டாடாவிற்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்... இந்தியா ராணுவமே டாடாவை தான் நம்புது!
இந்திய விமானப்படை தனது வாகன பயன்பாட்டிற்காக 12 டாடா நெக்ஸான் இவி காரை வாங்கியுள்ளது. தொடர்ந்து அதிகமான கார்களை வாங்கமுடிவு செய்துள்ளது.
இந்திய விமானப்படையில் கார்களின் பயன்பாடும் இருக்கிறது. அதிகாரிகள் பயன்படுத்துவது, ஆய்வுக்காகச் செல்வதற்காக எனப் பல பணிகளுக்காக இந்த கார்கள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது வரை இதில் பெட்ரோல்/டீசல் கார்களே பயன்படுத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில் இந்திய விமானப்படையில் கார்பன் எமிஷனை கட்டுப்படுத்த தாங்கள் பயன்படுத்தும் கார்களை எலெக்ட்ரிக் கார்களாக மாற்ற முடிவு செய்தது. இதையடுத்து இந்திய விமானப்படை இதற்காக டாடா நிறுவனத்தை அணுகி அவர்களுக்காக 12 நெக்ஸான் கார்களை வாங்கினர். இந்த கார்கள் இந்திய விமானப்படைக்கு டெலிவரி செய்யப்பட்ட நிலையில்
இந்தியாவின் ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சவுத்ரி இந்த 12 கார்களையும் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விமானப்படையின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். தற்போது வெறும் 12 கார்களை மட்டும் தங்கள் பயன்பாட்டிற்காக வாங்கியுள்ள நிலையில் விரைவில் அதன் எண்ணிக்கையை அதிகப்படுத்த இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது.
அதன்படி தற்போது பயன்பாட்டில் உள்ள பெட்ரோல், டீசல் வாகனங்கள் அதன் ஆயுளை இழக்கும் போது அதற்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது. இந்திய விமானப்படை மட்டுமல்ல இந்திய ராணுவமும் தற்போது மெல்ல மெல்ல எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டிற்கு மாறி வருகின்றன.
தற்போது இந்திய ராணுவத்தில் எலெக்ட்ரிக் பஸ்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் முயற்சி நடந்து வருகிறது. இதில் தற்போது இந்திய விமானப்படையும் சேர்ந்துள்ளது. இது இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசுவை குறைக்கும் அரசின் நோக்கத்திற்கு உறுதுணையாக நிற்பதற்காக இதைச் செய்துள்ளது.
இதே போல இந்தியாவில் மொத்தம் 137 விமான நிலையங்களில் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்காக விமான நிலையங்களில் சார்ஜிங் ஸ்டேஷன் ஆகியவற்றை அமைக்க ஏற்பாடுகள் நடக்கிறது. வரும் 2030ம் ஆண்டிற்குள் முழுமையாக எலெக்ட்ரிக் வாகனம் ஏர்போர்ட்களில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா 10 எலெக்ட்ரிக் கார்களைதங்கள் தலைமையக பயன்பாட்டிற்காகப் புதுடில்லியில் வாங்கியுள்ளது. தற்போது ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவிடம் நாடு முழுவதும் 45 எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








