இந்திய சந்தையில் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படவுள்ள 2 முக்கியமான வாகனங்கள்... என்னென்ன தெரியுமா?

இந்திய சந்தையில் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படவுள்ள 2 வாகனங்கள் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படவுள்ள 2 முக்கியமான வாகனங்கள்... என்னென்ன தெரியுமா?

இந்தியாவில் அடுத்த வாரம் குறைந்தபட்சம் 2 வாகனங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதன்படி ஜீப் நிறுவனம் இந்திய சந்தையில் மெரிடியன் எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இது மூன்று வரிசைகள் கொண்ட 7 சீட்டர் கார் ஆகும். அதே நேரத்தில் டிரையம்ப் நிறுவனம் நிறுவனம் 2022 டைகர் ஸ்போர்ட் 660 பைக்கை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.

இந்திய சந்தையில் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படவுள்ள 2 முக்கியமான வாகனங்கள்... என்னென்ன தெரியுமா?

இவைதான் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படவுள்ள 2 முக்கியமான தயாரிப்புகள் ஆகும். இதுதவிர மேலும் ஒரு சில நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை அறிமுகம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. ஜீப் மெரிடியன் மற்றும் 2022 டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 ஆகிய இரண்டு தயாரிப்புகளும் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. இந்த 2 வாகனங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படவுள்ள 2 முக்கியமான வாகனங்கள்... என்னென்ன தெரியுமா?

ஜீப் மெரிடியன் (Jeep Meridian)

ஜீப் நிறுவனத்தின் பிரீமியம் எஸ்யூவியான மெரிடியன் வரும் மார்ச் 29ம் தேதி பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இதை தொடர்ந்து நடப்பாண்டின் முதல் பாதியில் இந்த எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரின் முன் பகுதியில் 7 ஸ்லாட் க்ரில் அமைப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படவுள்ள 2 முக்கியமான வாகனங்கள்... என்னென்ன தெரியுமா?

மேலும் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி பகல் நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள், எல்இடி டெயில்லைட்கள், பாடி கிளாடிங், ரூஃப் ரெயில்கள், பனரோமிக் சன்ரூஃப் ஆகியவையும் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எஸ்யூவி காரில், 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆப்ஷனலாக 18 இன்ச் அலாய் வீல்களும் கொடுக்கப்படலாம்.

இந்திய சந்தையில் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படவுள்ள 2 முக்கியமான வாகனங்கள்... என்னென்ன தெரியுமா?

கேபினை பொறுத்தவரையில், 10.2 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவை வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த காரில், பின் பக்க பயணிகளுக்கு என தனியாக ஏசி வெண்ட்கள் மற்றும் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட்களும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படவுள்ள 2 முக்கியமான வாகனங்கள்... என்னென்ன தெரியுமா?

அதே சமயம் முன் பகுதி இருக்கைகளில் 'வென்டிலேஷன்' வசதி எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, இபிடி உடன் ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், டிராக்ஸன் கண்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஹில்-ஸ்டார்ட் அஸிஸ்ட் ஆகிய வசதிகளும் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய சந்தையில் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படவுள்ள 2 முக்கியமான வாகனங்கள்... என்னென்ன தெரியுமா?

அதே நேரத்தில் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரில் வழங்கப்பட்டுள்ள அதே 2.0 லிட்டர் மல்டி-ஜெட் டீசல் இன்ஜின்தான் மெரிடியன் எஸ்யூவியிலும் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 170 பிஹெச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதுதவிர 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

இந்திய சந்தையில் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படவுள்ள 2 முக்கியமான வாகனங்கள்... என்னென்ன தெரியுமா?

டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரை, 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 25 லட்ச ரூபாய் முதல் 35 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில், ஜீப் மெரிடியன் எஸ்யூவி விற்பனை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி க்ளோஸ்ட்டர் உள்ளிட்ட கார்களுடன் இது போட்டியிடும்.

இந்திய சந்தையில் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படவுள்ள 2 முக்கியமான வாகனங்கள்... என்னென்ன தெரியுமா?

2022 டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 2022 (2022 Triumph Tiger Sport 660)

ஜீப் நிறுவனம் மெரிடியன் எஸ்யூவி காரை வெளியிடும் அதே தினத்தில், டிரையம்ப் இந்தியா நிறுவனம் 2022 டைகர் ஸ்போர்ட் 660 மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த பைக்கிற்கான முன்பதிவுகளை ஏற்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 50 ஆயிரம் ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்திய சந்தையில் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படவுள்ள 2 முக்கியமான வாகனங்கள்... என்னென்ன தெரியுமா?

2022 டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 பைக்கில், 660 சிசி, மூன்று-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 81 பிஹெச்பி பவரையும், 64 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியதாக இருக்கும். இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, March 25, 2022, 17:12 [IST]
English summary
Important details about jeep meridian 2022 triumph tiger sport 660
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+