மிகவும் விலை குறைவான சொகுசு எலெக்ட்ரிக் காரின் டெலிவரி தொடக்கம்... இவ்ளோ பேர் ஆர்டர் பண்ணீட்டாங்களா!

இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான சொகுசு எலெக்ட்ரிக் காரின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் (Volvo XC40 Recharge). இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த எலெக்ட்ரிக் கார் ஆகும்.

மிகவும் விலை குறைவான சொகுசு எலெக்ட்ரிக் காரின் டெலிவரி தொடக்கம்... இவ்ளோ பேர் ஆர்டர் பண்ணீட்டாங்களா!

வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் கார் கடந்த மார்ச் மாதமே பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. இதை தொடர்ந்து ஏப்ரல் மாதமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. கோவிட்-19 பிரச்னை காரணமாக வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காரின் அறிமுகம் தள்ளி போனது.

பல்வேறு தாமதங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஒரு வழியாக கடந்த ஜூலை மாதம்தான் வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை (Price) 55.90 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இதன் மூலம் இந்தியாவின் மிகவும் விலை குறைவான சொகுசு எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

இந்திய சந்தையில் கியா இவி6 (Kia EV6) போன்ற எலெக்ட்ரிக் கார்களுடன், வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் போட்டியிட்டு வருகிறது. இந்தியாவில் கியா இவி6 எலெக்ட்ரிக் கார், 59.95 லட்ச ரூபாய் முதல் 64.95 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு கொண்டுள்ளது. இதுவும் எக்ஸ் ஷோரூம் விலைதான். கியா இவி6 எலெக்ட்ரிக் காரை காட்டிலும், வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காரின் விலை குறைவு.

இந்த சூழலில் முன்பதிவு செய்திருந்த வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் கார்களை டெலிவரி செய்யும் பணிகளை வால்வோ நிறுவனம் தற்போது தொடங்கியுள்ளது. இந்தியாவின் விலை குறைவான சொகுசு எலெக்ட்ரிக் கார் என்பதுடன் மட்டுமல்லாது, வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காருக்கு இன்னும் பல்வேறு பெருமைகள் உள்ளன.

இந்தியாவில் வால்வோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார், இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் முதல் சொகுசு எலெக்ட்ரிக் கார் போன்றவை இதில் குறிப்பிடத்தகுந்தவை. கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அருகே உள்ள ஒசகோட்டையில் வால்வோ நிறுவனத்தின் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்குதான் எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் கார் அசெம்பிள் செய்யப்படுகிறது.

வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காரை ஏற்கனவே சுமார் 500 வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து விட்டனர். இதில், சுமார் 100 வாடிக்கையாளர்களுக்கு நடப்பாண்டு இறுதிக்குள்ளாகவே எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காரை டெலிவரி செய்வதற்கு வால்வோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 மைல்கள் என்ற வேகத்தை வெறும் 5 வினாடிகளுக்கு உள்ளாகவே எட்டி விடும்.

அத்துடன் வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காரின் பவர் அவுட்புட்டும் மிரட்டலாக உள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரின் பவர் அவுட்புட் 408 ஹெச்பி மற்றும் 660 என்எம் ஆகும். வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காரில், 78 kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 418 கிலோ மீட்டர்கள் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 10, 2022, 17:07 [IST]
English summary
India s most affordable luxury electric car s deliveries now underway
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+