டிரைவிங் கற்று கொடுக்க போன இடத்தில் அடித்த ஜாக்பாட்... கியர் மாத்துற ஸ்டைலுக்காகவே டிரைவரை மணந்த இளம் பெண்!

கியர் மாத்துற ஸ்டைல் மற்றும் கார் ஓட்டும் போது கையாண்ட விநோத ஸ்டைல்களால் மனம் மயங்கிய இளம்பெண், தனக்கு கார் ஓட்ட கற்றுக் கொடுக்க வந்த டிரைவரையே மணம் முடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நிகழ்வுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டிரைவிங் கற்று கொடுக்க போன இடத்தில் அடித்த ஜாக்பாட்... கியர் மாத்துற ஸ்டைலுக்காகவே டிரைவரை மணந்த இளம் பெண்!

"அடச்சே இப்படி ஒரு சான்ஸ் நமக்கு கிடைக்காம போச்சேப்பா" என வருந்த செய்யும் வகையில் ஓர் காதல் திருமண நிகழ்வு பாகிஸ்தான் நாட்டில் அரங்கேறியிருக்கின்றது. தனக்கு டிரைவிங் கற்றுக் கொடுக்க வந்த இளைஞரை இளம்பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிகழ்வே அது ஆகும்.

டிரைவிங் கற்று கொடுக்க போன இடத்தில் அடித்த ஜாக்பாட்... கியர் மாத்துற ஸ்டைலுக்காகவே டிரைவரை மணந்த இளம் பெண்!

இந்தியாவில் 90-ஸ் கிட்ஸ்களே இன்னும் பலபேர் திருமணமாகமல் தனி ஆளாக சுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழ்நிலையில் ஒட்டுமொத்த 90ஸ் கிட்ஸ்களையும் வெறுப்பேற்றச் செய்யும் வகையில் இந்த 2கே கிட்ஸ்களின் திருமணம் நடந்து முடிந்திருக்கின்றது. அதிலும், இதுவரை கேள்விப்பட்டிராத முற்றிலும் விநோதமான முறையில் இருவருக்கும் காதல் ஏற்பட்டிருப்பது பலரை பொறாமையடையச் செய்துவிட்டது என்றே கூறலாம்.

டிரைவிங் கற்று கொடுக்க போன இடத்தில் அடித்த ஜாக்பாட்... கியர் மாத்துற ஸ்டைலுக்காகவே டிரைவரை மணந்த இளம் பெண்!

அண்மையில் இளம்பெண்ணின் தந்தை அவருக்கு கார் ஓட்ட பயிற்சியளிப்பதற்காக 21 வயது மதிப்புள்ள இளைஞரை நியமித்திருக்கின்றார். கார் ஓட்டுவதில் வல்லவரான இந்த நபர் கியரை மாற்றும்போது ரஜினியை போல் புது புது ஸ்டைலில் மாற்றியிருக்கின்றார். மேலும், காரை இயக்கும்போது புதிய பாணிகளையும் அவர் கையாண்டிருக்கின்றார்.

டிரைவிங் கற்று கொடுக்க போன இடத்தில் அடித்த ஜாக்பாட்... கியர் மாத்துற ஸ்டைலுக்காகவே டிரைவரை மணந்த இளம் பெண்!

இதில் மயங்கிய அந்த 18 வயது இளம்பெண் ஓட்டுநர் மீது காதல் வயப்பட்டிருக்கின்றார். மேலும், கட்டினால் இவரை மட்டும்தான் கட்டுவேன் என கூறி வீட்டிலும் அடம் பிடித்திருக்கின்றார். இதன் விளைவாக பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரின் திருமணமும் சமீபத்தில் நடைபெற்றிருக்கின்றது. இந்த திருமணம் ஒட்டுமொத்த பாகிஸ்தானியர்களையும் ஆச்சரியமடையச் செய்திருக்கின்றது. மேலும், அனைவர் மத்தியிலும் இந்த தகவல் மிக வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

டிரைவிங் கற்று கொடுக்க போன இடத்தில் அடித்த ஜாக்பாட்... கியர் மாத்துற ஸ்டைலுக்காகவே டிரைவரை மணந்த இளம் பெண்!

பாகிஸ்தானைக் கடந்து தற்போது உலகளவிலும் இந்த விநோத காதல் திருமணம் பற்றிய தகவல் பரவத் தொடங்கியிருக்கின்றது. குறிப்பாக, நம்ம ஊரு நெட்டிசன்கள் மத்தியில் இந்த தகவல் காட்டு தீயைபோல் அதிவேகத்தில் பரவிக் கொண்டிருக்கின்றது. இதில் மற்றுமொரு ஹைலைட் என்னவென்றால், 'காத்து வாக்குல ரெண்டு காதல்' திரைப்படத்தில் வரும் கதாபாத்திர பெயரான 'கதீஜா' என்பதே தற்போது காதல் திருமணம் செய்திருக்கும் இளம்பெண்யின் பெயர் ஆகும்.

டிரைவிங் கற்று கொடுக்க போன இடத்தில் அடித்த ஜாக்பாட்... கியர் மாத்துற ஸ்டைலுக்காகவே டிரைவரை மணந்த இளம் பெண்!

நடிகை சமந்தாவே இந்த பெயரில் திரைப்படத்தில் தோன்றியிருப்பார். பலரின் மனம் கவர்ந்த கதாபாத்திரம் இது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கதாபாத்திரத்தைப் போலவே நிஜ வாழ்க்கை கதீஜாவின் காதல் கதை பலரின் மனதைக் கவரத் தொடங்கியிருக்கின்றது.

டிரைவிங் கற்று கொடுக்க போன இடத்தில் அடித்த ஜாக்பாட்... கியர் மாத்துற ஸ்டைலுக்காகவே டிரைவரை மணந்த இளம் பெண்!

கார் ஓட்டுவதில் சிலர் தனித் திறன்மிக்கவர்களாக இருக்கின்றனர். சிறந்த முறையிலும், அதேநேரத்தில் பாதுகாப்பாகவும் கார்களை இயக்குவது என்பது அதிகபட்ச பயிற்சியினால் மட்டுமே கிடைக்கும். அதிக பயிற்சி இருந்தால் கார் ஓட்டுவதில் தனித் திறன்மிக்கவராக நம்மாலும் மாற முடியும். இதன் வாயிலாக பிறரின் மனதைக் கவர்வதோடு அதிக பாதுகாப்பான பயணத்தையும் நம்மால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

டிரைவிங் கற்று கொடுக்க போன இடத்தில் அடித்த ஜாக்பாட்... கியர் மாத்துற ஸ்டைலுக்காகவே டிரைவரை மணந்த இளம் பெண்!

அப்படியான தனித்திறன் கொண்டிருந்த காரணத்தினாலேயே இளம் பெண்ணுக்கு ஓட்டுநர் மீது காதல் ஏற்பட்டு, தற்போது அவர்களது காதல் திருமணத்தில் முடிந்துள்ளது. இவர்களின் திருமணம் அதிக வைரலானதை அடுத்து ஊடகங்களும், யுட்யூப் சேனல்களும் இருவரையும் வளைத்து வளைத்து பேட்டி எடுக்க ஆரம்பித்திருக்கின்றன.

அவ்வாறு சமீபத்தில் பாகிஸ்தான் ஊடகம் ஒன்று எடுத்த பேட்டியில் அந்த இளம் பெண் கூறியதாவது, "தன்னுடைய காதலன் (கணவர்) கார் ஓட்டும் ஸ்டைலுக்கு நான் ஒரு அடிமை. அவர் கார் ஓட்டும் ஸ்டைலை வைத்த கண் வாங்காமல் ஆச்சரியத்துடன் பார்ப்பேன். குறிப்பாக, கியரை அவர் பிடிக்கும் ஸ்டைல் மற்றும் அதை மாற்றும் ஸ்டைலுக்கு எனக்கு மிகவும் பிடித்தவை" என கூறியுள்ளார்.

More from DriveSpark

Article Published On: Sunday, November 6, 2022, 8:30 [IST]
English summary
Impressed by his gear shifting style a young woman married her driver
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+