எர்டிகா காருக்கு இவ்வளவு மவுசா.... என்ன இன்னோவா கார லிஸ்டலயே காணும்.... இந்தியாவின் டாப் 3 எம்பிவி கார்கள்...
இந்தியாவில் எம்பிவி கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனாவிற்கு பிறகு மக்கள் எம்பிவி கார்களை அதிகம் வாங்கத் துவங்கிவிட்டனர். இப்படியாக கடந்த மே மாதம் இந்தியாவில் விற்பனையான டாப் 3 எம்பிவி கார்கள் குறித்துக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் கொரோனாவிற்கு பிறகு கார் வாங்கும் மக்களின் மனநிலை மாறி வருகிறது. மக்கள் பலர் குடும்பமாக பயணிக்கும் எம்பிவி கார்களை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இதனால் 2020ம் ஆண்டிற்கு பிறகு எம்பிவி ரக கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதம் மட்டும் மொத்தம் 33,000 எம்பிவி ரக வாகனங்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன. இந்தியாவில் இந்த ரக கார்களில் ஹூண்டாய் அல்காஷர், கியா கேரன்ஸ், மாருதி எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 ஆகிய கார்கள் இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்றன. இந்த பதிவில் இந்தியாவில் கடந்த மே மாதம் விற்பனையான டாப் 3 எம்பிவி கார்களை பற்றிக் காணலாம்

மாருதி சுஸூகி எக்ஸ்எல்6
மாருதி சுஸூகி நிறுவனம் பிரிமியம் எம்பிவி காராக இந்த எக்ஸ்எல்6 கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் சமீபத்தில் தான் அறிமுகமானது. இந்த கார் 6 சீட்டர் கொண்ட எம்பிவி காராக விற்பனையாகி வருகிறது. கடந்த மே மாதம் மட்டும் மாருதி சுஸூகி நிறுவனம் மொத்தம் 4,085 கார்களை விற்பனை செய்து டாப் 3 பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறது. இந்த கார் பிரபலமான டொயோட்டா இன்னோவா காரின் விற்பனையை விட அதிகமான விற்பனையைப் பெற்றுள்ளது. இந்த காருக்கு மக்கள் மத்தியில் நல்லவரவேற்ப்பு இருக்கிறது.

கியா கேரன்ஸ்
கியா நிறுவனம் தனது 3 வரிசை சீட்கள் கொண்ட எம்பிவி கார்கள் பிரிவில் கேரன்ஸ் என்ற காரை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகிறது. இந்த கார் கடந்த பிப்ரவரி மாதம் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகம் ஆனது முதல் இந்த காருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த காருக்கு புக்கிங்களும் குவிந்து வருகின்றன. மாருதி எக்ஸ்எல்6 காருக்கு போட்டியாக இந்த கார் களம் இறக்கப்பட்டது.

இந்த கார் கடந்த மே மாதம் மொத்தம் 4,612 கார்களை விற்பனை செய்துள்ளது. மாருதி எக்ஸ்எல்6 காரின் விற்பனையைத் தாண்டி இந்த கார் டாப் 3 பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது. கியா நிறுவனமே இந்த காருக்கு இவ்வளவு வரவேற்ப்பு இருக்கும் என நினைக்கவில்லைபோல தற்போது எம்பிவி ரக கார்களிலேயே அதிக காத்திருப்பு காலம் கொண்ட கார் இந்த கியா கேரன்ஸ் கார் தான்.

மாருதி சுஸூகி எர்டிகா
மாருதி நிறுவனம் 7 சீட்டர் காராக தனது எர்டிகா காரை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் கடந்த மே மாதம் மட்டும் 12,226 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் கடந்த ஏப்ரல் மாதம் தான் வெளியானது. இந்த கார் மார்கெட்டில் ரூ8.35 லட்சம் முதல் ரூ12.79 லட்சம் வரை விற்பனையாகிறது. இந்த கார் கடந்த 2018ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்பொழுது முதல் இந்த காருக்கு மார்கெட்டில் செம மவுசு உள்ளது.

இந்த கார் அறிமுகமாகும் முன்பு வரை இந்த கேட்டகிரிங் கிங்காக இருந்தது டொயோட்டா இன்னோவா கார் தான் தற்போது இன்னோவா க்ரைஸ்டா என்ற பெயரில் விற்பனையாகி வருகிறது. எர்டிகா அறிமுகமான பின்பு இன்னோவா க்ரைஸ்டாவின் மார்கெட் பங்கு குறையத் துவங்கிவிட்டது. இன்று மாருதி சுஸூகி எர்டிகா தான் விற்பனையில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. இந்த வாகனத்தின் இன்ஜின், மற்றும் பல வசதிகள் மக்கள் இந்த காரை ரசிக்கும்படி ஈர்த்துள்ளது.

இது போக இந்தியாவில் எம்பிவி கார்களில் டொயோட்டோ இன்னோவா க்ரைஸ்டா, ரெனால்ட் ட்ரைபர், ஹூண்டாய் அல்காஷர், மஹிந்திரா மராஸ்ஸோ ஆகிய கார்கள் 7 சீட்டர்கள் ஆப்ஷன்களுடன் மார்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இந்த கேட்டகிரியில் குறைவான கார்கள் இருப்பதால் போட்டிகள் பலமாக இருக்கிறது. எதிர்காலத்தில் இந்த கேட்டகிரியில் கார்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என நாம் தாராளமாக எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








