இந்தியால எஸ்யூவி கார்களுக்குதான் டிமாண்ட் அதிகம்... அதிலும் இந்த 3 கார்களுக்கு சிவப்பு கம்பளம் வரவேற்புதான்!

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியால எஸ்யூவி கார்களுக்குதான் டிமாண்ட் அதிகம்... அதிலும் இந்த 3 கார்களுக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு கிடைச்சிட்டிருக்கு!

இந்தியாவில் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களுக்கு சமீப சில காலமாக வரவேற்பு பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. அதாவது, இந்த எஸ்யூவி ரக கார்களுக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பை இந்தியர்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றனர். அதிலும், குறிப்பிட்ட மூன்று காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களுக்கு நம் நாட்டினர் வழங்கிக் கொண்டிருக்கும் வரவேற்பானது ஏகபோகமானதாகக் காட்சியளிக்கின்றது.

இந்தியால எஸ்யூவி கார்களுக்குதான் டிமாண்ட் அதிகம்... அதிலும் இந்த 3 கார்களுக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு கிடைச்சிட்டிருக்கு!

அவை எந்தெந்த கார் மாடல்கள் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். அதாவது, இந்தியாவில் மிக சிறப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்கள் பற்றிய விபரத்தையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். மூன்று பெஸ்ட் மாடல்களின் பட்டியலையே இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்தியால எஸ்யூவி கார்களுக்குதான் டிமாண்ட் அதிகம்... அதிலும் இந்த 3 கார்களுக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு கிடைச்சிட்டிருக்கு!

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza)

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக இருக்கின்றது. நிறுவனத்தின் இந்த தயாரிப்பு மட்டும் 15,193 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கின்றது. இதே கார் மடால் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 12,906 யூனிட்டுகள் விற்பனையாகின என்பது குறிப்பிடத்தகுந்தது. இதைக் காட்டிலும் நடப்பாண்டில் பெற்றிருப்பது 18 சதவீத அதிக விற்பனை வளர்ச்சியாகும்.

இந்தியால எஸ்யூவி கார்களுக்குதான் டிமாண்ட் அதிகம்... அதிலும் இந்த 3 கார்களுக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு கிடைச்சிட்டிருக்கு!

நிறுவனம் சமீபத்தில் பிரெஸ்ஸாவிற்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கில் அதன் அப்டேட் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த யுக்தி நிறுவனத்திற்கு நல்ல பலனை வழங்கியிருக்கின்றது என கூறலாம். இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே கடந்த ஆண்டு பழைய வெர்ஷன் விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு கிடைத்ததைக் காட்டிலும் மிக சூப்பரான வரவேற்பைப் புதிய வெர்ஷன் பிரெஸ்ஸா பெற்றிருக்கின்றது.

இந்தியால எஸ்யூவி கார்களுக்குதான் டிமாண்ட் அதிகம்... அதிலும் இந்த 3 கார்களுக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு கிடைச்சிட்டிருக்கு!

டாடா நெக்ஸான் (Tata Nexon)

இந்தியாவின் இரண்டாவது பெஸ்ட் செல்லிங் காம்பேக்ட் எஸ்யூவி ரக காராக மாறியிருக்கின்றது டாடா நெக்ஸான். இது ஓர் அதிக பாதுகாப்பு வசதிகள் நிறைந்த வாகனம் ஆகும். மிக உறுதியான உடல் தோற்றம், அதிக சிறப்பு வசதிகளைக் கொண்ட காராக இவ்வாகனத்தை டாடா உருவாக்கியிருக்கின்றது. இதன் விளைவாக இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்தியால எஸ்யூவி கார்களுக்குதான் டிமாண்ட் அதிகம்... அதிலும் இந்த 3 கார்களுக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு கிடைச்சிட்டிருக்கு!

பல மடங்கு விற்பனை வளர்ச்சியைப் பெறும் அளவிற்கு இந்த காருக்கு டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. 2021 ஆம் ஆண்டில் 10,006 யூனிட்டுகளாக இருந்த இக்காரின் விற்பனை 2022 ஜூலையில் 15,085 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளன. இந்த விற்பனை எண்ணிக்கைக் கடந்த ஆண்டைக் காட்டிலும் 51 சதவீதம் அதிக விற்பனையாகும். இக்கார் இந்திய சந்தையில் ஐசிஇ (பெட்ரோல் மற்றும் டீசல்) வெர்ஷனில் மட்டுமின்றி எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்தியால எஸ்யூவி கார்களுக்குதான் டிமாண்ட் அதிகம்... அதிலும் இந்த 3 கார்களுக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு கிடைச்சிட்டிருக்கு!

இதன் மின்சார வெர்ஷனுக்கும் நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. நெக்ஸான் இவி பிரைம் மற்றும் நெக்ஸான் இவி மேக்ஸ் என இரு விதமான மாடல்களாக அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்தகைய பன்முக தேர்வின் காரணமாகவே இந்தியர்களிடத்தில் நெக்ஸான் மிக சிறப்பான வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்தியால எஸ்யூவி கார்களுக்குதான் டிமாண்ட் அதிகம்... அதிலும் இந்த 3 கார்களுக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு கிடைச்சிட்டிருக்கு!

டாடா பஞ்ச் (Tata Punch)

இந்தியாவின் மூன்றாவது பெஸ்ட் செல்லிங் சப்-காம்பேக்ட் எஸ்யூவி ரக காராக பஞ்ச் இருக்கின்றது. இந்த கார் விற்பனைக்கு அறிமுகமாகி சில மாதங்களே ஆகின்றன. இந்த நிலையிலேயே இந்தியர்களின் பிரியமான காராக அது மாறிவிட்டது. தெளிவாகக் கூற வேண்டுமானால் 12,006 யூனிட்டுகளாக விற்பனை உள்ளன. இந்த காரை டாடா மோட்டார்ஸ் 2021 அக்டோபரிலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இத்தகைய விற்பனை எண்ணிக்கையால் டாடா மோட்டார்ஸின் பெஸ்ட் செல்லிங் காராக மாறியிருக்கின்றது.

இந்தியால எஸ்யூவி கார்களுக்குதான் டிமாண்ட் அதிகம்... அதிலும் இந்த 3 கார்களுக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு கிடைச்சிட்டிருக்கு!

டாடாவின் பிற தயாரிப்புகளைப் போலவே இதுவும் அதிக பாதுகாப்பான காராகும். ஐந்து நட்சத்திர ரேட்டிங்கை பெற்றிருக்கின்றது. இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களாக டூயல் ஏர் பேக் முன் பக்கத்திலும், ஏபிஎஸ், ஐசோஃபிக்ஸ் ஆங்கர் உள்ளிட்ட எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்தியால எஸ்யூவி கார்களுக்குதான் டிமாண்ட் அதிகம்... அதிலும் இந்த 3 கார்களுக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு கிடைச்சிட்டிருக்கு!

இதுதவிர, எந்தமாதிரியான சாலையாக இருந்தாலும் சமாளிக்கக் கூடிய திறனும் இக்காருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ரூ. 5.93 லட்சம் என்ற மிகக் குறைவான விலையிலேயே டாடா பஞ்ச் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் அக்காரின் எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 6, 2022, 10:37 [IST]
English summary
India s top selling 3 compact suv car s list
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+