ஏலத்திற்கு வரும் ஜேம்ஸ்பாண்ட் கார்கள்... விலையை கேட்டால் தலையே சுற்றி போகும்...
ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்களில் பயன்படுத்திய 60 கார்கள் ஏலத்திற்கு வரவுள்ள. இது குறித்த முழு விபரங்களை காணலாம் வாருங்கள்

ஹாலிவுட் திரைப்படங்களை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் என்றால் ஜேம்ஸ் பாண்ட் தான் இவரது திரைப்படத்திற்கு என்று ஏராளமான ரசிகர்கள். இந்த திரைப்படங்களில் ஜேம்ஸ்பாண்ட் செய்யும் விஷயங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் ரசிக்கப்படும். அவர் அணிந்து வரும் ஆடை, அவர் பயன்படுத்தும் கண்ணாடி, ஷூ என எல்லாவற்றையும் ஜேம்ஸ்பாண்ட் போல தயாரித்துமார்கெட்டில் விற்பனைக்கு வரும் அந்த வகையில் தற்போது ஜேம்ஸ்பாண்ட் படத்தில் பயன்படுத்திய 60 கார்கள் தற்போது ஏலத்திற்கு வரவுள்ளன.

கடைசியாக வந்த ஜேம்ஸ்பாண்ட் படமான NO Time To Die திரைப்படத்தில் அவர் பயன்படுத்திய கார்களை இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு ஏல நிறுவனம் ஏலத்திற்கு அறிவித்துள்ளது. இந்த கார்கள் எல்லாம் ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தில் ஸ்டண்ட் காட்சிகளுக்காக பயன்படுத்தப்பட்டது. இப்படியா ஏலம் விடப்படும் சில கார்கள் எவ்வளவு ஏலம் போகிறதோ அந்த தொகை நேரடியா செஞ்சிலுவை சங்கத்திற்கு நன்கொடையாக கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கார்களில் லேண்ட் ரோவர் டிஃபண்டர் கார்தான் மிகவும் பிரபலமான கார். இந்த கார்கள் இந்த திரைப்படத்திற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டு நேரடியாக தயாரிப்பு ஆலையிலிருந்து திரைப்படத்திற்கு வந்தது. இந்த காரின் சேஸிஸ் நம்பர் கூட 007 என வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் இருப்பதிலேயே அதிகபட்சமாக 5 லட்சம் பவுண்ட்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ4.82 கோடிக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏலத்திற்கு வரவுள்ள கார்களின் பட்டியலை பொருத்தவரை ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்ஸ் எஸ்விஆர்எஸ் எஸ்யூவி கார், ஜாக்குவார் எக்ஸ்எஃப் சலூன்ஸ் ஆகிய கார்களும் இடம் பெற்றுள்ளது. இது NO Time To Die திரைப்படத்தில் வில்லன்கள் பயன்படுத்தியது. இதில் ரோவர் ஸ்போர்ட்ஸ் எஸ்விஆர்எஸ் எஸ்யூவி கார் 1.2 லட்சம் பவுண்ட்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ1.15 கோடி, ஜாக்குவார் எக்ஸ்எஃப் சலூன்ஸ் கார் 70000 பவுண்ட்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ67 லட்சம் என்ற விலையில் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த ஏலத்தில் மென்ஏஸிங் டிஃபென்டர் எஸ்யூவி கார் இடம் பெறவில்லை. இது இந்த NO Time To Die திரைப்படத்தில் முக்கிய இடம் பிடித்தது. ஆனால் இந்த ஏலத்தில் இடம் பெறவில்லை. ஆனால் லேண்ட் ரோவர் டிஃபென்டர் 110 வி8 பாண்ட் எடிசன் கார் இந்த ஏலத்தில் இடம் பெறவுள்ளது. இந்த காரும் NO Time To Die திரைப்படதத்தில் இடம் பெற்றது. இந்த கார் ஒரு ஸ்பெஷல் எடிசன் கார் தான். மொத்தமே 300 கார்கள் தான் தயாரிக்கப்பட்டன. இந்த கார் இந்த ஏலத்தில் 3 லட்சம் பவுண்ட்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ2.88 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்த ஏலம் வரும் செப்டம்பர் மாதம் 28ம் தேதி லண்டனில் உள்ள கிரிஸ்டீ என்ற இடத்தில் இடம் பெறவுள்ளது. இந்த ஏலத்தில் அழைப்பு உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இது குறித்து அந்த ஏல நிறுவனத்தின் செயல் இயக்குநர் நிக் கோலின்ஸ் என்பவர் கூறும் போது "டிஃபென்டர், ரேஞ்ச்ரோவர், ஜாக்குவார் கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். ஜேம்ஸ்பாண்ட் கார் கலெக்டர்களுக்கு இந்த ஏலம் மிகப்பெரிய வரப்பிரசாதாமாக இருக்கப்போகிறேது. மிக அதிகமான பணத்தை வசூல் செய்யவுள்ளது. இந்த பணத்தில் பெரும் பங்கு நன்கொடையாக வழங்கப்படும். " என கூறினார்.

ஏலத்திற்கு வரப்போகும் ஜேம்ஸ்பாண்ட் கார்களில் மிகவும் கவனித்தக்க விஷயம் ஒன்று இருக்கிறது. டிஃபென்டர் வி8 பாண்ட் எடிசன் கார் இந்த ஏலத்தில் முக்கிய இடம் பெறும். அதில் 60 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் ஜேம்ஸ்பாண்ட் லோகோ பொறிக்கப்பட்டுள்ளது. அந்த லோகோவுடனேயே விற்பனையாகிறது இது மிகவும் ஸ்பெஷலாக பார்க்கப்படுகிறது. அதனால் இந்த காருக்கு பலத்த போட்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்த ஏலத்தில் நீங்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் எந்த காரை ஏலத்தில் எடுப்பீர்கள்? கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








