2 புதிய கார்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் ஹூண்டாய்! டாடா, மஹிந்திரா அடி வயிற்றில் புளிய கரைக்குமே

ஹூண்டாய் நிறுவனம் வரும் 2023ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் என்ன செய்யத் திட்டமிட்டுள்ளது என்ற தகவல் கசிந்துள்ளது. டாடாவிற்கும் மஹிந்திராவிற்கும் போட்டியாக கார்களை களம் இறக்க ஹூண்டாய் செய்துள்ள திட்டம் குறித்துக் காணலாம்.

2 புதிய கார்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் ஹூண்டாய் . . . டாடா , மஹிந்திரா அடி வயிற்றில் புளிய கரைக்குமே . . .

ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் கார்களை தயாரித்து விற்பனை செய்வதில் ஒரு முன்னணி நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்தியாவில் அதிகமான கார்களை தயாரித்து விற்பனை செய்வதில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனத்தின் கார்கள் எல்லாம் மார்கெட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த கார்களை எல்லாம் மக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர். குறிப்பாக இந்நிறுவனத்தின் ஹூண்டாய் கிரெட்டா காருக்கு மார்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

2 புதிய கார்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் ஹூண்டாய் . . . டாடா , மஹிந்திரா அடி வயிற்றில் புளிய கரைக்குமே . . .

இந்நிலையில் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போ நடக்கவிருக்கிறது. அதாவது இந்தியாவில் உள்ள ஆட்டோமொபைல் துறை சார்ந்த நிறுவனங்கள் எல்லாம் தங்கள் தயாரிப்புகளை மக்கள் மத்தியில் காட்டும் ஒரு கண்காட்சி இந்த கண்காட்சியின் போது பல நிறுவனங்கள் தங்கள் புதிய தயாரிப்புகளை எல்லாம் அறிமுகப்படுத்துவார்கள். அதனால் இந்த ஆட்டோமொபைல் துறைக்கே இந்த ஆட்டோ எக்ஸ்போ மிக முக்கியமான நாளாகக் கருதப்படும்.

2 புதிய கார்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் ஹூண்டாய் . . . டாடா , மஹிந்திரா அடி வயிற்றில் புளிய கரைக்குமே . . .

இந்நிலையில் ஹூண்டாய் நிறுவனம் இந்த வருடம் தனது ஹூண்டாய் வென்யூ காரை அப்டேட் செய்தது, அதே போல ஹூண்டாய் டுஸான் காரின் புதிய தலைமுறை காரை அப்டேட் செய்தது. இந்நிலையில் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் ஹூண்டாய் நிறுவனம் என்ன செய்யப்போகிறது என்ற ஆவல் பலருக்கு ஏற்பட்டுள்ளது. பலர் இது விவாதித்து வருகின்றனர். இது குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

2 புதிய கார்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் ஹூண்டாய் . . . டாடா , மஹிந்திரா அடி வயிற்றில் புளிய கரைக்குமே . . .

2023ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் ஹூண்டாய் நிறுவனம் சில புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. அதற்கு முன்பு முக்கிய அறிமுகமாக ஹூண்டாய் கிரெட்டாவின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் காரை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ஹூண்டாய் கிரெட்டா கார் தான். இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி காராகும் இதில் ஏகப்பட்ட அப்டேட்கள் காத்திருக்கின்றன.

2 புதிய கார்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் ஹூண்டாய் . . . டாடா , மஹிந்திரா அடி வயிற்றில் புளிய கரைக்குமே . . .

முக்கியமாக இந்த ஹூண்டாய் கிரெட்டா காரில் ஏடிஏஎஸ் தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்த ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் ஹூண்டாய் வெர்னா காரின் புதிய தலைமுறை காரையும் அந்நிறுவனம் தற்போது பல இடங்களில் டெஸ்ட் செய்து வருகிறது. அதையும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 புதிய கார்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் ஹூண்டாய் . . . டாடா , மஹிந்திரா அடி வயிற்றில் புளிய கரைக்குமே . . .

இது மட்டுமில்லாமல் ஆட்டோ எக்ஸ்போவில் ஐகானிக் 5 மற்றும் ஐகானிக் 6 ஆகிய கார்களையும் அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது. ஆனால் இதை எல்லாம் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்போவதாக ஹூண்டாய் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

2 புதிய கார்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் ஹூண்டாய் . . . டாடா , மஹிந்திரா அடி வயிற்றில் புளிய கரைக்குமே . . .

இதற்கிடையில் ஹூண்டாய் எல்லாருக்கும் சர்ப்பிரைஸ் கொடுக்கும் வகையில் பார்வையாளர்கள் மற்றும் ஊடகத்தினர் மத்தியில் தனது சர்வதேச மாடலில் 2 புதிய கார் கான்செப்ட்களையும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருவதாகச் செய்திகள் கசிந்துள்ளது.

2 புதிய கார்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் ஹூண்டாய் . . . டாடா , மஹிந்திரா அடி வயிற்றில் புளிய கரைக்குமே . . .

கடந்தாண்டு டாடா நிறுவனம் வெளியிட்ட டாடா பஞ்ச் என்ற மைக்ரோ எஸ்யூவி காருக்கு மார்கெட்டில் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ள நிலையில் இதே செக்மெண்டை ஹூண்டாய் நிறுவனமும் குறி வைத்துள்ளது. தான் அறிமுகப்படுத்தவுள்ள 2 புதி கான்செப்ட் காரில் ஒரு மைக்ரோ எஸ்யூவி செக்மெண்டில் கிராண்ட் ஐ10 நியோஸ் கார் உருவான அதே பிளாட்ஃபார்மில் புதிய காரை உருவாக்கி வருகிறது. இதற்கான கான்செப்ட்டை ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிட்டு காரையே 2023ம் ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது.

2 புதிய கார்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் ஹூண்டாய் . . . டாடா , மஹிந்திரா அடி வயிற்றில் புளிய கரைக்குமே . . .

மற்றொரு கார் வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் கார் செக்மெண்டில் உள்ள கார். ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே கோனா என்ற காரை தற்போது பிரிமியம் செக்மெண்டில் விற்பனை செய்து வருகிறது. தற்போது அதைத் தனது வென்யூ என்ற காம்பேக்ட் எஸ்யூவி காரை அடிப்படையாக வைத்து புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது.

2 புதிய கார்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் ஹூண்டாய் . . . டாடா , மஹிந்திரா அடி வயிற்றில் புளிய கரைக்குமே . . .

இந்த கார் மார்கெட்டில் உள்ள நெக்ஸான் இவி, மற்றும் விரைவில் வரவுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி 400 ஆகிய காருக்கு போட்டியாகக் களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் முழு சார்ஜில் 400 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

2 புதிய கார்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் ஹூண்டாய் . . . டாடா , மஹிந்திரா அடி வயிற்றில் புளிய கரைக்குமே . . .

ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த திட்டம் ஆட்டோ எஸ்போவில் வெளியிட்டால் அனைவரது கண்ணும் ஹூண்டாயின் மீது தான் இருக்கும். அடுத்தடுத்து 2 புதிய கார் கான்செப்ட்களை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது, டாடா, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அடி வயிற்றில் புளியைக் கரைக்கும் விஷயமாக மாறியுள்ளது. ஏற்கனவே விற்பனையில் டாடாவிற்கும் ஹூண்டாயிற்கும் இரண்டாம் இடத்திற்கான கடும் போட்டி நடந்து வருகிறது.

2 புதிய கார்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் ஹூண்டாய் . . . டாடா , மஹிந்திரா அடி வயிற்றில் புளிய கரைக்குமே . . .

இதற்கிடையில் டாடாவில் சிறப்பாக விற்பனையாகும் நெக்ஸான் மற்றும் பஞ்ச் ஆகிய கார்களுக்கு போட்டியாக ஹூண்டாய் திட்டமிட்டு புதிய காரை களம் இறக்குவது எதிர்காலத்தில் டாடாவின் விற்பனையை நேரடியாகப் பாதிக்கும். இதனால் இரண்டாம் இடத்தை தான் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளலாம் என ஹூண்டாய் திட்டமிட்டு வருகிறது.

2 புதிய கார்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் ஹூண்டாய் . . . டாடா , மஹிந்திரா அடி வயிற்றில் புளிய கரைக்குமே . . .

இதற்கிடையில் மஹிந்திரா நிறுவனமும் வரிசையாகக் காரை அறிமுகப்படுத்துவது மற்றும், எலெக்ட்ரிக் கார் செக்மெண்டில் ஹூண்டாய் இரண்டாவது படியை எடுத்து வைக்கும் முயற்சியாக எலெக்டரிக் காரின் கான்செப்டை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்

Most Read Articles
English summary
Hyundai two new concept car rival tata and Mahindra likely to showcase at auto expo
Story first published: Saturday, November 5, 2022, 15:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X