மிஸ்டர் பீனை பார்த்து காப்பியடித்து உருவாக்கப்பட்ட கார்... இதுல 1 கிமீ பயணிக்க ஒரு ரூபா மட்டுமே செலவாகும்!

மிஸ்டர் பீனால் ஈர்க்கப்பட்டு ஓர் இந்தியர் தனது ஹூண்டாய் சேன்ட்ரோ காரை எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்கும் வகையில் வடிவமைத்துள்ளார். இந்த பிரத்யேக கார் மாடல் பற்றிய கூடுதல் முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

மிஸ்டர் பீன் எனும் நாடக தொடரை பார்க்காதவர்களே இருக்க முடியாது. 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் டிவி தொடர்களான சக்கலக்கா பூம் பூம், மைடியர் பூதம், மாயா மச்சித்திரா ஆகியவற்றில் இதுவும் ஒன்றாகும். பிரபல காமெடியன் ரோவன் அட்கின்சனின் சிறு பிள்ளைத் தனமான நடிப்பை மையப்படுத்தியே மிஸ்டர் பீனின் அனைத்து காட்சிகளும் இருக்கும். அந்தவகையில், அவர் குறிப்பிட்ட ஓர் எபிசோடில் காமெடிக்காக செய்த செயலையே இந்தியர் ஒருவர் தனது ரியல் லைஃபில் செய்துக் காட்டியிருக்கின்றார்.

சேன்ட்ரோ

ரோவன் அட்கின்சன் புதிதாக வாங்கிய நாற்காலியை வீட்டுக்கு எடுத்து செல்ல அந்த எபிசோடில் ஓர் மிகப் பெரிய அலப்பறையையே செய்திருப்பார். தனியாக ஓர் வாகனத்தை கொண்டு நாற்காலியை வீட்டுக்கு எடுத்துச் செல்லாமல், தனது மைக்ரோ ரக காரையே பயன்படுத்தி அதை வீட்டுக்கு செல்வார். நாற்காலியோட சைஸுக்கே கார் இருக்கம் என்பதால், அதனை காரின் மேற்கூரை மீது வைத்து ரோவன் எடுத்துச் செல்வார்.

அப்போது காரை இயக்க ஓர் விநோதமான தந்திரத்தை அவர் பயன்படுத்தி இருப்பார். இந்த காட்சியால் ஈர்க்கப்பட்ட ஓர் நபரே தனது காரையும் மிஸ்டர் பீனைப் போல் இயக்கி இருக்கின்றார். காரின் மீது நாற்காலியை கட்டிவிட்டு அதன் மீது அமர்ந்தவாறு வாகனத்தை இயக்கியிருக்கின்றார். ரோவன் அட்கின்சன் காரை கட்டுப்படுத்த மாப் ஸ்டிக்கையும், கயிறையையும் பயன்படுத்தியிருப்பார். ஆனால், இந்த நபர் ரிமோட்டையும், தானியங்கி செட்-அப்பையும் பயன்படுத்தி இருக்கின்றார்.

சேன்ட்ரோ

ஆமாங்க காரை ரிமோட் வாயிலாக இயங்கும் வகையில் அந்த நபர் மாடிஃபை செய்திருக்கின்றார். இதற்காக அவர் பழைய ஹூண்டாய் சேன்ட்ரோ காரை அவர் பயன்படுத்தியிருக்கின்றார். இந்த தானியங்கை மாற்றத்தை மட்டுமே ஹூண்டாய் சேன்ட்ரோ காரில் அவர் மேற்கொள்ளவில்லை. மிக முக்கியமான மாற்றமாக பெட்ரோலில் இருந்து மின்சார காராகவும் அதை மாற்றியிருக்கின்றார். இந்த மாற்றத்தைச் செய்தவரின் மிஹிர் வர்தன் என கூறப்படுகின்றது. இவர் குருகிராமைச் சேர்ந்தவர் ஆவார்.

வெறும் மூன்றே நாட்களில் இந்த காரை அவர் எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதை அடுத்தே ஹூண்டாய் சேன்ட்ரோவை ரிமோட்டில் இயங்கும் காராகவும் மாற்றியிருக்கின்றார். இதற்காக பல்வேறு மாற்றங்களை மிஹிர் ஹூண்டாய் சேன்ட்ரோ காரில் செய்திருக்கின்றார். குறிப்பாக ஸ்டியரிங் வீல் கன்ட்ரோலுக்காக ரிமோட்டில் இயங்கும் மோட்டாரை அவர் டிரைவர் இருக்கையில் பயன்படுத்தி இருக்கின்றார். இதுவே டிரைவர் இல்லாத குறையை போக்கி இருக்கின்றது.

அதாவது, டிரைவரே இல்லாமல் கார் வலது, இடது திரும்ப செய்யும். ஸ்டியரிங் வீலைக் கட்டுப்படுத்த மட்டும் இல்லைங்க பிரேக், ஆக்சலரேஷன் ஆகியவற்றிற்கான பிரத்யேக கருவிகளும் இந்த காரில் தனியாக பொருத்தப்பட்டுள்ளன. இவற்றினாலேய ஹூண்டாய் சேன்ட்ரோ ரிமோட் காராக மாறியிருக்கின்றது. ரிமோட் கன்ட்ரோல் டிவைஸாக அர்டியூன யூனோ மைக்ரோ கன்ட்ரோல்லர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவே காரையும் ரிமோட்டையும் இணைத்து, ரிமோட்டின் கட்டளைக்கு காரை இயங்கச் செய்ய உதவுகின்றது.

இதற்கு முன்னதாகவும் பெட்ரோல் கார்கள் மின்சார வாகனமாக மற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை இதுபோன்று ரிமோட் கன்ட்ரோலில் இயங்கும் வகையில் மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. சோதனையோட்டாமாகவே இந்த காரை மின்சார வாகனமாக மிஹிர் வடிவமைத்திருக்கின்றார். ஆகையால், மிகக் குறைவான வேகத்தில் பயணிக்கக் கூடிய மின்சார மோட்டாரும், மிகக் குறைவான திறன் கொண்ட பேட்டரி பேக்குமே இந்த ஹூண்டாய் சேன்ட்ரோ ஹேட்ச்பேக் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இப்போதைய நிலவரப்படி இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 60 கிமீ என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஓர் முழு சார்ஜில் 80 கிமீ முதல் 90 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும். இந்த சூப்பரான மாற்றத்திற்காக மிஹிர் இதுவரை ரூ. 2.4 லட்சம் வரை செலவு செய்திருக்கின்றார். இந்த காரில் ஒரு கிமீ பயணிக்க ரூ. 1 செலவாகும் என்பது கூடுதல் சிறப்பு தகவல்.

More from DriveSpark

Article Published On: Saturday, December 24, 2022, 16:29 [IST]
English summary
Hyundai santro converted into electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+