டர்ன் செய்யும்போது ஸ்டீயரிங்கில் இருந்து சத்தம் வருவதை ஈஸியா எடுத்துக்காதீங்க!! அதுக்கு இவ்ளோ காரணம் இருக்கு

பொதுவாக கார்களை வளைவுகளில் திருப்பும்போது ஸ்டேரிங் சக்கரத்தில் இருந்து எந்த சத்தமும் வெளிவராது.

ஒருவேளை வளைவுகளில் காரை திருப்பும்போது ஸ்டேரிங் சக்கரத்தில் இருந்து ஏதேனும் சத்தம் வெளிவந்தால், அது கீழ்காணும் 10 காரணங்களால் இருக்கலாம்.

டர்ன் செய்யும்போது ஸ்டீயரிங்கில் இருந்து சத்தம் வருவதை ஈஸியா எடுத்துக்காதீங்க!! அதுக்கு இவ்ளோ காரணம் இருக்கு

1. பவர் ஸ்டேரிங் ஆயில் கசிவதால்

பொதுவாக, பவர் ஸ்டேரிங் சக்கரம் திருப்பலின்போது அதிக விசை கொடுத்து திருப்புவதை தவிர்க்கிறது. அதாவது குறைந்த வேகத்தில் செல்லும்போதும், முழுவதுமாக U-டர்ன் செய்வதற்கு பவர் ஸ்டேரிங் சக்கரத்தை சிறிதளவு திருப்பினாலே போதுமானது. இதற்காக இத்தகைய ஸ்டேரிங் சக்கரங்களில் ஹைட்ராலிக் போன்ற திரவம் மென்மையான உராய்விற்காக பயன்படுத்தப்படுகிறது. ஒருவேளை இந்த ஆயில் முழுவதுமாக கசிந்து வீணாகி, மென்மையான உராய்வு கிடைக்கவில்லையெனில், ஸ்டேரிங் சக்கரத்தில் இருந்து சத்தம் வெளிவரலாம்.

டர்ன் செய்யும்போது ஸ்டீயரிங்கில் இருந்து சத்தம் வருவதை ஈஸியா எடுத்துக்காதீங்க!! அதுக்கு இவ்ளோ காரணம் இருக்கு

2. டை ராட் முனைகள் பழுதாகி இருந்தால்

ஸ்டேரிங் சக்கரத்தையும், சக்கரங்களையும் இணைப்பதில் டை ராட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த டை ராட்கள் ஒவ்வொரு சக்கரத்திலும் ஸ்டேரிங் க்னக்கிள்களில் இணைக்கப்பட்டிருக்கும். மழை நீரினாலோ அல்லது நீண்டகால பயன்பாட்டினாலோ இந்த இணைப்பில் பழுது ஏற்பட்டால் ஸ்டேரிங் சக்கரம் அதிர்வுறுவதை உணர்வீர்கள். அத்துடன் திருப்பல்களின்போது 'க்ளிங்...' சத்தத்தையும் கேட்பீர்கள்.

டர்ன் செய்யும்போது ஸ்டீயரிங்கில் இருந்து சத்தம் வருவதை ஈஸியா எடுத்துக்காதீங்க!! அதுக்கு இவ்ளோ காரணம் இருக்கு

3. பவர் ஸ்டேரிங் ஆயில் & வடிக்கட்டியை மாற்றாதது

பவர் ஸ்டேரிங் ஆயில்/திரவம் ஆனது குடுவை போன்றதான ஒரு இடத்தில் சேமித்து வைக்கப்படும். என்ஜினை ஸ்டார்ட் செய்த பிறகு இந்த திரவம் மொத்த ஸ்டேரிங் சக்கர அமைப்பிற்கும் பரவும். இந்த பரவலுக்கு முன்னர், ஒரு வடிக்கட்டுவான் மூலமாக திரவம் வடிக்கட்டப்படும். இந்த திரவத்தையும், வடிக்கட்டுவானையும் ஒவ்வொரு 48,000 - 80,000கிமீ பயணத்திற்கு பிறகு மாற்றவில்லை எனில், ஸ்டேரிங் சக்கரத்தை திருப்புவது கடினமாகுவதுடன், இரைச்சலும் வெளிவர ஆரம்பிக்கும்.

டர்ன் செய்யும்போது ஸ்டீயரிங்கில் இருந்து சத்தம் வருவதை ஈஸியா எடுத்துக்காதீங்க!! அதுக்கு இவ்ளோ காரணம் இருக்கு

4. மோசமான சஸ்பென்ஷன் புஷ்ஷிங்

காரின் ஒவ்வொரு குதித்தலையும் தாங்கிக் கொள்ளும் பாகம் தான் சஸ்பென்ஷன் புஷ்ஷிங் ஆகும். இது பொதுவாக ரப்பர் (அ) பாலியூரிதீனால் செய்யப்பட்டு பொருத்தப்படுவதால் இரைச்சல்கள் எதுவும் இருக்காது. ஆனால் இதுவும் ஒரு காலத்திற்கு மட்டுமே தாக்குப்பிடிக்கும். இது பழுதாகினாலும் ஸ்டேரிங் சக்கரம் அதிர்வுறுவது, மோசமான சாலைகளில் பயணிக்கும்போதும், பிரேக்கை மிகவும் அழுத்தமாக அமுக்கும்போதும் சத்தம் வெளிவருவது ஏற்படும்.

டர்ன் செய்யும்போது ஸ்டீயரிங்கில் இருந்து சத்தம் வருவதை ஈஸியா எடுத்துக்காதீங்க!! அதுக்கு இவ்ளோ காரணம் இருக்கு

5. பழுதான பவர் ஸ்டேரிங் ராக்

தற்கால மாடர்ன் ராக்&பினின் ஸ்டேரிங் அமைப்பில் முக்கியமான பாகமாக ஸ்டேரிங் ராக் விளங்குகிறது. இதுதான் ஸ்டேரிங் சக்கரத்தையும், சக்கரங்களுக்கு அருகே இருக்கும் டை ராட்களையும் இணைக்கும் பாலமாக விளங்குகிறது.

டர்ன் செய்யும்போது ஸ்டீயரிங்கில் இருந்து சத்தம் வருவதை ஈஸியா எடுத்துக்காதீங்க!! அதுக்கு இவ்ளோ காரணம் இருக்கு

இத்தகைய ஸ்டேரிங் ராக் பழுதாகுவது அரிதானதே என்றாலும், அழுக்கான ஸ்டேரிங் ஆயிலை தொடர்ந்து பயன்படுத்தினாலோ (அ) மோசமான குலுக்கல்களினாலோ ஸ்டேரிங் ராக் பழுதாகலாம். அதிவேகத்தில் செல்லும்போது கார் இடப்புறத்திற்கும், வலப்புறத்திற்கும் அலைவுற்றால் இந்த பழுதை நீங்கள் அறியலாம். அத்துடன் குறை வேகத்தில் பயணிக்கும்போது சத்தமும் வெளிவரும்.

டர்ன் செய்யும்போது ஸ்டீயரிங்கில் இருந்து சத்தம் வருவதை ஈஸியா எடுத்துக்காதீங்க!! அதுக்கு இவ்ளோ காரணம் இருக்கு

6. பால் இணைப்பான் முறையாக செயல்படாதது

ஸ்டேரிங் சக்கரத்தை திருப்பும்போது, உடனடியாக சக்கரங்களும் திரும்புவதற்கு முக்கிய காரணமாக விளங்குவது ஒவ்வொரு சக்கரத்திற்கு அருகிலும் கொடுக்கப்படும் பால்கள் ஆகும். ஒரு குடுவைக்குள் அடைக்கப்பட்டவாறு கொடுக்கப்படும் பால்களின் செயல்பாட்டிற்கு மென்மையான உயவு அவசியமானது ஆகும்.

டர்ன் செய்யும்போது ஸ்டீயரிங்கில் இருந்து சத்தம் வருவதை ஈஸியா எடுத்துக்காதீங்க!! அதுக்கு இவ்ளோ காரணம் இருக்கு

இந்த உயவு ஸ்டேரிங் ஆயிலின் மூலமாக கிடைக்கிறது. ஆனால் ஸ்டேரிங் ஆயில் மிகவும் மோசமாக இருக்குமேயானால், பால்கள் முறையாக சக்கரங்களை நகர்த்தாது. இதன் விளைவாக ஸ்டேரிங் சக்கரம் தளர்வாக இருப்பதுபோல் உணர்வது, டயர்களின் தடங்கள் முறையாக தரையில் பதியாதது மற்றும் வளைவுகளில் திரும்பும்போது இரைச்சல்களை கேட்பது உள்ளிட்டவை ஏற்படலாம்.

டர்ன் செய்யும்போது ஸ்டீயரிங்கில் இருந்து சத்தம் வருவதை ஈஸியா எடுத்துக்காதீங்க!! அதுக்கு இவ்ளோ காரணம் இருக்கு

7. சஸ்பென்ஷன் பாகங்கள் பழுதாகி இருந்தால்

கார்களின் சஸ்பென்ஷன் பாகங்களாக பொருத்தப்படும் சுருள்கள் & அதனை தாங்கிப் பிடிக்கும் ராட்கள் அதிகப்பட்சமாக 7இல் இருந்து 8 வருடங்களுக்கு எந்தவொரு பிரச்சனையும் இன்றி செயல்படும். இவை பழுதாகினால் உடனடியாக மாற்றியாக வேண்டும். ஏனெனில் பழுதான சஸ்பென்ஷன் சுருள்கள் & ராட்களுடன் பயணித்தால் கார் ஒரு பக்கமாக சாய்வதை எளிதாக உணரலாம். நெடுஞ்சாலைகளில் அதே காரை அதிவேகத்தில் கொண்டு சென்றால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இந்த சஸ்பென்ஷன் பாகங்கள் பழுதாகினாலும் காரை திருப்பும்போது இரைச்சல்களை கேட்க முடியும்.

டர்ன் செய்யும்போது ஸ்டீயரிங்கில் இருந்து சத்தம் வருவதை ஈஸியா எடுத்துக்காதீங்க!! அதுக்கு இவ்ளோ காரணம் இருக்கு

8. டயரில் குறைந்த காற்று அழுத்தத்தினாலும்

பொதுவாக டயர்கள் ஆனவை வளைவுகளில் திரும்பும்போது கார் கொடுக்கும் அழுத்தத்தை தாங்கக்கூடியவைகளாகவே பொருத்தப்படும். ஆனால் டயர்களில் போதுமான அழுத்தத்தில் காற்று இல்லையெனில், டயரின் பக்கவாட்டு பகுதியும் தரையில் படுவதுடன், ஸ்டேரிங் சக்கரத்தை திருப்பும்போது சத்தங்களை கேட்டுள்ளதாக ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர்.

டர்ன் செய்யும்போது ஸ்டீயரிங்கில் இருந்து சத்தம் வருவதை ஈஸியா எடுத்துக்காதீங்க!! அதுக்கு இவ்ளோ காரணம் இருக்கு

9. மோசமான பவர் ஸ்டேரிங் பெல்ட்

என்ஜின் வழங்கும் இயக்க ஆற்றலை பவர் ஸ்டேரிங் பம்ப்பிற்கு வழங்கும் பணியை ஸ்டேரிங் பெல்ட் பார்த்து கொள்கிறது. பொதுவாக இந்த பெல்ட்கள் நீண்ட காலத்திற்கு உழைக்கக்கூடியவை. ஆனால் அந்த காலத்தை நிறைவு செய்துவிட்டால், வளைவுகளில் திரும்பும்போது பவர் ஸ்டேரிங் பெல்ட் ஸ்லிப் ஆகுவதற்கு வாய்ப்புள்ளது. ஸ்லிப் ஆகும் சமயத்தில் சிறிய சத்தத்தில் இருந்து பலத்த இரைச்சல் வரையில் கேட்கலாம்.

டர்ன் செய்யும்போது ஸ்டீயரிங்கில் இருந்து சத்தம் வருவதை ஈஸியா எடுத்துக்காதீங்க!! அதுக்கு இவ்ளோ காரணம் இருக்கு

10. பழுதான பவர் ஸ்டேரிங் பம்ப்-பினால்

மேற்கூறப்பட்ட பாகங்களை காட்டிலும் பவர் ஸ்டேரிங் பம்ப் ஆனது காரின் வாழ்நாள் முழுவதும் கூட உழைக்கும். ஆனால் அசுத்தமான ஸ்டேரிங் ஆயில் & பழுதான ஸ்டேரிங் பெல்ட்டை தொடர்ந்து உபயோகப்படுத்தி வந்தால், இது விரைவாக பழுதாகிவிடும். ஒருவேளை பவர் ஸ்டேரிங் பம்ப் பழுதாகினால் ஸ்டேரிங் சக்கரத்தை திருப்பும்போது இரைச்சல் ஏற்படும் என்பது ஒருபக்கம் இருந்தாலும், அதனை காட்டிலும் முக்கியமாக நீங்கள் காரை நகர்த்துவதற்கு மிகவும் சிரமப்படுவீர்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, August 26, 2022, 17:57 [IST]
English summary
Is car steering wheel making noise when turning here are reasons
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+