படத்துல இருக்க எல்லா காருமே ஒற்றை இந்தியருக்கு சொந்தமானவை... கிட்டதட்ட 100 சொகுசு கார்கள் இருக்கிறதாம்!

இந்தியாவைச் சேர்ந்த ஓர் செல்வந்தரிடத்தில் நூற்றுக் கணக்கான சொகுசு கார்கள் இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

படத்துல இருக்க எல்லா காருமே ஒற்றை இந்தியருக்கு சொந்தமானவை... கிட்டதட்ட 100 சொகுசு கார்கள் இருக்கிறதாம்!

இந்தியாவில் மிக அதிகளவில் சொகுசு கார்களைப் வைத்திருப்போர்களின் பட்டியலில் அம்பானி குடும்பத்தினர் முதல் இடத்தில் இருப்பர். ஏனெனில் இவர்களிடத்தில் எண்ணற்ற சொகுசு கார்கள் உள்ளன. அம்பானி குடும்பத்தினர் வசிக்கும் மும்பை அன்டிலியா இல்லத்தில் கார்களை நிறுத்துவற்கென்றே பல தளங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

படத்துல இருக்க எல்லா காருமே ஒற்றை இந்தியருக்கு சொந்தமானவை... கிட்டதட்ட 100 சொகுசு கார்கள் இருக்கிறதாம்!

இந்த குடும்பத்தினர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இந்தியாவைச் சேர்ந்த ஓர் செல்வந்தர் நூற்றுக் கணக்கான சொகுசு கார்களைப் பயன்படுத்தி வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் யார்?, என்ன மாதிரியான ஆடம்பர கார்களை அவர் பயன்படுத்தி வருகின்றார்?, என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

படத்துல இருக்க எல்லா காருமே ஒற்றை இந்தியருக்கு சொந்தமானவை... கிட்டதட்ட 100 சொகுசு கார்கள் இருக்கிறதாம்!

குபேர் கிரைன்ஸ் மற்றும் ஸ்பைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் விகாஸ் மலு. இவரே அந்த நூற்றுக் கணக்கான சொகுசு கார்களுக்கு உரிமையாளர் ஆவார். இவரின் கார் கராஜை படம் எடுக்க வேண்டும் என்பதற்காகவே பிரபல யுட்யூப் சேனலைச் சேர்ந்த ஓர் இளம் பெண்ணும், அவரது குழுவினரும் துபாயில் இருந்து தனி விமானம் பிடித்து இந்தியா வந்திருக்கின்றனர்.

படத்துல இருக்க எல்லா காருமே ஒற்றை இந்தியருக்கு சொந்தமானவை... கிட்டதட்ட 100 சொகுசு கார்கள் இருக்கிறதாம்!

இதுகுறித்த தகவலை அந்த இளம்பெண்ணே வீடியோ வாயிலாக கூறியுள்ளார். எம்ஓ விளாக்ஸ் எனும் யுட்யூப் சேனலிலேயே விகாஷ் மலு பயன்படுத்தும் கார்கள் பற்றிய வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவை வரும் ஸ்லைடரில் நீங்களும் காணலாம்.

விகாஷ் மலு மட்டுமின்றி அவரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பாதுகாவலர்களுக்கும் ஆடம்பர கார்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற கார்களிலேயே அவர்கள் விகாஷ் மலுவுக்கு பாதுகாப்பு வழங்குகின்றனர். இந்த கார்களுடன் சேர்த்து இன்னும் பல விலையுயர்ந்த கார்களும் அங்கிருந்த வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

படத்துல இருக்க எல்லா காருமே ஒற்றை இந்தியருக்கு சொந்தமானவை... கிட்டதட்ட 100 சொகுசு கார்கள் இருக்கிறதாம்!

அவை ஒவ்வொன்றும் யுட்யூப் சேனல் சார்பில் வந்த இளம்பெண்ணை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருந்தன. அவரை மட்டுமா நம்மையும்தான் அவை வியக்கை வைத்துள்ளன. ஏனெனில், அது கார் நிறுத்துமிடத்தைப் போன்று காட்சியளிக்கவில்லை. கார்கள் காய்த்து தொங்கும் மரத்தைப் போன்று எக்கசக்க ஆடம்பர கார்களுடன் காட்சியளிக்கின்றது.

படத்துல இருக்க எல்லா காருமே ஒற்றை இந்தியருக்கு சொந்தமானவை... கிட்டதட்ட 100 சொகுசு கார்கள் இருக்கிறதாம்!

லம்போர்கினி உருஸ் எஸ்யூவி கார் தொடங்கி ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் வரை பன்முக ஆடம்பர கார்கள் அங்கு நின்றுக் கொண்டிருந்தன. இதுவே, ஒரு நிமிஷம் இளம் பெண்ணை உறைய வைக்கும் வகையில் இருந்தது. குறிப்பாக, அங்கு நின்றுக் கொண்டிருந்த கார்கள் பல உரிமையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப ஹெவியாக மாடிஃபை செய்யப்பட்டிருந்தது. அதிக கவர்ச்சிக் கூட்டப்பட்ட கார்களாக இருந்தன.

படத்துல இருக்க எல்லா காருமே ஒற்றை இந்தியருக்கு சொந்தமானவை... கிட்டதட்ட 100 சொகுசு கார்கள் இருக்கிறதாம்!

உதாரணமாக, லம்போர்கினி உருஸ் கருப்பு மற்றும் ஆரஞ்சு என இரு வண்ண உட்புறத்தாலும், பிரேக் காலிபர்கள் ஆரஞ்சு நிற ஷேடிலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இது அக்காருக்கு கூடுதல் ஸ்போர்ட்டி தோற்றத்தை வழங்கும் வகையில் இருந்தது. இதுபோலவே பல கார்கள் கூடுதல் அலங்காரங்கள் மற்றும் சிறப்பு வசதிகளுடன் இருந்தன. கவர்ச்சி அம்சங்கள் மட்டுமின்றி சில பிரத்யேக தொழில்நுட்ப அம்சங்களும் அங்கிருந்த கார்களில் பொருத்தப்பட்டிருந்தன.

படத்துல இருக்க எல்லா காருமே ஒற்றை இந்தியருக்கு சொந்தமானவை... கிட்டதட்ட 100 சொகுசு கார்கள் இருக்கிறதாம்!

அந்தவகையில், ஒயர்லெஸ் ரேடியோ பாதுகாப்பாளர்கள் வாகனத்துடன் கம்யூனிகேட் செய்யும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக மிகவும் கவர்ச்சியான அம்சம் கொண்ட காராக பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி இருக்கின்றது. இது மன்சோரி எனும் பிரத்யேக வாகன மாடிஃபிகேஷன் கிட்டால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது.

படத்துல இருக்க எல்லா காருமே ஒற்றை இந்தியருக்கு சொந்தமானவை... கிட்டதட்ட 100 சொகுசு கார்கள் இருக்கிறதாம்!

ஆகையால், மிகவும் தனித்துவமான ஓர் காராக இது காட்சியளிக்கின்றது. இதனைத்தொடர்ந்து ஸ்போர்ட்ஸ் வாகன பிரியர்களின் மனம் கவர்ந்த காரான லம்போர்கினி ஹுராகேன் எஸ்டிஓ-வும் அந்த கராஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த ஒற்றை காரின் விலை மட்டும் ரூ. 4.99 கோடிகள் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

படத்துல இருக்க எல்லா காருமே ஒற்றை இந்தியருக்கு சொந்தமானவை... கிட்டதட்ட 100 சொகுசு கார்கள் இருக்கிறதாம்!

இதைத்தொடர்ந்து, அந்த கராஜில் பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர், பென்டேகா, மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்600 எஸ்யூவி, டொயோட்டா டன்ட்ரா பிக்-அப், ஃபோர்டு மஸ்டாங், ஸ்பெஷல் அம்சங்கள் பன்மடங்கு சேர்க்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் உள்ளிட்ட கார்களும் இருந்தன. இவற்றில் பெரும்பாலான கார்களில் 0009 என்ற பதிவெண் பயன்படுத்தப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 16, 2022, 17:36 [IST]
English summary
Indian billionaire vikas malu and his car garage video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+