குறைவான விலையில் புதிய பைக்கை களமிறக்கும் ராயல் என்பீல்டு... எவ்ளோனு தெரிஞ்சா வாங்கி ஓட்ட ஆசைப்படுவீங்க!

வரும் மார்ச் 15ம் தேதி விற்பனைக்கு வரவுள்ள 2022 டொயோட்டா க்ளான்சா மற்றும் ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 ஆகியவை குறித்த முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

குறைவான விலையில் புதிய பைக்கை களமிறக்கும் ராயல் என்பீல்டு... எவ்ளோனு தெரிஞ்சா வாங்கி ஓட்ட ஆசைப்படுவீங்க!

டொயோட்டா மற்றும் ராயல் என்பீல்டு ஆகிய 2 முன்னணி நிறுவனங்களும் அடுத்த வாரம் தங்களது புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளன. டொயோட்டா நிறுவனம் 2022 க்ளான்சா ஹேட்ச்பேக் காரையும், ராயல் என்பீல்டு நிறுவனம் புத்தம் புதிய ஸ்க்ராம் 411 பைக்கையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளன.

குறைவான விலையில் புதிய பைக்கை களமிறக்கும் ராயல் என்பீல்டு... எவ்ளோனு தெரிஞ்சா வாங்கி ஓட்ட ஆசைப்படுவீங்க!

இந்த 2 தயாரிப்புகளும் வரும் மார்ச் 15ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. ஒரே நாளில் 2 முக்கிய தயாரிப்புகள் விற்பனைக்கு வரவுள்ளது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இந்த புதிய கார் மற்றும் புதிய பைக் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

குறைவான விலையில் புதிய பைக்கை களமிறக்கும் ராயல் என்பீல்டு... எவ்ளோனு தெரிஞ்சா வாங்கி ஓட்ட ஆசைப்படுவீங்க!

2022 டொயோட்டா க்ளான்சா (2022 Toyota Glanza)

க்ளான்சா பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை டொயோட்டா நிறுவனம் வரும் மார்ச் 15ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது. மாருதி சுஸுகி பலேனோ காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன்தான் டொயோட்டா க்ளான்சா என்பது நம்மில் பலருக்கும் தெரியும். 2022 பலேனோ சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து 2022 க்ளான்சாவும் விற்பனைக்கு வருகிறது.

குறைவான விலையில் புதிய பைக்கை களமிறக்கும் ராயல் என்பீல்டு... எவ்ளோனு தெரிஞ்சா வாங்கி ஓட்ட ஆசைப்படுவீங்க!

2022 க்ளான்சா காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகளை டொயோட்டா நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டது. 2022 பலேனோ காரில் பொருத்தப்பட்டுள்ள அதே கே-சீரிஸ் இன்ஜின்தான் 2020 க்ளான்சா காரிலும் பொருத்தப்படவுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 89 பிஎஸ் பவரை உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என 2 வகையான கியர் பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறைவான விலையில் புதிய பைக்கை களமிறக்கும் ராயல் என்பீல்டு... எவ்ளோனு தெரிஞ்சா வாங்கி ஓட்ட ஆசைப்படுவீங்க!

2022 க்ளான்சா காரில், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா, ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதிகளுடன் புதிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் 2022 க்ளான்சா காரில் 6 ஏர்பேக்குகள் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறைவான விலையில் புதிய பைக்கை களமிறக்கும் ராயல் என்பீல்டு... எவ்ளோனு தெரிஞ்சா வாங்கி ஓட்ட ஆசைப்படுவீங்க!

இது மிகவும் முக்கியமான பாதுகாப்பு அம்சமாக இருக்கும். க்ளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ள டாடா அல்ட்ராஸ், ஹூண்டாய் ஐ20, ஃபோக்ஸ்வேகன் போலோ, ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட கார்களுடன் மட்டுமல்லாது, 2022 மாருதி சுஸுகி பலேனோ காருடனும், 2022 டொயோட்டா க்ளான்சா போட்டியிடும்.

குறைவான விலையில் புதிய பைக்கை களமிறக்கும் ராயல் என்பீல்டு... எவ்ளோனு தெரிஞ்சா வாங்கி ஓட்ட ஆசைப்படுவீங்க!

ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 (Royal Enfield Scram 411)

ஸ்க்ராம் 411 பைக்கை வரும் மார்ச் 15ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ராயல் என்பீல்டு நிறுவனம் தயாராகி வருகிறது. 1.75 லட்ச ரூபாய் என்ற விலையில் ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

குறைவான விலையில் புதிய பைக்கை களமிறக்கும் ராயல் என்பீல்டு... எவ்ளோனு தெரிஞ்சா வாங்கி ஓட்ட ஆசைப்படுவீங்க!

இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் அட்வென்ஜர் டூரர் ரக பைக்கின் விலை குறைவான மாடல் ஆகும். ராயல் என்பீல்டு ஹிமாலயனை விட 30 ஆயிரம்-40 ஆயிரம் ரூபாய் குறைவான விலையில் ஸ்க்ராம் விற்பனைக்கு 411 எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக்கின் முன் பகுதியில் 19 இன்ச் வீலும், பின் பகுதியில் 17 இன்ச் வீலும் வழங்கப்படும் என தெரிகிறது.

குறைவான விலையில் புதிய பைக்கை களமிறக்கும் ராயல் என்பீல்டு... எவ்ளோனு தெரிஞ்சா வாங்கி ஓட்ட ஆசைப்படுவீங்க!

அதே சமயம் ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக்கில், 411 சிசி, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 24.3 பிஹெச்பி பவரை உருவாக்க கூடியது. ராயல் என்பீல்டு நிறுவனம் ஸ்க்ராம் 411 பைக்கை தொடர்ந்து இன்னும் பல்வேறு புதிய தயாரிப்புகளை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

குறைவான விலையில் புதிய பைக்கை களமிறக்கும் ராயல் என்பீல்டு... எவ்ளோனு தெரிஞ்சா வாங்கி ஓட்ட ஆசைப்படுவீங்க!

விலை

2022 டொயோட்டா க்ளான்சா மற்றும் ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 ஆகிய 2 தயாரிப்புகளின் விலையும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த கேள்விக்கான பதில் வரும் மார்ச் 15ம் தேதி நமக்கு கிடைத்து விடும். டொயோட்டா ரசிகர்களும், ராயல் என்பீல்டு ரசிகர்களும் வரும் மார்ச் 15ம் தேதிக்காக ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 10, 2022, 21:07 [IST]
English summary
Important details about upcoming 2022 toyota glanza and royal enfield scram 411
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+