ஹூண்டாய் அல்கஸார் காரில் புதிய மலிவு விலை தேர்வு அறிமுகம்! பெட்ரோல்-டீசல், 6&7 சீட்டர் தேர்வுகளில் கிடைக்கும்!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் அதன் அல்கஸார் (Alcazar) எஸ்யூவி கார் மாடலில் புதிதாக மலிவு விலை தேர்வு ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இந்த தேர்வின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய முழு விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

அல்கஸார் காரில் புதிய மலிவு விலை தேர்வை அறிமுகம் செய்த ஹூண்டாய்... பெட்ரோல்-டீசல், 6&7 சீட்டர் தேர்வுகளில் கிடைக்கும்!

ஹூண்டாய் நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் மிக முக்கியமான கார் மாடல்களில் அல்கஸாரும் ஒன்று. இது ஓர் பெரிய உருவம் கொண்ட எஸ்யூவி ரக காராகும். பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற வாகனமாக அது சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆறு மற்றும் ஏழு என இருவிதமான இருக்கைத் தேர்வுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

அல்கஸார் காரில் புதிய மலிவு விலை தேர்வை அறிமுகம் செய்த ஹூண்டாய்... பெட்ரோல்-டீசல், 6&7 சீட்டர் தேர்வுகளில் கிடைக்கும்!

இந்த கார் மாடலிலேயே ஹூண்டாய் நிறுவனம் புதிய மலிவு விலை தேர்வை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. முன்னதாக இக்கார் மாடலில் ஆரம்ப நிலை வேரியண்டாக ஏழு இருக்கை தேர்வுக் கொண்ட பிரெஸ்டீஜ் இருந்தது. இதைவிட குறைவான விலையிலேயே புதிய பிரெஸ்டீஜ் எக்ஸிகியூட்டீவ் எனும் தேர்வு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அல்கஸார் காரில் புதிய மலிவு விலை தேர்வை அறிமுகம் செய்த ஹூண்டாய்... பெட்ரோல்-டீசல், 6&7 சீட்டர் தேர்வுகளில் கிடைக்கும்!

புதிய தேர்விற்கு அறிமுக விலையாக ரூ. 15.89 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இது ஓர் பேஸ் வேரியண்ட் என்பதால் உயர்நிலை தேர்வுகளைக் காட்டிலும் சற்று குறைவான சிறப்பம்சங்களையே அது கொண்டிருக்கின்றது. அதேவேலையில், எல்இடி ஹெட்லேம்புகள், ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட அம்சங்களை அது பெற்றிருக்கின்றது.

அல்கஸார் காரில் புதிய மலிவு விலை தேர்வை அறிமுகம் செய்த ஹூண்டாய்... பெட்ரோல்-டீசல், 6&7 சீட்டர் தேர்வுகளில் கிடைக்கும்!

இன்னும் சில சிறப்பு கூறுகளையும் அது தாங்கியிருக்கின்றது. அந்தவகையில், புதிய பிரெஸ்டீஜ் எக்ஸிகியூட்டீவ் வேரியண்டில் 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், குரல் கட்டளை அம்சம், 4 ஸ்பீக்கர்கள் - இரு ட்வீட்டர்கள் மற்றும் மேனுவலாக கன்ட்ரோல் செய்யும் சைடு மிர்ரர் போன்ற அம்சங்கள் புதிய தேர்வில் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், 10.25 அங்குல தொடுதிரையே அல்கஸாரின் பிற வேரியண்டுகளில் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

அல்கஸார் காரில் புதிய மலிவு விலை தேர்வை அறிமுகம் செய்த ஹூண்டாய்... பெட்ரோல்-டீசல், 6&7 சீட்டர் தேர்வுகளில் கிடைக்கும்!

ஹூண்டாய் நிறுவனம் குறைவான விலையின் வாயிலாக மக்களைக் கவரும் பொருட்டே இந்த பேஸ் வேரியண்ட் அல்கஸார் காரை இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. நிறுவனம் இந்த காரை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கு மற்றொரு காரணமும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் நிறுவனம் செமி கன்டக்டர் பற்றாக்குறை காரணமாக ஒரே ஒரு ஸ்மார்ட் கீ-யை மட்டுமே அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது.

அல்கஸார் காரில் புதிய மலிவு விலை தேர்வை அறிமுகம் செய்த ஹூண்டாய்... பெட்ரோல்-டீசல், 6&7 சீட்டர் தேர்வுகளில் கிடைக்கும்!

மற்றொரு சாவியை விரைவில் வழங்குவதாக தெரிவித்தது. நிறுவனத்தின் இந்த நிலைக்கு சிப்-கள் பற்றாக்குறை காரணமாகும். உலகளவில் செமி கன்டக்டர் பற்றாக்குறை தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றது. ஆகையால், போதியளவு சிப்கள் கிடைக்காத காரணத்தினால், அதிக தொழில்நுட்ப வசதிகள் கொண்ட வாகனங்களை உற்பத்தி செய்வதில் நிறுவனம் பெருத்த சிக்கலைச் சந்தித்து வருகின்றது.

அல்கஸார் காரில் புதிய மலிவு விலை தேர்வை அறிமுகம் செய்த ஹூண்டாய்... பெட்ரோல்-டீசல், 6&7 சீட்டர் தேர்வுகளில் கிடைக்கும்!

இந்த நிலையாலயே நிறுவனம் ஒற்றை சாவியை வழங்கியது. மேலும், நிறுவனத்தின் கார்களுக்கான காத்திருப்பு காலம் சற்றே அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த காரணத்திற்காகவே அடிப்படை வசதிகள் குறைவாகக் கொண்ட பிரெஸ்டீஜ் எக்ஸிகியூட்டீவ் தேர்வை அல்கஸாரில் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கின்றது. அல்கஸார் ஒட்டுமொத்தமாக ஆறு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது.

அல்கஸார் காரில் புதிய மலிவு விலை தேர்வை அறிமுகம் செய்த ஹூண்டாய்... பெட்ரோல்-டீசல், 6&7 சீட்டர் தேர்வுகளில் கிடைக்கும்!

பிரெஸ்டீஜ், பிரெஸ்டீஜ் (ஓ), பிளாட்டினம், பிளாட்டினம் (ஓ), சிக்னேச்சர் மற்றும் சிக்னேச்சர் (ஓ) ஆகியவையே அவை ஆகும். இவற்றிலேயே 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் இருக்கைகள் தேர்வு, பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜின் தேர்வு, மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு உள்ளிட்டவைகளுடன் பிரெஸ்டீஜ் எக்ஸிகியூட்டிவ் வேரியண்ட் கூடுதலாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அல்கஸார் காரில் புதிய மலிவு விலை தேர்வை அறிமுகம் செய்த ஹூண்டாய்... பெட்ரோல்-டீசல், 6&7 சீட்டர் தேர்வுகளில் கிடைக்கும்!

2.0 லிட்டர் எம்பிஐ 4 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போசார்ஜட் சிஆர்டிஐ டீசல், இவ்விரு மோட்டார் தேர்வுகளே பிரெஸ்டீஜ் எக்ஸிகியூட்டிவ் வேரியண்டில் வழங்கப்படுகின்றது. இதில், பெட்ரோல் மோட்டார் 159 பிஎஸ் மற்றும் 191 என்எம் டார்க்கையும், டீசல் மோட்டார் 115 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டவை ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 6, 2022, 17:38 [IST]
English summary
Hyundai launched new prestige executive varient in alcazar model
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+