ஜீப்னாலே எல்லாருக்கும் பிடிக்கும்... இதுல இந்த மாடல வேற விற்பனைக்குக் கொண்டு வர போறாங்களா?..

ஜீப் (Jeep) நிறுவனம் அதன் சிஜே சர்ஜ் (CJ Surge) எனும் எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடலை முதல் முறையாக இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஜீப்னாலே எல்லாருக்கும் பிடிக்கும்... இதுல இந்த மாடல வேற விற்பனைக்குக் கொண்டு வர போறாங்களா!! எப்போ எப்போனு இப்பவே காத்து கிடக்க ஆரம்பிச்சுட்டாங்க!

சொகுசு வசதிகள் அதிகம் கொண்ட மற்றும் கவர்ச்சிகரமான தோற்றம் உடைய கார்களை தயாரிப்பதில் பெயர்போன நிறுவனமாக விளங்கிக் கொண்டிருக்கின்றது, ஜீப் (Jeep). இந்நிறுவனம் இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றில் வாகன விற்பனையை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் உலக வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக நிறுவனம் புதுமுக மின்சார கார் ஒன்றை வெளியீடு செய்திருக்கின்றது.

ஜீப்னாலே எல்லாருக்கும் பிடிக்கும்... இதுல இந்த மாடல வேற விற்பனைக்குக் கொண்டு வர போறாங்களா!! எப்போ எப்போனு இப்பவே காத்து கிடக்க ஆரம்பிச்சுட்டாங்க!

நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றாக சிஜே-7 (CJ-7) இருக்கின்றது. 80-ஸ்களில் மிக சிறப்பான விற்பனை வரேவற்பைப் பெற்ற கார் மாடல்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரையே தற்போது ஜீப் நிறுவனம் மின்சார வெர்ஷனில் உருவாக்கியிருக்கின்றது. கான்செப்ட் மாடலாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த காரையே நிறுவனம் தற்போது வெளியீடு செய்திருக்கின்றது.

ஜீப்னாலே எல்லாருக்கும் பிடிக்கும்... இதுல இந்த மாடல வேற விற்பனைக்குக் கொண்டு வர போறாங்களா!! எப்போ எப்போனு இப்பவே காத்து கிடக்க ஆரம்பிச்சுட்டாங்க!

அதாவது, முதல் முறையாக இக்காரை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் செமா (Specialty Equipment Market Association) வாகன கண்காட்சியிலேயே இக்காரை நிறுவனம் காட்சிப்படுத்தியது. சிஜே சர்ஜ் (CJ Surge) எனும் பெயரில் இவ்வாகனத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

ஜீப்னாலே எல்லாருக்கும் பிடிக்கும்... இதுல இந்த மாடல வேற விற்பனைக்குக் கொண்டு வர போறாங்களா!! எப்போ எப்போனு இப்பவே காத்து கிடக்க ஆரம்பிச்சுட்டாங்க!

கிளாசிக் தோற்றத்தில், நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இக்காரை ஜீப் நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. ஆகையால், வாகன பிரியர்களுக்கு இக்கார் மிகப் பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக காரில் என்ன மாதிரியான சிறப்பு வசதிகள் எல்லாம் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பது பற்றிய விபரங்களை நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது.

ஜீப்னாலே எல்லாருக்கும் பிடிக்கும்... இதுல இந்த மாடல வேற விற்பனைக்குக் கொண்டு வர போறாங்களா!! எப்போ எப்போனு இப்பவே காத்து கிடக்க ஆரம்பிச்சுட்டாங்க!

அந்தவகையில், நிறுவனம் கார் குறித்து வெளியிட்டிருப்பதிலேயே அதிக கவனத்தை ஈர்க்கக் கூடிய மின்சார மோட்டாரும், பேட்டரி பேக் பற்றிய விபரங்கள் இருக்கின்றன. ஜீப் நிறுவனம் இந்த கான்செப்ட் மாடலில் 400v 200kW எலெக்ட்ரிக் மோட்டாரை பயன்படுத்தியிருக்கின்றது. இந்த மின்சார மோட்டாருக்கு மின்சாரத்தை வழங்கும் விதமாக 24 லித்தியம் அயன் பேட்டரி மாடுல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஜீப்னாலே எல்லாருக்கும் பிடிக்கும்... இதுல இந்த மாடல வேற விற்பனைக்குக் கொண்டு வர போறாங்களா!! எப்போ எப்போனு இப்பவே காத்து கிடக்க ஆரம்பிச்சுட்டாங்க!

இதன் ரேஞ்ஜ் திறன் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இது ஓர் முழு சார்ஜில் 400 கிமீ முதல் 500 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறனை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், காரில் பொருத்தப்பட்டிருக்கும் மின்சார மோட்டார் 266 எச்பி பவரை வெளியேற்றும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நான்கு வீல்களுக்கும் இழுவை திறனை வழங்கும் வகையில் இந்த மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும்.

ஜீப்னாலே எல்லாருக்கும் பிடிக்கும்... இதுல இந்த மாடல வேற விற்பனைக்குக் கொண்டு வர போறாங்களா!! எப்போ எப்போனு இப்பவே காத்து கிடக்க ஆரம்பிச்சுட்டாங்க!

கூடுதல் சிறப்பாக பிற வாகனங்களைப் போன்றில்லாமல் இரு கியர்களைக் கொண்டதாக சிஜே சர்ஜ் உருவாக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் காருக்குள் ஜீப் நிறுவனம் வழங்கியிருக்கும் கூடுதல் சிறப்பாக காட்சியளிக்கின்றது. இந்த கிளாசிக் வாகனத்தை சற்றே முரட்டுத் தனமான தோற்றத்திலும் ஜீப் உருவாக்கியிருக்கின்றது. இதற்கு ஏதுவாக 18 அங்குல வீல்களும், 35 அங்குல பிஎஃப் குட்ரிச் ஆஃப்-ரோடு டயர்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஜீப்னாலே எல்லாருக்கும் பிடிக்கும்... இதுல இந்த மாடல வேற விற்பனைக்குக் கொண்டு வர போறாங்களா!! எப்போ எப்போனு இப்பவே காத்து கிடக்க ஆரம்பிச்சுட்டாங்க!

இத்துடன், நீல நிற மற்றும் மிக போல்டான ஆரஞ்சு நிறம் இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இவையே காருக்கு மிகவும் முரட்டுத் தனமான தோற்றத்தை வழங்கும் வகையில் இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, 2 அங்குல அடர்த்தியான விண்ட் ஸ்கிரீன் இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த விண்ட்ஸ்கிரீன் அவ்வளவு எளிதில் சேதமடையாது.

ஜீப்னாலே எல்லாருக்கும் பிடிக்கும்... இதுல இந்த மாடல வேற விற்பனைக்குக் கொண்டு வர போறாங்களா!! எப்போ எப்போனு இப்பவே காத்து கிடக்க ஆரம்பிச்சுட்டாங்க!

இதேபோல் இந்த காரின் பின் பக்கம் சற்றே மாறுபட்டதாக இருக்கின்றது. அங்கு ஏர் பெரிய ரோல்கேஜ் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதிலேயே சிஜே சர்ஜ் வாகனத்தின் பேட்டரி பேக் மற்றும் ரோட்டரி கியர் செலக்டரைக் காட்டும் பாதை உள்ளிட்டவை நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. இந்த மாதிரியான தனித்துவமான அம்சங்களே காரின் பக்கம் அனைவரையும் ஈர்க்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, ஜீப் நிறுவனத்தின் தயாரிப்புகளை விரும்புவோர் மத்தியில் இந்த கார் எப்போது விற்பனைக்கு வருமோ என்கிற ஆவலை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கின்றது.

ஜீப்னாலே எல்லாருக்கும் பிடிக்கும்... இதுல இந்த மாடல வேற விற்பனைக்குக் கொண்டு வர போறாங்களா!! எப்போ எப்போனு இப்பவே காத்து கிடக்க ஆரம்பிச்சுட்டாங்க!

ஏற்கனவே தங்களின் விருப்பத்தை பலர் சமூக வலைதளங்கள் வாயிலாக ஜீப் நிறுவனத்திற்கு வழங்கத் தொடங்கிவிட்டனர். இதற்கு இக்காரின் கிளாசிக் ரக தோற்றமும் ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது. அதேவேலையில், ஜீப் நிறுவனம் இப்போது கான்செப்ட் மாடலாக மட்டுமே இக்காரை உருவாக்கியிருக்கின்றது. விரைவில் இக்காரை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான சூழல் நிலவிக் கொண்டிருக்கின்றது. ஆனால், இந்த நிகழ்வு அரங்கேற இன்னும் வருடங்கள் ஆகலாம் என கூறப்படுகின்றது.

குறிப்பு: முதல் நான்கு படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles
English summary
Jeep cj surge ev concept breaks cover first time
Story first published: Tuesday, November 8, 2022, 10:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X