மாருதியின் ஆதிக்கத்தை ஒழித்துக் கட்ட களம் இறங்கும் ஹூண்டாய்... இந்த ஒரு கார் போதும் நின்னு பேசும்!

இந்தியாவில் மாருதி ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாக ஹூண்டாய் நிறுவனம் கிராண்ட் ஐ10 நியோஸ் காரை அப்டேட் செய்து வெளியிடவுள்ளது. புதிய கார் சென்னை அருகே சோதனையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கார் விரைவில் மார்கெட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் அதிகமான கார்களை விற்பனை செய்வதில் இரண்டாவது பெரிய நிறுவனமாகும். இந்நிறுவனத்திற்கு டாடா நிறுவனம் தற்போது கடும் போட்டியைக் கொடுத்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க இந்த நிறுவனத்திற்குச் சிம்ம சொப்பனமாக இருப்பது மாருதி நிறுவனம் தான். விற்பனையில் மாருதி நிறுவனம் தான் எப்பொழுதும் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. மாருதி நிறுவனத்தை ஒரு முறை கூட முந்த முடியவில்லை.

மாருதியின் ஆதிக்கத்தை ஒழித்துக் கட்ட களம் இறங்கும் ஹூண்டாய்... இந்த ஒரு கார் போதும் நின்னு பேசும்!

இந்நிலையில் ஹூண்டாய் நிறுவனம் மாருதி நிறுவனத்தில் சிறப்பாக விற்பனையாகி வரும் காரான மாருதி ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாக கிராண்ட் ஐ10 நியோஸ் என்ற காரை களம் இறக்கியுள்ளது. இந்த கார் மார்கெட்டில் ஸ்விஃப்ட் காருடன் மட்டுமல்லாமல் டாடா டிகோர், டாடா பஞ்ச், ரெனால்ட் டிரைபர், ஆகிய கார்களுடன் போட்டிப் போடுகிறது. இருந்தாலும் இந்த செக்மெண்ட்டில் மாருதியின் ஆதிக்கத்தை ஒழித்துக்கட்ட ஹூண்டாய் திட்டமிட்டு வருகிறது.

இதற்காக அந்நிறுவனத்திடம் உள்ள கிராண்ட் ஐ10 நியோஸ் காரை சிறப்பாக அப்டேட் செய்ய திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இந்த கிராண்ட் ஐ10 நியோஸ் கார் சிறப்பான அம்சங்களுடன் தான் விற்பனையாகி வருகிறது. இருந்தாலும் 2023ம் ஆண்டு இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை வெளியிட்டு மார்கெட்டில் ஒரு பெரும் புரட்சியையே செய்ய ஹூண்டாய் மாஸ்ட்ர் பிளான் ஒன்றைச் செய்துவருகிறது. இதனால் நேரடியாக ஸ்விஃப்ட் காரின் விற்பனையைக் குறைக்க வேண்டும் என இலக்குடன் களம் இறக்கவுள்ளது.

புதியதாக அப்டேட் செய்யப்பட்ட கிராண்ட் ஐ10 நியோஸ் காரில் அப்டேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது உள்ள காரின் எல்இடி டிஆர்எல் ஏரோ வடிவில் உள்ளது. அப்டேட் செய்யப்பட்ட டிசைன் குவாட் வடிவில் உள்ளது. அடுத்ததாக புரோஜெக்டர் ஹெட்லைட் மற்றும் லேம் கேஸிங் டிசைன் ஃபாக் லைட் ஆகிய அம்சங்கள் அப்படியே இதிலும் வழங்கப்பட்டுள்ளது. முகப்பு பக்க கிரில் பகுதியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

பக்கவாட்டு பகுதியில் உள்ள டிசைன் பழைய காரில் உள்ள அதே டிசைன் தான் இதிலும் இருக்கிறது பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை. அலாய் மட்டும் புதிய அலாய் வீல் இதில் பொருத்தப்பட வாய்ப்புள்ளது. பின்பக்கம் மாற்றியமைக்கப்பட்ட டெயில் லைட்டும் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த புதிய கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் உட்புறத்தைப் பொருத்தவரை டேஷ்போர்டு மாற்றியமைக்கப்பட்டு புதுமையான லுக்குடன் கூடிய டேஷ் போர்டு வழங்கப்பட்டுள்ளது. இது போக புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், மற்றும் மேம்படுத்தப்பட்ட உட்புற கட்டமைப்பு, புதுமையான அப்ஹோல்சரி ஆகியன இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.

இன்ஃபோடெயின்மெண்டை பொருத்தவரை இந்த புதிய அப்டேட் செய்யப்பட்ட கிராண்ட் ஐ10 நியோஸ் காரை பொருத்தவரை பெரிய டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள காரில் இந்த செக்மெண்டிலேயே சிறந்த 8 இன்ச் டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இது மேம்படுத்தப்பட்டு மேலும் பெரிய ஸ்கிரின் வழங்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஸ்மார்ட் போனை இணைக்கும் தொழிற்நுட்பமும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, November 28, 2022, 17:45 [IST]
English summary
Hyundai testing grand i10 nios facelift
மேலும்... #ஹூண்டாய் #hyundai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+