பெட்ரோல் ரூ.110-யும், டீசல் ரூ.100-யும் தாண்டி விக்குது! இதபற்றி கவலப்படாதீங்க... இதோ டாப் 5 மைலேஜ் கார்கள்!
நாட்டின் அதிகம் மைலேஜ் தரும் டாப் 5 கார்களின் பட்டியலை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

சென்னையில் 36 நாட்களாக விலையில் எந்த மாற்றமுமின்றி பெட்ரோல், டீசல் விற்கப்பட்டு வருகின்றது. இன்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்று ரூ. 110.85க்கும், டீசல் லிட்டர் ஒன்று ரூ. 100.94க்கும் விற்கப்படுகின்றது. இதன் விலை ஏற்றம் செய்யப்படாததை நினைத்து சந்தோஷப்படுவதா அல்லது பல மாதங்களாக மிக அதிக விலையில் விற்கப்படுவதை நினைத்து துயரப்படுவதா என்கிற குழப்பமான மனநிலையிலேயே தற்போது இந்தியர்கள் உள்ளனர்.

குறிப்பாக, அதிக வரியுடன் பெட்ரோல், டீசல் விற்கப்படுவதை அரசு எப்போதுதான் கைவிடுமோ என மக்கள் எண்ண தொடங்கியிருக்கின்றனர். ஆனால், இத்தகைய எண்ணம் கொண்டவர்களுக்கு ஆறுதலை வழங்கக் கூடிய எந்த தகவலும் அரசிடமும் தற்போதைக்கு இல்லை. அதேநேரத்தில், பெட்ரோல், டீசலின் அதிக விலை மற்றும் தொடர் விலை உயர்வு ஆகியவற்றில் இருந்து தப்பிப்பதற்கான வழிகள் எங்களிடத்தில் உள்ளது.

அதாவது, அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் அதிக மைலேஜை வழங்கக் கூடிய கார்கள் எவை என்பது பற்றிய தகவல் எங்களிடத்தில் உள்ளது. இதுகுறித்த தகவலையே இந்த பதிவில் நாங்கள் வழங்கியிருக்கின்றோம். அதாவது, அதிக மைலேஜ் தரக் கூடிய டாப் 5 கார்களின் பட்டியலை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அதுகுறித்த தகவலைக் காணலாம்.

ஹோண்டா சிட்டி இ:எச்இவி - (Honda City e: HEV)
மைலேஜ் விபரம் - 27 km/l
ஹோண்டா நிறுவனம் மிக சமீபத்திலேயே இக்காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. பக்காவானா ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் இக்கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்த புதிய ஹைபிரிட் சிஸ்டம் அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும். குறிப்பாக லிட்டர் ஒன்றிற்கு 27 கிமீ வரை மைலேஜ் தரும்.

இந்த மிக சிறப்பான மைலேஜை வழங்குவதற்காக 1.5 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பயர்டு பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 98 பிஎச்பி பவரை வழங்கக் கூடியது. இது தவிர இரு மின் மோட்டார்களும் சிட்டி இ:எச்இவி-யில் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று பின் பக்க வீலுக்கு இழுவை திறனை வழங்கும். இது மற்றும் பெட்ரோல் மோட்டாரும் இணைந்து 126 பிஎச்பி மற்றும் 253 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

இந்த கார் அதிக ரேஞ்ஜை தரக் கூடிய கார் மட்டுமில்லைங்க இதில் சிறப்பம்சங்களும் அதிகளவில் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன் வழங்கப்பட்டிருக்கின்றது.

இதுதவிர சரவுண்ட் ஸ்பீக்கர் சிஸ்டம், முழு எல்இடி ஹெட்லைட், க்ளைமேட் கன்ட்ரோல், 7 அங்குல வண்ண டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் திரை, வால்க் அவே ஆட்டோ லாக், கார் இணைப்பு தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. இதேபோல் பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் அவுரா - (Hyundai Aura)
மைலேஜ் விபரம் - 25.40 km/l
ஹோண்டா சிட்டிக்கு அடுத்தபடியாக நாட்டில் அதிக மைலேஜை வழங்கக் கூடிய காராக ஹூண்டாய் அவுரா இருக்கின்றது. இந்த கார் லிட்டர் ஒன்றிற்கு 25.40 கிமீ மைலேஜை வழங்கும். இந்த சூப்பரான ரேஞ்ஜை 1.2 லிட்டர் டீசல் எஞ்ஜினே வழங்குகின்றது. இது, ஏஎம்டி கியர்பாக்ஸ் வசதிக் கொண்டது. இந்த மோட்டார் 73.75 பிஎச்பி மற்றும் 190 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

ஹூண்டாய் அவுரா அதிக மைலேஜ் வழங்கக் கூடிய கார் மட்டுமல்ல அதிக சிறப்பு வசதிகளைக் கொண்டதாகவும் காட்சியளிக்கின்றது. 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இது தவிர, 5.3 இன்ச் கொண்ட ஸ்பீடோ மீட்டர் எம்ஐடி வசதியுடன் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், க்ரூஸ் கன்ட்ரோல், ஒயர்லெஸ் போன் சார்ஜர், கூல்டு குளோவ் பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அவரா காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, பாதுகாப்பு அம்சங்களாக இரண்டு ஏர் பேக்குகள், ஏபிஎஸ், இபிடி, ஐசோஃபிக்ஸ் பாயிண்டுகள், ரியர் பார்கிங் சென்சார்கள் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஹூண்டாய் ஐ20 - (Hyundai i20)
மைலேஜ் விபரம் - 25.2 km/l
ஹூண்டாய் ஐ20 இது ஓர் பிரீமியம் தர ஹேட்ச்பேக் காராகும். இக்காரின் 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் தேர்வே அதிக மைலேஜை வழங்கக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது. இந்த மோட்டார் ஒரு லிட்டர் டீசலுக்கு 25.2 கிமீ வரை மைலேஜ் தரும். மேலும், இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 98.63 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது.

தொழில்நுட்ப வசதிகளாக இக்காரில் 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் திரை, க்ரூஸ் கன்ட்ரோல், ஒயர்லெஸ் போன் சார்ஜர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர பாதுகாப்பு அம்சங்களாக இக்காரில் 6 ஏர் பேக்குகள், ஏபிஎஸ், இபிடி, ஐசோஃபிக்ஸ் இருக்கை மவுண்ட், ரியர் பார்கிங் கேமிரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

டாடா அல்ட்ராஸ் - (Tata Altroz)
மைலேஜ் விபரம் - 25.11 km/l
டாடா மோட்டார்ஸின் அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட கார் மாடல்களில் அல்ட்ராஸும் ஒன்று. இக்காரில் இரட்டை ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிடி, பிரேக் ஸ்வே கன்ட்ரோல போன்ற எக்கசக்கமான பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுமாதிரியான அதிக பாதுகாப்பான அம்சங்களினால் இக்கார் ஐந்திற்கு ஐந்து ஸ்டார் ரேட்டிங்கை பெற்றிருக்கின்றது.

இது அதிகாப்பான கார் மட்டுமல்ல அதிகம் மைலேஜ் தரக் கூடியதும் வாகனமும்கூட. அந்தவகையில், 25.11 கிமீ மைலேஜை இதன் 1.5 லிட்டர் டர்போசார்ஜட் டீசல் மோட்டார் வழங்குகின்றது.இந்த மோட்டார் 88.78 பிஎச்பி பவர் வரை வெளியேற்றும். இத்துடன், புரஜெக்டர் மின் விளக்கு, ஆட்டோ ஹெட்லேம்ப், ரெயின் சென்சிங் வைப்பர்கள், கூல்டு குளோவ் பாக்ஸ், க்ளைமேட் கன்ட்ரோல், 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் திரை, ரியர் ஏசி வெண்டுகள், ஆம்பியன்ட் லைட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 - (Hyundai Grand i10 NIOS)
மைலேஜ் விபரம் - 25.1 km/l
ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் கிராண்ட் ஐ10 நியாஸும் ஒன்று. அராய் வழங்கியிருக்கும் சான்றின்படி இக்கார் அதிகபட்சமாக 25.1 கிமீ வரை மைலேஜ் தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது. 1.2 லிட்டர் டீசல் எஞ்ஜினே இந்த சூப்பரமான மைலேஜை வழங்கும். ஹூண்டாயின் அவுரா காரை போலவே சிறப்பு வசதியிலும், எஞ்ஜின் விஷயத்திலும் கிராண்ட் ஐ20 நியாஸ் ஒரே மாதிரியானதாக காட்சியளிக்கின்றது.


Click it and Unblock the Notifications