வெளிநாட்டு பிராண்ட் கார்களை ஓரங்கட்டிய 5 இந்திய கார்கள்!! டாடா மோட்டார்ஸின் பங்கே அதிகம்!
ஒரு காலத்தில் இந்தியாவில் கார்கள் என்றாலே அவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுபவையாக இருந்தன. அதன்பின் வெளிநாட்டு பிராண்ட்கள் இந்தியாவில் தொழிற்சாலைகளை அமைத்து, இங்கேயே கார்களை தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தன.

அந்த சமயங்களில் வெளிநாட்டு கார் பிராண்ட்கள் மீதான மோகம் நம் இந்தியர்கள் இடையே அதிகமாக இருந்தது. ஆனால் அது தற்போது கடந்த 20 வருடங்களில் பெரிய அளவில் மாற்றம் கண்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வகையில் வெளிநாட்டு கார் பிராண்ட்களையே கதிகலங்க வைத்த சில இந்திய கார்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டாடா இண்டிகோ
இந்த வரிசையில் டாடா மோட்டார்ஸின் பங்கு மிக இன்றியமையாதது ஆகும். முழுக்க முழுக்க இந்தியாவில் கிடைக்கும் பாகங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட முதல் காராக டாடா நிறுவனம் இண்டிகோவை அறிமுகப்படுத்தியது. கேப் தொழில்களில் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட டாடா இண்டிகா சிறந்த ரைடிங் தரம் மற்றும் போதுமான இடவசதியினால் தனிப்பயன்பாட்டிற்காக கார் வாங்குவோர் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

கீழிறக்கி, மேலேற்றும் ஜன்னல் கண்ணாடிகளை பெற்ற முதல் கார்களுள் ஒன்றாக விளங்கிய இண்டிகா உட்புற கேபினில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய கண்ணாடிகள் மற்றும் ஸ்பீக்கர்களையும் சிறப்பம்சங்களாக கொண்டிருந்தது. இண்டிகாவில் பொருத்தப்பட்ட 1.4 லிட்டர் டீசல் என்ஜின் சிறந்த எரிபொருள் திறனை வழங்கியதால், கமர்ஷியல் பயன்பாட்டிற்கும் இந்த டாடா கார் தேர்வு செய்யப்பட்டது.

டாடா சஃபாரி
ஆரம்ப காலக்கட்டத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மற்றொரு தரமான தயாரிப்புகளுள் டாடா சஃபாரியும் ஒன்று. பழைய சஃபாரி காரினை பயன்படுத்தி உள்ளவர்கள் எவரொருவரும் இந்த கூற்றினை நிராகரிக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். அந்த அளவிற்கு சஃபாரி பெயர்பலகை பிரபலமானதினால்தான், இதே பெயரில் புதிய சஃபாரி காரை கடந்த ஆண்டில் டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியது.

விற்பனையில் இருந்த சமயத்தில் டாடா சஃபாரி தான் இந்தியாவில் பல மாநிலங்களில் போலீஸாரின் ரோந்து வாகனம். இவ்வளவுஏன், சில இராணுவ பிரிவினர் கூட சஃபாரி கார்களை பயன்படுத்தி உள்ளனர். இதற்காக சஃபாரி ஜிஎஸ்800 என்கிற வேரியண்ட்டை டாடா தயாரித்தது. இதில் பொருத்தப்பட்ட என்ஜின் அதிகப்பட்சமாக சுமார் 270 எச்பி -ஐ வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது.

மஹிந்திரா தார்
பல வெளிநாட்டு கார் பிராண்ட்களை திரும்பி பார்க்க வைத்த மஹிந்திரா தயாரிப்பு, தார் ஆகும். ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனமான இதன் இரண்டாம் தலைமுறை கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டு தற்சமயம் விற்பனையில் உள்ளது. முதல் தலைமுறையில் இருந்து தாரின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் என இரு பக்கங்களிலும் அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த வகையில் புத்துணர்ச்சியானதாக மாறிய புதிய தார் வாகனத்தில் என்ஜின் & டிரான்ஸ்மிஷன் தேர்வுகளும் முந்தைய தலைமுறையை காட்டிலும் ஆற்றல்மிக்கதாக கொண்டுவரப்பட்டன. விற்பனையில் இந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனத்திற்கு தற்சமயம் ஃபோர்ஸ் குர்கா மட்டுமே போட்டியாக உள்ளது. தாரில் உள்ள ஒரே ஒரு குறை என்னவென்றால், மூன்றே மூன்று கதவுகள் மட்டுமே வழங்கப்படுவதாகும். இதனை கவனத்தில் எடுத்து கொண்ட மஹிந்திரா 5-கதவு தாரின் வடிவமைப்பு பணியில் உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700
மஹிந்திராவின் மாடர்ன் எஸ்யூவி கார், எக்ஸ்யூவி700 ஆகும். முன்பு விற்பனையில் இருந்த எக்ஸ்யூவி500 காருக்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட இதன் தோற்றம் பல வெளிநாட்டு சொகுசு கார்களுக்கே சவால்விடும் வகையில் உள்ளது. இதனால் மஹிந்திரா பிராண்ட்டில் இருந்து மிக நீண்ட காலத்திற்கு விற்பனையில் இருக்கக்கூடிய காராக எக்ஸ்யூவி700 கருதப்படுகிறது.

தற்கால கார்களின் வழக்கமான அம்சங்களுடன் எக்ஸ்யூவி700-இல் ஒரே பாதையை கடைப்பிடிக்க உதவி, தகவமைத்து கொள்ளக்கூடிய க்ரூஸ் கண்ட்ரோல், தானியங்கி அவசரகால ப்ரேக்கிங் உள்ளிட்டவை அடங்கிய நிலை-3 தானியங்கி ஓட்டுனர் உதவி அம்சங்களையும் மஹிந்திரா வழங்கியுள்ளது. இத்தகைய அம்சங்களை பெற்ற முதல் இந்திய கார் எக்ஸ்யூவி700 ஆகும்.

டாடா நெக்ஸான் இவி
இண்டிகோ, சஃபாரியை தொடர்ந்து நிகழ்காலத்தில் டாடா மோட்டார்ஸின் சிறந்த விற்பனை மாடலாக இருப்பது நெக்ஸான். இதன் எலக்ட்ரிக் வெர்சனை தயாரித்ததன் மூலம் இந்திய எலக்ட்ரிக் கார்கள் சந்தையிலும் டாடா மோட்டார்ஸ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2019இல் அறிமுகப்படுத்தப்பட்ட நெக்ஸான் இவி -இன் விற்பனை கடந்த சில மாதங்களில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








