ஹூண்டாய் டூஸான் புக்கிங்கை வாரி குவிச்சு இருக்கு... இருந்தாலும் ஸ்கார்பியோவுக்கு அதால ஈடு கொடுக்க முடியலையே!

ஹூண்டாய் நிறுவனத்தின் டூஸான் எஸ்யூவி (Hyundai Tucson SUV) கார் மிகக் குறைவான நாட்களில் ஆயிரக் கணக்கில் புக்கிங்குகளை வாரி குவித்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

வர 10ம் தேதி அன்றைக்குதான் அறிமுகமே ஆகபோகுது! அதுக்குள்ள புக்கிங்கை வாரி குவிச்சிருக்கு! ஆனாலும் ஸ்கார்பியோவுக்கு ஈடு கொடுக்க முடியல!

இந்தியாவில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் கார் மாடல்களில் ஹூண்டாய் டூஸான் (Hyundai Tucson SUV)-ம் ஒன்று. இந்த காருக்கே இந்தியாவில் தற்போது புக்கிங் குவிந்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹூண்டாய் நிறுவனம் கடந்த 15 நாட்களுக்கு முன்னர்தான் இக்காருக்கான புக்கிங் பணிகளை இந்தியாவில் தொடங்கியது.

வர 10ம் தேதி அன்றைக்குதான் அறிமுகமே ஆகபோகுது! அதுக்குள்ள புக்கிங்கை வாரி குவிச்சிருக்கு! ஆனாலும் ஸ்கார்பியோவுக்கு ஈடு கொடுக்க முடியல!

இந்த குறுகிய நாட்களுக்குள் சுமார் 3 ஆயிரம் புக்கிங்குகளை அது அள்ளி குவித்துக் கொண்டிருக்கின்றது. ரூ. 50 ஆயிரம் முன் தொகையில் இக்காருக்கான புக்கிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. மஹிந்திரா நிறுவனம்கூட அண்மையில்தான் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கார்பியோ என் காருக்கான புக்கிங் பணிகளை இந்தியாவில் தொடங்கியது.

வர 10ம் தேதி அன்றைக்குதான் அறிமுகமே ஆகபோகுது! அதுக்குள்ள புக்கிங்கை வாரி குவிச்சிருக்கு! ஆனாலும் ஸ்கார்பியோவுக்கு ஈடு கொடுக்க முடியல!

இந்த பணிகள் தொடங்கப்பட்ட முதல் 30 நிமிடங்களிலேயே 1 லட்சம் யூனிட்டுகளுக்கான புக்கிங்குகளை அது வாரி சுருட்டியது. இந்த இடத்தை ஹூண்டாய் டூஸான் காரால் தொட முடியவில்லை என்றாலும் அது விற்பனைக்கான அதிகாரப்பூர்வ அறிமுகத்தைப் பெறுவதற்கு முன்னர் 3 ஆயிரம் புக்கிங்குகளைப் பெற்றிருப்பது நிறுவனத்திற்கு உற்சாகத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

வர 10ம் தேதி அன்றைக்குதான் அறிமுகமே ஆகபோகுது! அதுக்குள்ள புக்கிங்கை வாரி குவிச்சிருக்கு! ஆனாலும் ஸ்கார்பியோவுக்கு ஈடு கொடுக்க முடியல!

அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டண்ட் சிஸ்டம் (Advanced Driver Assistant System) என எக்கசக்க தொழில்நுட்ப வசதிகளுடன் இக்கார் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சிறப்பம்சத்தின் வாயிலாக மோதலை தவிர்த்தல், நேரெதிரில் வரும் வாகனங்களுக்கு ஏற்ப வேகத்தை கன்ட்ரோல் செய்தல், டிரைவரின் உதவியில்லாமல் லேனுக்குள்ளேயே செல்லுதல் மற்றும் பாதுகாப்பாக லேனை விட்டு வெளியேறுதல் உள்ளிட்ட செயல்கள் தானாகவே செய்துகொள்ளும். இதனால்தான் டூஸான் காரில் இடம் பெற்றிருக்கும் மிக முக்கியமான அம்சமாக அடாஸ் பார்க்கப்படுகின்றது.

வர 10ம் தேதி அன்றைக்குதான் அறிமுகமே ஆகபோகுது! அதுக்குள்ள புக்கிங்கை வாரி குவிச்சிருக்கு! ஆனாலும் ஸ்கார்பியோவுக்கு ஈடு கொடுக்க முடியல!

மேலே பார்த்தது மட்டுமின்றி பாதசாரிகள் மற்றும் சைக்கிளிஸ்ட்களின் குறுக்கீடுகளைக் கண்டறியும் வகையில் சென்சார்கள், ஸ்மார்ட் க்ரூஸ் கன்ட்ரோல் ஸ்டாப் அண்ட் கோ வசதிகளும் அடாஸ் அம்சத்தின் கீழ் டூஸானில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு மற்றும் செக்யூரிட்டி அம்சங்களுக்காக 45 வகையான நவீன கருவிகளை டூஸானில் ஹூண்டாய் வழங்கியிருக்கின்றது.

வர 10ம் தேதி அன்றைக்குதான் அறிமுகமே ஆகபோகுது! அதுக்குள்ள புக்கிங்கை வாரி குவிச்சிருக்கு! ஆனாலும் ஸ்கார்பியோவுக்கு ஈடு கொடுக்க முடியல!

6 ஏர் பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் டெசன்ட் கன்ட்ரோல், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குள் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் வியூ மிர்ரர் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் ஹூண்டாய் டூஸான் காரில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

வர 10ம் தேதி அன்றைக்குதான் அறிமுகமே ஆகபோகுது! அதுக்குள்ள புக்கிங்கை வாரி குவிச்சிருக்கு! ஆனாலும் ஸ்கார்பியோவுக்கு ஈடு கொடுக்க முடியல!

இதுமட்டுமின்றி, அலெக்ஸா மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட் வாயிலாக இயங்கும் ஹோம்-டூ-கார் ஃபங்கசன், ஸ்மார்ட் கீ, மல்டி ஏர் மோட், போஸ் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், டூர் பாக்கேட் லைட்டிங் மற்றும் பின் பயணிகளுக்கான வால்க்-இன் டிவைஸ் உள்ளிட்ட அம்சங்களும் 2022 டூஸான் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

வர 10ம் தேதி அன்றைக்குதான் அறிமுகமே ஆகபோகுது! அதுக்குள்ள புக்கிங்கை வாரி குவிச்சிருக்கு! ஆனாலும் ஸ்கார்பியோவுக்கு ஈடு கொடுக்க முடியல!

இதுமாதிரியான சிறப்பம்சங்களை இக்கார் கொண்டிருக்கின்ற காரணத்தினாலயே இந்தியர்கள் மத்தியில் இக்காருக்கு சற்று வரவேற்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. எஞ்ஜினைப் பொருத்த வரை இரு விதமான மோட்டார் தேர்வுகள் இக்காரில் வழங்கப்பட இருக்கின்றது. 2.0 சிலிண்டர், 4 நேச்சுரல்லி அஸ்பையர்டு பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் விஜிடி டர்போ-டீசல் ஆகிய இரு விதமான மோட்டார் தேர்வுகளிலேயே டூஸான் கிடைக்க இருக்கின்றது.

வர 10ம் தேதி அன்றைக்குதான் அறிமுகமே ஆகபோகுது! அதுக்குள்ள புக்கிங்கை வாரி குவிச்சிருக்கு! ஆனாலும் ஸ்கார்பியோவுக்கு ஈடு கொடுக்க முடியல!

ஹூண்டாய் நிறுவனம் இந்த காரை பிரத்யேகமாக 'ஹூண்டாய் சிக்னேச்சர்' விற்பனையகங்கள் வாயிலாக விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. அல்கஸார் மற்றும் ஐ20என் உள்ளிட்ட அதிக பிரீமியம் வசதிகள் கொண்ட கார்களும்கூட இந்த தளத்தில் வைத்தே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது ஹூண்டாய்.

வர 10ம் தேதி அன்றைக்குதான் அறிமுகமே ஆகபோகுது! அதுக்குள்ள புக்கிங்கை வாரி குவிச்சிருக்கு! ஆனாலும் ஸ்கார்பியோவுக்கு ஈடு கொடுக்க முடியல!

ஹூண்டாய் டக்சன் இந்தியாவில் ஏற்கனவே அதிக பிரீமியம் வசதிகளுடன் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ், ஜீப் காம்பஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர் மற்றும் எக்ஸ்யூவி 700 உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வந்திருக்கின்றது.

Most Read Articles
English summary
Hyundai tucson suv received over 3k bookings with in 15 days
Story first published: Friday, August 5, 2022, 20:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X