இப்படி ஒரு காரை இந்தியர்கள் கண்ணால் பார்ப்பதே அதிசயம்... இதையும் ஒருத்தர் வாங்கியிருக்காரு....

லாம்போர்கினி நிறுவனம் உலகில் வெறும் 250 கார்களே தயாரித்த அவென்டேடார் அல்டிமா ரோடுஸ்டர் காரில் ஒரு காரை இந்தியாவில் ஒருவர் வாங்கியுள்ளார். இந்த கார் குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இப்படி ஒரு காரை இந்தியர்கள் கண்ணால் பார்ப்பதே அதிசயம் . . . இதையும் ஒருத்தர் வாங்கியிருக்காரு . . .

இத்தாலி நாட்டைச் சேர்ந்த நிறுவனம் லாம்போர்கினி. இந்த நிறுவனத்தைப் பற்றிச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. இந்நிறுவனம் உலகம் முழுவதும் சூப்பர் கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அதிக வேகத்தில் பயணிக்கும் சூப்பர்களுக்காகவே இந்த நிறுவனங்கள் பெயர் பெற்றது. இந்நிறுவனத்தின் ஒரு லிமிட்டட் எடிசன் கார் பற்றித் தான் காணப்போகிறோம்.

இப்படி ஒரு காரை இந்தியர்கள் கண்ணால் பார்ப்பதே அதிசயம் . . . இதையும் ஒருத்தர் வாங்கியிருக்காரு . . .

லாம்போர்கினி நிறுவனம் சமீபத்தில் லார்போர்கினி அவென்டேடார் அல்டிமா என்ற காரை அறிமுகப்படுத்தியது. இதில் இரண்டு வெர்ஷனையும் கொண்டு வந்தது. முதல் வெர்ஷன் கூபே இது வழக்கமான கார் போல இருக்கும் இரண்டாவது வெர்ஷன் ரோடுஸ்டர் இது காரின் ரூஃப் பகுதி இல்லாமல் திறந்த வெளி காராக இருக்கும்.

இப்படி ஒரு காரை இந்தியர்கள் கண்ணால் பார்ப்பதே அதிசயம் . . . இதையும் ஒருத்தர் வாங்கியிருக்காரு . . .

இந்த காரை லாம்போர்கினி நிறுவனம் லிமிட்டட் எடிசனாக வெளியிடுகிறது. அதன்படி கூபே வெர்ஷன் கார்களில் உலகிலேயே வெறும் 350 கார்களும், ரோடுஸ்டர் வெர்ஷன் கார்கள் உலகிலேயே வெறும் 250 கார்களும் மட்டுமே அந்நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது. அதனால் இந்த கார்களை வாங்க லாம்போர்கினி ரசிகர்களிடையே கடும் போட்டி நிலவியது.

இப்படி ஒரு காரை இந்தியர்கள் கண்ணால் பார்ப்பதே அதிசயம் . . . இதையும் ஒருத்தர் வாங்கியிருக்காரு . . .

இந்நிலையில் இந்த லாம்போர்கினி அவென்டேடார் அல்டிமா காரில் இந்தியாவில் லாம்போர்கினி நிறுவனம் டெலிவரி செய்துள்ளது. அதாவது உலகில் வெறும் 250 கார்களே தயாரான இந்த லாம்போர்கினி அவென்டேடார் அல்டிமா ரோடுஸ்டர் காரில் ஒரு கார் இந்தியாவிற்கு வந்திருக்கிறது.

இப்படி ஒரு காரை இந்தியர்கள் கண்ணால் பார்ப்பதே அதிசயம் . . . இதையும் ஒருத்தர் வாங்கியிருக்காரு . . .

லாம்போர்கினி நிறுவனம் இந்த அவென்டேடார் அல்டிமா காரின் இன்ஜினை பொருத்தவரை வி12 இன்ஜினை பொருத்தியுள்ளது. இது வி12 இன்ஜின் உடன் எலெக்ட்ரிக் அசிஸ்டென்ஸாக ஹைபிரிட் பவர் டெரையனையும் வழங்கியுள்ளது.

இப்படி ஒரு காரை இந்தியர்கள் கண்ணால் பார்ப்பதே அதிசயம் . . . இதையும் ஒருத்தர் வாங்கியிருக்காரு . . .

இந்த காரில் உள்ள 6.5 லிட்டர் வி12 இன்ஜின் நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜினாக இருக்கிறது. இது 8500 ஆர்பிஎம்மில் 770 பிஎச்பி பவரையும், 6750 ஆர்பிஎம்மில் 720 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த 6.5 லிட்டர் வி12 இன்ஜினை கொண்டே லாம்போர்கினி அவென்டேடர் அல்டிமா காரில் 1-12-4-9-2-11-6-7-3-10-5-8 என்ற பயரிங் ஆர்டரை கொடுக்கிறது.

இப்படி ஒரு காரை இந்தியர்கள் கண்ணால் பார்ப்பதே அதிசயம் . . . இதையும் ஒருத்தர் வாங்கியிருக்காரு . . .

இன்ஜினை 7 ஸ்பீடு ஆட்டோமேட்டட் மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைத்துள்ளனர். இது 4 வீல்களுக்குமே பவரை வழங்குகிறது. இது கார் குறைந்த வேகத்தில் செல்லும் போது காருக்கு சுறுசுறுப்பாகவும், வேகமாகச் செல்லும் போது காரை நிதானமாகவும் கண்ட்ரோலாகவும் வைத்திருக்கிறது.

இப்படி ஒரு காரை இந்தியர்கள் கண்ணால் பார்ப்பதே அதிசயம் . . . இதையும் ஒருத்தர் வாங்கியிருக்காரு . . .

இந்த லாம்போர்கினி அவென்டேடார் அல்டிமா கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 2.8 நொடிகளிலும் 0-200 கி.மீ வேகத்தை வெறும் 8.7 நொடிகளிலும் கடந்து விடுகிறது. இந்த கார் அதிகபட்ச வேகமாக மணிக்கு 355 கி.மீ வேகத்தில் பயணிக்கக் கூடியது. இதற்கு முக்கியமான காரணம் இதில் உள்ள வி12 இன்ஜின் தான்.

இப்படி ஒரு காரை இந்தியர்கள் கண்ணால் பார்ப்பதே அதிசயம் . . . இதையும் ஒருத்தர் வாங்கியிருக்காரு . . .

இந்த காரும் வழக்கமான லாம்போர்கினி கார் போல கார்பன் பைபர் பாடியை கொண்டுள்ளது. அலுமினியம் மற்றும் ரெட் பிரேம்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் இன்ஜின் கவர், பின்புறம் உள்ள காற்றை உள் இழுக்கும் இன்லெட்கள், ஸ்பாய்லெர்கள், எல்லாம் கார்பன் பைபரில் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற பேனல்கள் எல்லாம் அலுமினியம் மற்றும் மற்ற பாகங்கள் சிந்தெடிக் மெட்டிரியல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்படி ஒரு காரை இந்தியர்கள் கண்ணால் பார்ப்பதே அதிசயம் . . . இதையும் ஒருத்தர் வாங்கியிருக்காரு . . .

இந்த அவென்டேடார் அல்டிகா ரோடுஸ்டர் காரில் முன்பக்கம் 20 இன்ச் வல் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பைரேலி பி ஜீரோ கார்சா 55/30 ZR 20 92Y டயர் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் 21 இன்ச் வீலில் பைரேலி பி ஜீரோ கார்சா 355/25 ZR 21 107Y டயர் பொருத்தப்பட்டுள்ளது.

இப்படி ஒரு காரை இந்தியர்கள் கண்ணால் பார்ப்பதே அதிசயம் . . . இதையும் ஒருத்தர் வாங்கியிருக்காரு . . .

இந்த காரின் சஸ்பென்சனை பொருத்தவரை முன்பக்கம் மேக்னேக்டார் ஹியோலாஜிக் ஆக்டிவ் சிஸ்பென்சன், பின்பக்கம், ஹரிசான்டல் டேம்பர் மற்றும் ஸ்பிரிங் சஸ்பன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கை பொருத்தவரை 400 மிமீ கார்பன் செராமிக் டிஸ்க் பிரேக் உடன் 6 பிஸ்டன் பிக்ஸட் மோனோ பிளாக் கேலிபர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பின்பக்கம் 380 மிமீ கார்பன் செராமிக் டிஸ்க்கள் 4 பிஸ்டர் பிக்ஸட் மோனோ பிளாக் அலுமினியகேலிபர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இப்படி ஒரு காரை இந்தியர்கள் கண்ணால் பார்ப்பதே அதிசயம் . . . இதையும் ஒருத்தர் வாங்கியிருக்காரு . . .

இந்த கார் லார்போர்கினியில் டிசைன் மொழியில் சிறப்பான காராக பார்க்கப்படுகிறது. இதில் மொத்தமே 250 கார்கள் தான் தயார் செய்யப்பட்ட நிலையில் அதில் இதுவும் ஒன்று.மேலும் லாம்போர்கினி கார் இதில் பெர்சனலைசேஷன் ஆப்ஷன்களையும் வழங்குகிறது. வாடிக்கையாளர் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ்டு செய்து தருகிறது. இதனால் இந்த 250 காரும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்கும்.

இப்படி ஒரு காரை இந்தியர்கள் கண்ணால் பார்ப்பதே அதிசயம் . . . இதையும் ஒருத்தர் வாங்கியிருக்காரு . . .

இந்த லாம்போர்கினி அவென்டேடார் அல்டிமா கார் அந்நிறுவனத்தின் பிரபலமான வி12 இன்ஜினை கொண்டுள்ளது. பலரை ஈர்த்துள்ளது. இதில் கொடுக்கப்பட்டுள்ள பவர் டெரைன்கள் பல நாடுகளில் உள்ள எமிஷன் கட்டுப்பாடுகளுக்காகப் பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது. இந்த காரை இந்தியாவில் யார் வாங்கியது? எவ்வளவு விலை கொடுத்து வாங்கினார்கள்? என்ற விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 15, 2022, 17:10 [IST]
English summary
Indian customer got Lamborghini Aventador ultimae roadster which is one of 250
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+