ள சிஎன்ஜி கார்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வந்திருக்கின்றது. குறிப்பாக, டாடா டிகோர் சிஎன்ஜி எக்ஸ்இசட் பிளஸ்-க்கு போட்டியாக விற்பனைக்குக் களமிறங்கியிருக்கின்றது.

அதிக வசதிகளுடன் அவுராவில் 2வது சிஎன்ஜி தேர்வை கொண்டு வந்தது ஹூண்டாய்... டாடா டிகோர் சிஎன்ஜி-க்கு ஆப்பு வைக்க தயார்!

தற்போது இந்தியாவில் சிஎன்ஜி வாகனங்களுக்கு மிக சூப்பரான டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. பெட்ரோல், டீசல் வாகனங்களைக் காட்டிலும் அதிக லாபம்மிக்க வாகனங்களாக இவை அறியப்படுகின்றதால், மக்கள் இந்த வாகனங்களுக்கு பேராதரவை வழங்க ஆரம்பித்திருக்கின்றனர்.

அதிக வசதிகளுடன் அவுராவில் 2வது சிஎன்ஜி தேர்வை கொண்டு வந்தது ஹூண்டாய்... டாடா டிகோர் சிஎன்ஜி-க்கு ஆப்பு வைக்க தயார்!

காற்றை மாசுபாடு விஷயத்திலும் இந்த வாகனம் மிக சிறப்பாக செயல்படுகின்றன. அதாவது, பெட்ரோல், டீசல் வாகனங்களைக் காட்டிலும் மிக மிக குறைவான மாசையே அவை வெளிப்படுத்துகின்றன. இதன் காரணத்தினால்தான் அரசும் சிஎன்ஜி வாகன விற்பனையை ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றது.

அதிக வசதிகளுடன் அவுராவில் 2வது சிஎன்ஜி தேர்வை கொண்டு வந்தது ஹூண்டாய்... டாடா டிகோர் சிஎன்ஜி-க்கு ஆப்பு வைக்க தயார்!

ஹூண்டாய் அவுரா ஒட்டுமொத்தமாக 11 விதமான தேர்வுகளில் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. பெட்ரோல், டீசல் மற்றும் சின்ஜி ஆகிய மோட்டார் தேர்வுகளிலும் அக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 1.0 லிட்டர் டர்போ ஜிடிஐ பெட்ரோல், 1.2 லிட்டர் விடிவிடி பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் யு2 டிஆர்டிஐ டீசல் ஆகிய மோட்டார் தேர்வுகளே அவுராவில் வழங்கப்படுகின்றன. இந்த காரின் ஆரம்ப விலை ரூ. 6,08,900 ஆகும். இதன் உச்ச நிலை வேரியண்ட் ரூ. 8,87,000-க்கு விற்கப்படுகின்றது. அனைத்தும் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

Most Read Articles

English summary
Hyundai launched new aura sx cng variant in india at rs 8 57 lakh
Story first published: Wednesday, June 22, 2022, 18:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X