டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் புதிய வெர்ஷன்... ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்ளோ கிமீ போகும் தெரியுமா?

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் லாங்-ரேஞ்ச் வெர்ஷன் பற்றி இதுவரை நமக்கு தெரியவந்துள்ள முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் புதிய வெர்ஷன்... ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்ளோ கிமீ போகும் தெரியுமா?

இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் 2வது மிகப்பெரிய நிறுவனம் டாடா மோட்டார்ஸ். 3வது இடத்தில் இருந்த டாடா மோட்டார்ஸ் வெகு சமீபத்தில்தான் ஹூண்டாய் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி 2வது இடத்தை பிடித்தது. இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனம் என்ற பெருமையை மாருதி சுஸுகி நிறுவனம் தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் புதிய வெர்ஷன்... ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்ளோ கிமீ போகும் தெரியுமா?

அதே சமயம் எலெக்ட்ரிக் கார்களை மட்டும் எடுத்து கொண்டால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் முதலிடத்தில் உள்ளது. ஆம், தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் டாடா மோட்டார்ஸ்தான். இதற்கு டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்தான் முக்கியமான காரணம்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் புதிய வெர்ஷன்... ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்ளோ கிமீ போகும் தெரியுமா?

இந்தியாவில் தற்போது அதிகம் விற்பனையாகி கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமை இதற்கு உண்டு. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் லாங்-ரேஞ்ச் வெர்ஷனை (Long Range Version) விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் புதிய வெர்ஷன்... ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்ளோ கிமீ போகும் தெரியுமா?

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் லாங்-ரேஞ்ச் வெர்ஷன் தற்போது சாலை சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை இன்னும் அதிகரிக்க செய்துள்ளன.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் புதிய வெர்ஷன்... ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்ளோ கிமீ போகும் தெரியுமா?

இந்த ஸ்பை படங்களை வைத்து பார்க்கையில், தற்போது விற்பனையில் உள்ள வெர்ஷனும், விரைவில் விற்பனைக்கு வரவுள்ள வெர்ஷனும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. வெளிப்புற தோற்றத்தை பொறுத்தவரையில் நிறைய மாற்றங்களை நம்மால் எதிர்பார்க்க முடியவில்லை.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் புதிய வெர்ஷன்... ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்ளோ கிமீ போகும் தெரியுமா?

5 ஸ்போக் அலாய் வீல்கள் மற்றும் 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் ஆகியவை மட்டுமே டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் லாங்-ரேஞ்ச் வெர்ஷனின் சோதனை மாடலில் காணப்பட்ட குறிப்பிடத்தகுந்த மாற்றங்களாக உள்ளன. இந்த 5 ஸ்போக் அலாய் வீல்களை நெக்ஸான் ஐசி இன்ஜின் கார் மற்றும் நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் ஆகியவற்றின் டார்க் எடிசன்களில் நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் புதிய வெர்ஷன்... ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்ளோ கிமீ போகும் தெரியுமா?

பின் சக்கரங்களிலும் தற்போது டிஸ்க் பிரேக்குகளை சேர்த்திருப்பதன் மூலம் கூடுதல் ஸ்டாப்பிங் பவர் கிடைக்கும். டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் லாங்-ரேஞ்ச் வெர்ஷனின் எடை பெரிய பேட்டரி தொகுப்பு உள்ளிட்ட காரணங்களால் சுமாராக 100 கிலோ வரை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பிரேக்கிங்கை மேம்படுத்துவது அவசியமாகிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் புதிய வெர்ஷன்... ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்ளோ கிமீ போகும் தெரியுமா?

புதிதாக விற்பனைக்கு வரவுள்ள டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் லாங்-ரேஞ்ச் வெர்ஷனின் முக்கியமான மாற்றமே அதன் பேட்டரி தொகுப்புதான். பழைய 30.2 kWh பேட்டரி தொகுப்பிற்கு பதிலாக பெரிய 40 kWh பேட்டரி தொகுப்பு, புதிய லாங்-ரேஞ்ச் வெர்ஷனில் வழங்கப்பட்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் புதிய வெர்ஷன்... ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்ளோ கிமீ போகும் தெரியுமா?

எனவே புதிய லாங்-ரேஞ்ச் மாடலின் அதிகாரப்பூர்வ ரேஞ்ச் 400 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் நடைமுறை பயன்பாட்டில் இவ்வளவு அதிகமான ரேஞ்ச் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. நமது நடைமுறை பயன்பாட்டில் 300-320 கிலோ மீட்டர்கள் ரேஞ்ச் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் புதிய வெர்ஷன்... ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்ளோ கிமீ போகும் தெரியுமா?

தற்போது விற்பனையில் உள்ள டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் அராய் சான்றளிக்கப்பட்ட ரேஞ்ச் 312 கிலோ மீட்டர்கள் ஆகும். ஆனால் நடைமுறை பயன்பாட்டில் 200-220 கிலோ மீட்டர்கள் மட்டுமே ரேஞ்ச் கிடைக்கிறது. புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் லாங்-ரேஞ்ச் வெர்ஷனில் கூடுதலாக ஒரு சில வசதிகளும் சேர்க்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் புதிய வெர்ஷன்... ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்ளோ கிமீ போகும் தெரியுமா?

நடப்பாண்டின் மத்தியில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருடன் ஒப்பிடுகையில், இந்த புதிய மாடலின் விலை 3 முதல் 4 லட்ச ரூபாய் வரை அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் 14.24 லட்ச ரூபாய் முதல் 16.85 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 17, 2022, 10:49 [IST]
English summary
Important details about tata nexon ev long range version
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+