ரொம்ப பாதுகாப்பான எலெக்ட்ரிக் கார்கள் எது? வேணும்னே வந்து மோதினாலும் இந்த கார்கள் நம்மை பாதுகாக்கும்!
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட எலெக்ட்ரிக் கார்களின் லிஸ்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

கார்களில் பயணிக்கும்போது என்னதான் நாம் அதிக கவனத்துடனும், பாதுகாப்புடனும் பயணித்தாலும் பிற வாகனங்களினால் நாம் சில நேரங்களில் கசப்பான அனுபவங்களைச் சந்திக்க நேரிடுகின்றது. ஏன் ஒரு சிலரின் மறைவிற்கு, பிறரின் அஜாக்கிரதையான ரைடிங் ஸ்டைலே காரணமாக இருக்கின்றது.

இந்த மாதிரியான ஆபத்தான சூழல்களில் அதீத பாதுகாப்பை வழங்கக் கூடிய வசதிக் கொண்ட கார்கள் பல நம் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அதாவது, பெரியளவில் மோதலில்கூட நல்ல பாதுகாப்பை வழங்கக் கூடிய கார்கள் நம் இந்திய சந்தையில் விற்பனைத்துக் கொண்டிருக்கின்றன.

அந்தவகையில், எலெக்ட்ரிக் கார் வெர்ஷனில் அதிக பாதுகாப்பு திறன்களுடன் விற்பனைக்குக் கிடைக்கும் குறிப்பிட்ட சில கார் மாடல்கள் பற்றிய விபரங்களையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

நாம் இந்த லிஸ்டில் டாடா டிகோர் இவி, ஹூண்டாய் கோனா இவி, எம்ஜி இசட்எஸ் இவி மற்றும் பிஒய்டி அட்டோ3 ஆகிய எலெக்ட்ரிக் கார்களின் சிறப்புகள் மற்றும் பாதுகாப்பு ரேட்டிங் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டாடா டிகோர் இவி (Tata Tigor EV)
இந்தியாவின் மிக மலிவு விலைக் கொண்ட கார் என்ற புகழுக்கு சொந்தக்காரராக டியாகோ இவி விற்பனைக்கு வரும் வரையில் இருந்த எலெக்ட்ரிக் காரே டாடா டிகோர் இவி. இந்தியாவில் அதீத பாதுகாப்பு வசதிகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும் எலெக்ட்ரிக் கார்களில் இதுவும் ஒன்று என்பது கூடுதல் சிறப்பு தகவல் ஆகும். அதேவேலையில், இதுவே இந்தியாவின் முதல் அதிக பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் ஆகும்.

இந்தியா தயாரிப்பான டிகோர் இவி குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் ஐந்திற்கு நான்கு ஸ்டார்களை பெற்றது. இது இக்கார் அதீத பாதுகாப்பு திறன்மிக்கது என்பதற்காக சான்றாக அமைந்தது. இக்கார் 2021 ஆகஸ்டிலேயே மோதல் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆய்வின்போது பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 17க்கு 12 புள்ளிகளையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பில் 49க்கு 37.24 புள்ளிகளையும் பெற்று அசத்தியது. இந்த எலெக்ட்ரிக் காரின் விலை ரூ. 12.24 லட்சம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஹூண்டாய் கோனா இவி (Hyundai Kona EV)
இந்தியாவில் விற்பனைக்கு வந்த முதல் எலெக்ட்ரிக் கார் எஸ்யூவி காரே ஹூண்டாய் கோனா. இந்த மின்சார வாகனம் மிக மிக அதிகாப்பானது என்கிற ரேட்டிங்கை ஏஎன்சிஏபி அமைப்பிடம் இருந்து பெற்றிருக்கின்றது. இது நடத்திய மோதல் ஆய்வில் 37 புள்ளிகளுக்கு 35.07 புள்ளிகளை பெற்று அசத்தியது.

குறிப்பாக, இந்த மோதல் ஆய்வில் காரின் முகப்பு பகுதி மிகவும் அசாத்தியமானது தனி திறனை வெளிப்படுத்தியிருக்கின்றது. கடுமையான மோதலிலும் பெரியளவு பாதிப்பைச் சந்திக்காமல் அது அசத்தியது. இந்த மின்சார எஸ்யூவி கார் தற்போது இந்திய சந்தையில் ரூ. 23.84 லட்சம் தொடங்கி ரூ. 24.03 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது.

எம்ஜி இசட்எஸ் இவி (MG ZS EV)
இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் மற்றுமொரு அதீத பாதுகாப்பு திறன்மிக்க எலெக்ட்ரிக் காராகக எம்ஜி இசட்எஸ் இவி இருக்கின்றது. யூரோ என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் இந்த கார் மிக அதிக புள்ளிகளைப் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்தது. அதாவது, பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 90 சதவீதமும், சிறுவர்களுக்கான பாதுகாப்பில் 85 சதவீத புள்ளளையும் இக்கார் பெற்றது.

இந்த மின்சார வாகனம் தற்போதைய நிலவரப்படி ரூ. 22.58 லட்சம் தொடங்கி ரூ. 26.50 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எம்ஜி நிறுவனம் இந்த மின்சார காரில் பாதுகாப்பு அம்சங்களாக முன் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் ஏர் பேக்குகள், சீட் பெல்ட் ரிமைண்டர்கள் என எக்கசக்க அம்சங்களை வழங்கியிருக்கின்றது.

இதுமாதிரியான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே மேலே பார்த்த மூன்று எலெக்ட்ரிக் கார்களும் அதீத பாதுகாப்பானவை என்கிற புகழைச் சூடியிருக்கின்றன. இதேபோல் அதீத பாதுகாப்பு திறன்மிக்க கார் என்ற பட்டத்தை சமீபத்தில் இந்தியாவில் வெளியீட்டைப் பெற்ற மற்றொரு எலெக்ட்ரிக் காரும் பெற்றிருக்கின்றது. சீன நிறுவனமான பிஒய்டி அறிமுகப்படுத்திய அட்டோ 3 மின்சார காரே அதுவாகும்.

இந்த எலெக்ட்ரிக் காரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், இது விற்பனைக்கு வர இருப்பதை முன்னிட்டு ஏற்கனவே புக்கிங் பணிகள் தொடங்கிவிட்டன. ரூ. 50 ஆயிரம் முன் தொகையில் புக்கிங் பணிகள் தொடங்கியுள்ளன. காரை புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வரும் 2023 ஜனவரியில் டெலிவரி கொடுக்கப்பட இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

முதல் கட்டமாக 500 வாடிக்கையாளர்களுக்கே அந்த மாதத்தில் கார்கள் டெலிவரி கொடுக்கப்பட இருக்கின்றது. இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களாக 7 ஏர் பேக்குகள், 360 டிகிரி கேமிரா, ஏபிஎஸ், இஎஸ்சி, டிராக்சன் கன்ட்ரோல், ஹில் டிசன்ட் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அடாஸ் தொழில்நுட்பமும் இக்காரில் வழகப்பட்டிருக்கின்றது.

இதன் வாயிலாக தானியங்கி பிரேக்கிங், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங், லேன் கீப்பிங் அசிஸ்ட், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் முன்-பின் பக்க கொலிசன் வார்னிங் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளை பெற்றுக் கொள்ள முடியும். இதுமாதிரியான சூப்பரான பாதுகாப்பு அம்சங்களை இந்த கார் கொண்டிருக்கின்ற காரணத்தினால் யூரோ என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் இக்கார் மிக அதிக புள்ளிகளைப் பெற்று 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற மின்சார கார் என்ற புகழ் மகுடத்தைச் சூடியது.


Click it and Unblock the Notifications








