இந்தியாவில் யாரிடமும் இல்லாத காரை வாங்கிய தொழிலதிபர்! விலையைக் கேட்டால் மயக்கமே வந்திடும்!

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக சூப்பர் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. சமீபத்தில் ஐதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவிலேயே விலையுயர்ந்த சூப்பர் காராக மெக்லாரன் 765 எல்டி காரை வாங்கியுள்ளார். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளாக அதிக ஃபெர்பாமென்ஸ் கொண்ட கார்களின் விற்பனை இந்தியாவில் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. லாம்போர்கினி, அஸ்டான் , ஃபெராரி,உள்ளிட்ட கார்கள் இந்தியாவில் அதன் விற்பனையைச் செய்துவருகின்றனர். பல பெரும் பணக்காரர்கள் பலர் இந்த ரக கார்களை வாங்கி வருகின்றனர். இந்த வகையில் நாம் இந்த கார் நிறுவனங்களுடன் கடந்தாண்டு புதிதாக இணைந்த நிறுவனம் மெக்லாரன். இந்நிறுவனம் மும்பையில் டீலர் ஷிப்பை திறந்தது.

இந்தியாவில் யாரிடமும் இல்லாத காரை வாங்கிய தொழிலதிபர்! விலையைக் கேட்டால் மயக்கமே வந்திடும்!

இந்தியாவில் மெக்லாரன் நிறுவனத்தின் பிஸ்னஸை இன்ஃபினிட்டி க்ரூப் என்ற நிறுவனம் கையாண்டு வருகிறது. மெக்லான் இந்தியாவிற்கு வந்த பின்பு இந்தியாவின் அந்நிறுவனத்தின் ஜிடி, ஆர்டூரா, 720 எஸ், 720எஸ் ஸ்பைடர், 765 எல்டி மற்றும் 765 எல்டி ஸ்பைடர் ஆகிய சூப்பர் கார்கள் எல்லாம் இந்தியாவிலேயே நேரடியாக வாங்க முடியும் என்ற நிலை வந்தது. இதன் மூலம் மெக்லாரன் 750 எல்டி ஸ்பைடர் கார் இந்தியாவிலேயே அதிக விலை கொண்ட சூப்பர் காராக இருக்கிறது. இந்நிலையில் ஐதிரபாத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த கார் முதன் முறையாக வாங்கியுள்ளார்.

ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நசீர் கான், இவர் தனது இஸ்டாகிராம் போஸ்டில் சமீபத்தில் மெக்லாரன் 765 எல்டி ஸ்பைடர் எடிசன் காருடன் எடுத்த புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இந்த காரை தான் வாங்கியுள்ள செய்தியை வெளியிட்டிருந்தார். இவர் மெக்லாரன் எல்டி 765 ஸ்பைடர் எடிசன் காரின் எம்எஸ்ஓ வால்கனோ ரெட் ஷெட் நிற காரை வாங்கியுள்ளார். இந்த கார் பார்க்கச் சிறப்பாகவும் ஸ்போர்ட்டி லுக் உடனும் இருக்கிறது.

இந்தியாவில் இந்த காரை முதன் முதலில் வாங்கியது இவராக தான் இருக்கும். இந்த காரில் இவர் ஸ்பெஷலாக ஏதாவது கஸ்டமைசேஷன் செய்துள்ளாரா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இருந்தாலும் இந்த கார் பல ஸ்பெஷல் அம்சங்களைக் கொண்ட காராக இருக்கிறது. மெக்லாரன் தயாரிப்பிலேயே அதிக வேகமான கன்வெர்டபிள் கார் இது தான். இந்த கார் கூபே வெர்ஷனில் சிறப்பான ஏரோ டைனமிக்ஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த கார் முழுவதும் கார்பன் ஃபைபரை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் பம்பர், ஸ்பிலிட்டர், சைடு ஸ்கிட்ஸ், பின்பக்க பம்பர் ஆகின அக்ரஷிவ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த கார் வேகமான கர்வெர்டபிள் காராகும் இன் ரூஃப் 11 நொடியில் கன்வெர்ட் ஆகி விடுகிறது. இந்த காரின் சரியான விலை குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. ஆனால் ரூ12 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையாக இருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது. மெக்லாரன் நிறுவனம் இந்த இந்த 765 எல்டி காரை லிமிட்டெட் எடிசனாக வெறும் 765 கார்களை மட்டுமே தயாரித்துள்ளது. இதுவும் இந்த காருக்கான ஒரு ஸ்பெஷாலிட்டி தான்.

இந்த மெக்லாரன் 765 எல்டி ஸ்பைடர் காரின் இன்ஜினை பொருத்தவரை 4.0 லிட்டர் ட்வின்-டர்போ சார்ஜ்டு வி8 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 765 பிஎஸ் பவரையும் 800 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 7 ஸ்பீடு ஸீக்கொன்ஷியல் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு ரியல் வீல் டிரைவ் காராகும். மெக்லாரன் பிராண்ட் கார் இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. நீண்ட நாட்களாக இந்த கார்களுக்கு இந்தியாவில் ரசிகர்கள் இருந்தாலும் அதன் விற்பனை தற்போது தான் துவங்கியுள்ளது.

பல கார் விரும்பிகள் மெக்லாரன் சூப்பர் காரை இந்தியாவில் வாங்க விரும்பினர். இதில் நசீர் கான் தான் முதன் முதலாக 765 எல்டி ஸ்பைடர் காரை இந்தியாவில் வாங்கியுள்ளார். முன்னதாக பல மெக்லாரன் சூப்பர் கார்கள் இந்தியாவிற்கு வந்துள்ளது. இந்தியாவில் இந்நிறுவனம் துவங்கப்பட்ட போதே மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் 720 எஸ் ஸ்பைடர் காரை வாங்கினார். நசீர் கான் வாங்கிய 765 எல்டி ஸ்பைலர் கார் அவரது முதல் சூப்பர் கார் கிடையாது. இவரிடம் ரோல்ஸ் ராய்ஸ் கல்லீனன் பிளாக் பேட்ஜ், ஃபெராரி 812 சூப்பர் பாஸ்ட், மெர்சிடீஸ் பென்ஸ் ஜி 350 டி, ஃபோர்டு மஸ்டேங்க், லாம்போர்கினி அவென்டேடார், லாம்போர்கினி உரூஸ் உள்ளிட்ட ஏராளமான கார்கள் இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 14, 2022, 11:08 [IST]
English summary
Indias most expensive super car mclaren 765 lt spider brought by hyderabad man worth rupees 12cr
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+