இந்த பெயிண்டை பூசியிருந்தா காருல ஏசியே போட தேவ இல்ல... உச்சி வெயில்ல நின்னாலும் குளுகுளுனு இருக்கும்!

ஏசியின் இடத்தை பூர்த்தி செய்யும் வகையில் ஓர் பெயிண்டை இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்த பெயிண்டை பூசியிருந்தா காருல ஏசியே போட தேவ இல்ல... உச்சி வெயில்ல நின்னாலும் குளுகுளுனு இருக்கும்!

காருக்குள் இருக்க வேண்டிய மிக முக்கியமான அம்சங்களில் ஏசியும் ஒன்று. உலகம் முழுவதிலும் வெப்பம் பன்மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆகையால், பலர் காரில் பயணிக்கும்போது ஏசியை ஃபுல் வேகத்தில் வைத்தவாறு பயணித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இவ்வாறு அதிகளவில் ஏசியைப் பயன்படுத்துவதனால் உலகம் மேலும் பல மடங்கு வெப்பமயமாதல் பாதிப்பிற்கு ஆளாகின்றது.

இந்த பெயிண்டை பூசியிருந்தா காருல ஏசியே போட தேவ இல்ல... உச்சி வெயில்ல நின்னாலும் குளுகுளுனு இருக்கும்!

எனவேதான், ஏசியின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அனைவரையும் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்தமாதிரியான சூழ்நிலையில் வாகனங்களில் ஏசி என்ற ஓர் கருவியையே தேவையற்றதாக மாற்றக் கூடிய பெயிண்ட் பூச்சை வெளிநாட்டு நிறுவனம் ஒன்று கண்டுபிடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பெயிண்டை பூசியிருந்தா காருல ஏசியே போட தேவ இல்ல... உச்சி வெயில்ல நின்னாலும் குளுகுளுனு இருக்கும்!

இஸ்ரேலை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் சோல்கோல்டு (SolCold). இது ஓர் ஆரம்ப நிலை நிறுவனம் ஆகும். இந்நிறுவனமே ஏசி இல்லாமலே காரை குளிர்ச்சியாக வைத்திருக்கும் பெயிண்டை (Fsilm Coating) உருவாக்கியிருக்கின்றது. வாகனங்களை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றும் ஓர் முயற்சியின் அடிப்படையிலேயே சோல்கோல்டு நிறுவனம் ஃபிலிம் கோட்டிங் ரக பெயிண்டை தயாரித்துள்ளது.

இந்த பெயிண்டை பூசியிருந்தா காருல ஏசியே போட தேவ இல்ல... உச்சி வெயில்ல நின்னாலும் குளுகுளுனு இருக்கும்!

இந்த கோட்டிங்கில் ஆன்டி-ஸ்டோக்ஸ் ஃப்ளோரசன்ஸ் என்று அழைக்கப்படும் ஒன்றை அது பயன்படுத்திகியுள்ளது. இதுவே உச்சி வெயிலின்போதும் காரை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். மிக தெளிவாகக் கூற வேண்டும் எனில், கடும் வெயிலின் தாக்கத்தின்போது ஏற்படும் அதிக உஷ்னத்தை கார் உள்வாங்கிக் கொள்ளாமல் அதனை அப்படியே வெளியேற்றும் தொழில்நுட்பம் கொண்ட பூச்சையே அது உருவாக்கியுள்ளது.

இந்த பெயிண்டை பூசியிருந்தா காருல ஏசியே போட தேவ இல்ல... உச்சி வெயில்ல நின்னாலும் குளுகுளுனு இருக்கும்!

இந்த பூச்சு வெப்பத்தை வெளியேற்றுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், காரின் கேபினை சற்று குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் பணியை மேற்கொள்ளும். இதை உறுதிப்படுத்தும் நோக்கில் சோல்கோல்டு நிறுவனம் இரு ஃபோக்ஸ்வேகன் காரை உச்சி வெயிலில் நிறுத்தி சோதனை நடத்தியது.

இந்த பெயிண்டை பூசியிருந்தா காருல ஏசியே போட தேவ இல்ல... உச்சி வெயில்ல நின்னாலும் குளுகுளுனு இருக்கும்!

இதில், ஓர் காரின் மேற்கூரை மீது மட்டும் தங்கள் நிறுவனம் தயாரித்த கூலிங் கோட்டிங்கை சோல்கோல்டு பூசியிருந்தது. மற்றொன்று வழக்கமான பெயிண்ட் பூச்சையேக் கொண்டிருந்தது. இந்த நிலையிலேயே இரு கார்களையும் வெகு நேரம் வெயிலில் நிறுத்தி வைத்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில், வழக்கமான பெயிண்ட் பூசப்பட்டிருந்த காரின் உட்பகுதியில் 55 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவுவதுக் கண்டறியப்பட்டது.

இந்த பெயிண்டை பூசியிருந்தா காருல ஏசியே போட தேவ இல்ல... உச்சி வெயில்ல நின்னாலும் குளுகுளுனு இருக்கும்!

அதாவது உச்சி வெயிலின் காரணத்தினால் காரின் கேபின் மைக்ரோஓவனைப் போல் மாறியிருந்தது. அதுநேரத்தில், சோல்கோல்டு கூலிங் பூச்சு பூசப்பட்டிருந்த காரின் உட்பகுதி 37 டிகிரி செல்சியஸுடன் மட்டுமே காணப்பட்டது. இது 20 டிகிரி வரை குறைவான வெப்பநிலை ஆகும்.

இந்த மாதிரியான சூழலுக்கு காரில் ஏசி போட்டிருக்க வேண்டும் என்கிற அவசியமே இருக்காது. இந்த பெயிண்ட் பூச்சு தற்போதும் முன்மாதிரி வடிவத்திலேயே இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், வெகு விரைவில் இந்த பெயிண்டை ஃபோக்ஸ்வேகன் மற்றும் டொயோட்டா ஆகிய இரு நிறுவனங்களும் அதன் எதிர்கால தயாரிப்புகளில் பயன்படுத்த இருப்பதாக சோல்கோல்டு தெரிவித்துள்ளது.

இந்த பெயிண்டை பூசியிருந்தா காருல ஏசியே போட தேவ இல்ல... உச்சி வெயில்ல நின்னாலும் குளுகுளுனு இருக்கும்!

ஒரு வேலை இந்த குளிர்ச்சியூட்டும் பெயிண்ட் பயன்பாட்டிற்கு வரும் எனில் மிக பெரிய புரட்சி வாகன உலகில் ஏற்படும். குறிப்பாக, இந் பெயிண்ட் ஓர் கேம்-சேஞ்ஜராகவே மாறும். தற்போது வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஏசி என்கிற ஓர் கருவி கார்களில் இல்லாமலேயே போய்டும் நிலைகூட ஏற்படலாம். ஆகையால், சோல்கோல்ட் நிறுவனத்தின் குளிரூட்டும் பெயிண்டின் வருகையை எதிர்நோக்கி பலர் காத்திருக்க தொடங்கியிருக்கின்றனர்.

குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 1, 2022, 8:30 [IST]
English summary
Israeli startup developed film coating can keep your car cool
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+