எல்லாரும் ஷோரூமை தேடி அலைய போறாங்க... டாடாவை விட மிக மிக குறைவான விலை இ-காரை நாளை களமிறக்கும் மும்பை நிறுவனம்!

மும்பையை சேர்ந்த பிஎம்வி எலெக்ட்ரிக் (PMV electric) நிறுவனம் இந்தியாவின் மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் நாளைய தினம் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் கார்குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

எல்லாரும் ஷோரூமை தேடி அலைய போறாங்க... டாடாவை விட மிக மிக குறைவான விலை இ-காரை நாளை களமிறக்கும் மும்பை நிறுவனம்!

மும்பையை மையமாகக் கொண்டு இயங்கும் பிஎம்வி எலெக்ட்ரிக் (PMV electric) நிறுவனம் இந்தியாவிற்கான மலிவு விலை எலெக்ட்ரிக் காரை நாளை அறிமகம் செய்ய இருக்கின்றது. தற்போது டாடா மோட்டார்ஸின் டியாகோ இவி-யே இந்தியாவின் மிக மிக விலை குறைவான மின்சார காராக இருந்து வருகின்றது. இதன் இடத்தை தட்டி பறிக்கும் விதமாக பிஎம்வி எலெக்ட்ரிக் ஓர் மைக்ரோ காரை உருவாக்கியிருக்கின்றது.

எல்லாரும் ஷோரூமை தேடி அலைய போறாங்க... டாடாவை விட மிக மிக குறைவான விலை இ-காரை நாளை களமிறக்கும் மும்பை நிறுவனம்!

இதையே நாளைய தினம் முதல் முறையாக இந்தியாவில் வெளியீடு செய்ய இருக்கின்றது. ஈஸ்-இ (EaS-E) எனும் மைக்ரோ ரக எலெக்ட்ரிக் காரையே நிறுவனம் நாளை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதுகுறித்த தகவலை ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் உறுதிச் செய்துவிட்டது. ஈஸ்-இ, இந்த வாகனமே நிறுவனத்தின் முதல் மின்சார வாகனமாகும். ஆம், நிறுவனம் மின் வாகன உற்பத்தியில் களமிறங்கிய பின்னர் தயாரிக்கப்பட்ட முதல் வாகனம் இதுவாகும்.

எல்லாரும் ஷோரூமை தேடி அலைய போறாங்க... டாடாவை விட மிக மிக குறைவான விலை இ-காரை நாளை களமிறக்கும் மும்பை நிறுவனம்!

நகர பயன்பாட்டிற்கு உகந்த வாகனமாக ஈஸ்-இயை பிஎம்வி நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. அதாவது, நகரங்களின் மிக மிக குறுகிய பாதையில்கூட அசால்டாக நுழைந்து செல்லும் வகையில் மிகவும் அடக்கமான உருவத்தில் ஈஸ்-இ வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இதன் இலகுவான அமைப்பு சுலபமான இயக்கத்திற்கும் வழிவகுக்கும். இந்த மாதிரியான பயன்பாட்டைக் கருத்தில் கொண்டே இவ்வாகனத்தை பிஎம்வி உருவாக்கியிருக்கின்றது.

எல்லாரும் ஷோரூமை தேடி அலைய போறாங்க... டாடாவை விட மிக மிக குறைவான விலை இ-காரை நாளை களமிறக்கும் மும்பை நிறுவனம்!

இக்காரில் ஃபுல் சார்ஜில் 160 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதில் இடம் பெற்றிருக்கும் பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரங்களே போதும். சின்ன சின்ன இடைவெளியிலான பயணங்களை மேற்கொள்ளும் பொருட்டு இந்த சிறிய பேட்டரி பேக்கை பிஎம்வி ஈஸ்-இ எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தியிருக்கின்றது.

எல்லாரும் ஷோரூமை தேடி அலைய போறாங்க... டாடாவை விட மிக மிக குறைவான விலை இ-காரை நாளை களமிறக்கும் மும்பை நிறுவனம்!

பேட்டரி பேக் இவ்ளோ சின்னதா கொடுத்திருக்காங்களே இதேபோல் சிறப்பம்சம் விஷயத்திலும் கஞ்சத் தனம் செஞ்சிருப்பாங்களோ என எண்ணிவிட வேண்டாம். விலைக்குறைப்பு நடவடிக்கைக்காக மட்டுமே இந்தளவு சிறிய பேட்டரி பேக் எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. மற்றபடி, அதாவது, சிறப்பம்சங்களைப் பொருத்த வரை இக்காரில் எக்கசக்கமான அம்சங்கள் வாரி வழங்கப்பட்டிருக்கின்றன.

எல்லாரும் ஷோரூமை தேடி அலைய போறாங்க... டாடாவை விட மிக மிக குறைவான விலை இ-காரை நாளை களமிறக்கும் மும்பை நிறுவனம்!

அந்தவகையில், டிஜிட்டல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், ஏர் கன்டிஷனிங் சிஸ்டம், ரிமோட் மூலம் சாவியே இல்லாமல் காருக்குள் நுழையும் வசதி, ரிமோட் பார்க் அசிஸ்ட், க்ரூஸ் கன்ட்ரோல், சீட் பெல்ட்டுகள், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், எல்இடி ஹெட்லைட், டெயில் லேம்ப், டிஆர்எல்கள், அலாய் வீல்கள் என எக்கசக்க அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.

எல்லாரும் ஷோரூமை தேடி அலைய போறாங்க... டாடாவை விட மிக மிக குறைவான விலை இ-காரை நாளை களமிறக்கும் மும்பை நிறுவனம்!

இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகள் ஈஸ்-இ எலெக்ட்ரிக் காரில் எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், பிஎம்வி நிறுவனம் ரூ. 4 லட்சம் முதல் ரூ. 5 லட்சத்திற்கும் குறைவான விலையில் இந்த எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தளவு குறைந்த விலையில் இந்தியாவில் வேறு எந்த எலெக்ட்ரிக் காரும் விற்பனைக்குக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

எல்லாரும் ஷோரூமை தேடி அலைய போறாங்க... டாடாவை விட மிக மிக குறைவான விலை இ-காரை நாளை களமிறக்கும் மும்பை நிறுவனம்!

டாடா மோட்டார்ஸின் விலை குறைவான எலெக்ட்ரிக் காராக கருதப்படும், டியாகோ இவி-கூட ரூ. 8.49 லட்சத்திற்குதான் விற்கப்பட்டு வருகின்றது. இதையும் காட்டிலும் மிக மிகக் குறைவான விலையிலேயே விற்பனைக்கு வர இருப்பதாக ஈஸ்-இ. ஈஸ்-இ எலெக்ட்ரிக் காரில் இருவர் மட்டுமே அமர்ந்து பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. முன்பக்கத்தில் டிரைவரும், பின்பக்கத்தில் ஓர் வயது வந்த நபரால் மட்டுமே பயணிக்க முடியும்.

எல்லாரும் ஷோரூமை தேடி அலைய போறாங்க... டாடாவை விட மிக மிக குறைவான விலை இ-காரை நாளை களமிறக்கும் மும்பை நிறுவனம்!

ஈஸ்-இ எலெக்ட்ரிக் 2,915 mm நீளத்திலும், 1,157 mm அகலத்திலும், 1,600 மிமீ உயரத்திலும் மற்றும் 2,087 mm கிரவுண்ட் கிளியரன்ஸிலும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த மைக்ரோ காருக்கு போட்டியாக வெகு விரைவில் எம்ஜி நிறுவனம் ஏர் எனும் மைக்ரோ எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதுவும் மிக மிக குறைவான விலையிலேயே எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் அறிமுகம் 2023 ஆம் ஆண்டிற்கு அரங்கேற இருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 15, 2022, 13:29 [IST]
English summary
India s most affordable eas e launching tomorrow
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+