இந்தியர்கள் உயிருக்கு உயிரா நேசிக்கும் கார்! புதிய ரூபம் எடுக்கிறது மாருதி ஸ்விஃப்ட்! இந்த அளவுக்கு மாற போகுதா

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் புதிய அவதாரம் எடுக்கவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்கள் ஒரு சில கார்கள் மீது எப்போதும் அதிக அன்பை காட்டுவார்கள். அப்படிப்பட்ட கார்களில் ஒன்றுதான், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). இது ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் மிக நீண்ட காலமாக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் தற்போதும் கூட இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் திகழ்கிறது. மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த அக்டோபர் மாதம் 17,231 ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதன் மூலம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களில், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காருக்கு 3வது இடம் கிடைத்துள்ளது.

இந்தியர்கள் உயிருக்கு உயிரா நேசிக்கும் கார்! புதிய ரூபம் எடுக்கிறது மாருதி ஸ்விஃப்ட்! இந்த அளவுக்கு மாற போகுதா

மாருதி சுஸுகி நிறுவனம் வெகு சமீபத்தில் ஸ்விஃப்ட் காரின் புதிய சிஎன்ஜி மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஸ்விஃப்ட் கார் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்திருப்பதற்கு இது முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் மாருதி சுஸுகி நிறுவனம் இதனுடன் நிற்க போவதில்லை.

வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட ஸ்விஃப்ட் காரின் 2023 மாடலை மாருதி சுஸுகி நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 2023 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் (2023 Maruti Suzuki Swift), விரைவில் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்தியாவின் கார், பைக் ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ள ஆட்டோ எக்ஸ்போ வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது. எனவே கூடிய விரைவிலேயே புதிய ஸ்விஃப்ட் காரின் அறிமுகத்தை இந்தியா சந்திக்கலாம். ஆட்டோ எக்ஸ்போவில் பொது பார்வைக்கு கொண்டு வந்த பின், கூடிய விரைவிலேயே மாருதி சுஸுகி நிறுவனம் புதிய ஸ்விஃப்ட் காரை முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில், புதிதாக டிசைன் செய்யப்பட்ட க்ரில், அப்டேட் செய்யப்பட்ட பம்பர், நேர்த்தியான புதிய எல்இடி ஹெட்லேம்ப்கள் ஆகியவை இடம்பெறலாம். மேலும் புதிய பனி விளக்குகள் அறை, புதிய ட்யூயல் டோன் அலாய் வீல்கள், புதிய பாடி பேனல்கள், புதிய ஸ்பாய்லர் ஆகியவையும் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆனால் புதிய ஸ்விஃப்ட் காரின் அளவுகளில் மாற்றங்கள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது தற்போதைய ஸ்விஃப்ட் கார் என்ன அளவில் இருக்கிறதோ, அதே அளவில்தான் புதிய மாடலும் இருக்க கூடும்.
தற்போதைய மாடலின் நீளம் 3,845 மிமீ ஆகவும், அகலம் 1,735 மிமீ ஆகவும், உயரம் 1,530 மிமீ ஆகவும், வீல் பேஸ் நீளம் 2,450 மிமீ ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், சுஸுகி வாய்ஸ் அஸிஸ்ட் போன்றவை வசதிகளை புதிய ஸ்விஃப்ட் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.மேலும் 360 டிகிரி கேமரா, லேன் கீப் அஸிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகளும் கூட புதிய ஸ்விஃப்ட் காரில் வழங்கப்படலாம்.

செயல்திறனை பொறுத்தவரை, புதிய ஸ்விஃப்ட் காரில் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடனும், மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் இல்லாமலும் என 2 வகைகளில் இந்த இன்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. டிரான்ஸ்மிஷன் பணிகளுக்கு, 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் இடம்பெறலாம். ஸ்விஃப்ட் காரின் புதிய மாடலின் வருகை போட்டியாளர்களுக்கு தற்போதே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Article Published On: Tuesday, November 8, 2022, 12:16 [IST]
English summary
India launch details of 2023 maruti suzuki swift
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+