இந்திய தார் பாலைவனத்தை கடந்த முதல் எஸ்யூவி கார்!! எது தெரியுமா? மொத்தம் 3 நாட்களாகி உள்ளது...!

முதல் எஸ்யூவி காராக தி கிரேட் இந்தியன் பாலைவனத்தை ஜீப் காம்பஸ் ட்ரைல்ஹாவ்க் (Jeep Compass Trailhawk) கடந்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்போம்.

இந்திய தார் பாலைவனத்தை கடந்த முதல் எஸ்யூவி கார்!! எது தெரியுமா? மொத்தம் 3 நாட்களாகி உள்ளது...!

இந்தியாவில் மக்கள் வாழ்வதற்கு ஏற்றது அல்லாததாக விளங்கும் பகுதிகளில் ராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனமும் ஒன்றாகும். உலகின் மிக பெரிய பாலைவன பகுதிகளுள் ஒன்றாக விளங்கும் இந்தியாவின் தார் பாலைவனம் தன்னுள் மணல் தூசிகளையும், கூர்மையான பாறைகளையும் மற்றும் பகல்நேரங்களில் கடுமையான வெப்பநிலையையும் கொண்டுள்ளது.

இந்திய தார் பாலைவனத்தை கடந்த முதல் எஸ்யூவி கார்!! எது தெரியுமா? மொத்தம் 3 நாட்களாகி உள்ளது...!

இத்தகைய தார் பாலைவனத்தினை ஒரு முனையில் இருந்து மற்றொரு முனை வரையில் கடப்பது என்பது முடியாத காரியம் என்றுக்கூட சொல்லலாம். முழுவதுமாக இந்த பாலைவனத்தை சுற்றிப்பார்க்க வேண்டுமென்றால், அதற்கு ஒரே தீர்வு ஹெலிகாப்டர் மட்டுமே. ஆதலால் அளவில் பெரிய கார்களை கூட தார் பாலைவனத்தில் காண்பது அபூர்வமானதே. ஏனெனில் இந்த பயணம் மிகுந்த சவால்கள் மிகுந்ததாக இருக்கும்.

இந்திய தார் பாலைவனத்தை கடந்த முதல் எஸ்யூவி கார்!! எது தெரியுமா? மொத்தம் 3 நாட்களாகி உள்ளது...!

இருப்பினும், இதனை ஜீப் காம்பஸ் ட்ரைல்ஹாவ்க் எஸ்யூவி காரில் வெற்றிக்கரமாக செய்து முடித்துள்ளனர். இந்த பயணம் 1,200கிமீ-க்கும் அதிகமானதாக இருந்துள்ளது. இந்த பயணத்திற்கு முக்கியமான காரணம், நாம் எதிர்பார்ப்பதை போலவே காம்பஸ் ட்ரைல்ஹாவ்க் காரின் செயல்படுதிறனை வெளிக்காட்டுவது ஆகும். இந்த அசாத்தியமான பயணத்தை மேற்கொண்டிருப்பவர் அல்ஸைசார் என்கிற சிறு நகரத்தின் இளவரசர் ஆவார்.

இதற்கு மொத்தம் 72 மணிநேரங்கள் இவருக்கு தேவைப்பட்டுள்ளது, அதாவது கிட்டத்தட்ட 3 நாட்கள். இந்திய துணைக்கண்டத்தில் வழக்கமாக மார்ச்-ஜூன் மாதங்களுக்கு இடையே கோடை வெயில் சுட்டெரிக்கும். அப்படியென்றால், பாலைவனத்தில் எத்தகைய வெப்பநிலை இருந்திருக்கும் என்பதை நான் கூற வேண்டிய அவசியம் இருக்காது என்றே நினைக்கிறேன். காம்பஸ் ட்ரைவ்ஹாவ்க்கின் இந்த பயணத்தின்போது சுமார் 40 டிகிரியில் வெயில் கொளுத்தியுள்ளது.

இந்திய தார் பாலைவனத்தை கடந்த முதல் எஸ்யூவி கார்!! எது தெரியுமா? மொத்தம் 3 நாட்களாகி உள்ளது...!

அதேநேரம் பாலைவனங்களில் இரவில் இதற்கு எதிர்மறையாக உறைய வைக்கும் குளிர் நிலவும். இவ்வாறு தொடர்ச்சியாக மாறி கொண்டிருக்கும் பயண சூழலிலும் காம்பஸ் ட்ரைல்ஹாவ்க் எஸ்யூவி கார் மிக சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஏனெனில், அமெரிக்காவை சேர்ந்த கார் பிராண்டான ஜீப்பின் தரமான தயாரிப்புகளுள் ஒன்றாக காம்பஸ் மாடலின் ட்ரைல்ஹாவ்க் வெர்சனை சொல்லலாம். ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகரில் துவங்கிய இந்த சவாலான பயணம் குஜராத்தின் கட்ச் வளைகுடா பகுதியில் நிறைவு பெற்றுள்ளது.

இந்திய தார் பாலைவனத்தை கடந்த முதல் எஸ்யூவி கார்!! எது தெரியுமா? மொத்தம் 3 நாட்களாகி உள்ளது...!

இதற்கிடையில் அலிசார், பிகானெர், தானி, ராணுவ குன்றுகள், சின்ன ரான், கலா துங்கர், விர்ஜின் குன்றுகள், பார்னர், ஜெய்சால்மர் மற்றும் ரான் ஆஃப் கட்ச் உள்ளிட்ட நகரங்களை இந்த ட்ரைல்ஹாவ்க் கார் கடந்து வந்துள்ளது. இதில் சில இடங்களில் வாகனங்கள் சென்று வருவதால் பாதைகள் டயர் தடங்களாக உள்ளன. ஆனால் சில பகுதிகள் இதுவரையில் எந்தவொரு வாகனமும் செல்லாத இடங்களாக, தனித்துவிடப்பட்ட பகுதிகளாக உள்ளன.

இந்திய தார் பாலைவனத்தை கடந்த முதல் எஸ்யூவி கார்!! எது தெரியுமா? மொத்தம் 3 நாட்களாகி உள்ளது...!

அத்தகைய பகுதிகளில் செல்வதற்கான பாதையை நாமாகவே உருவாக்கி கொள்ள வேண்டும். அது நிச்சயமாக அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது. இந்த சவாலான, அதேநேரம் சுவாரஸ்யமான பயணம் குறித்து ஜீப் பிராண்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி நிபுன் ஜே மஹாஜன் கருத்து தெரிவிக்கையில், "காம்பஸ் ட்ரைல்ஹாவ்க், புதுமையான சாகசங்களை ஆராய்வதற்கான தீராத தாகம் என்ற ஜீப் பிராண்டின் உண்மையான டிஎன்ஏ-வை உருவப்படுத்துகிறது.

இந்திய தார் பாலைவனத்தை கடந்த முதல் எஸ்யூவி கார்!! எது தெரியுமா? மொத்தம் 3 நாட்களாகி உள்ளது...!

அத்துடன் இந்த மாடலின் முன் நாங்கள் வைத்த சவால்களை நிறைவு செய்து, அது ஒரு சிறந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி என நிரூபித்து தன்னை நிலைநிறுத்தி கொண்டுள்ளது. ஜீப் காம்பஸ் ட்ரைல்ஹாவ்க்கின் அம்சங்கள் மற்றும் திறன்கள் நிச்சயமாக ஆஃப்-ரோடு பிரியர்கள் மற்றும் சாகச விரும்பிகளுக்கு மிகவும் விருப்பமான எஸ்யூவியாக மாற்றும்" என்றார். இவரது இந்த கூற்றுப்படி, வழக்கமான காம்பஸ் எஸ்யூவி மாடலின் ஆஃப்-ரோடு சார்ந்த வெர்சனாக ட்ரைல்ஹாவ்க் விளங்குகிறது.

இந்திய தார் பாலைவனத்தை கடந்த முதல் எஸ்யூவி கார்!! எது தெரியுமா? மொத்தம் 3 நாட்களாகி உள்ளது...!

இதற்காக சில ஆஃப்-ரோடு சார்ந்த அம்சங்களை பெற்றுவரும் ட்ரைல்ஹாவ்க் மாடலின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.30.72 லட்சங்களாக உள்ளது. கூடுதல் ஆஃப்-ரோடு பண்பிற்காக 17-இன்ச் அலாய் சக்கரங்களை ஏற்கும் காம்பஸ் ட்ரைல்ஹாவ்க் மாடலில் அனைத்து-பாதைக்குமான ஃபால்கன் வைல்ட்பீக்ஸ் டயர்கள் பொருத்தப்படுகின்றன. இவற்றுடன் பின்பக்கத்தில் சிவப்பு நிறத்தில் வேறொரு வாகனத்தை இழுத்து செல்வதற்கான கொக்கி, முன்பக்க பொனெட்டில் கிராஃபிக்ஸ் டிகால் உள்ளிட்டவற்றையும் இந்த கார் பெறுகிறது.

இந்திய தார் பாலைவனத்தை கடந்த முதல் எஸ்யூவி கார்!! எது தெரியுமா? மொத்தம் 3 நாட்களாகி உள்ளது...!

அத்துடன் இதன் முன்பக்க மற்றும் பின்பக்க பம்பர்களும் ஆஃப்-ரோடு பயண சூழலுக்கு ஏற்ப சற்று திருத்தியமைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. சஸ்பென்ஷன் அமைப்பு 25மிமீ -க்கு மேலே தூக்கப்பட்டுள்ளதால், வழக்கமான காம்பஸ் மாடலை காட்டிலும் அதன் ட்ரைல்ஹாவ்க் வெர்சனின் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் சற்று அதிகமாகும். மேலும், ஆட்டோ, பனி மற்றும் மணல்/சகதி என மூன்று விதமான ட்ரைவிங் மோட்கள் இந்த எஸ்யூவி காரில் வழங்கப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, March 12, 2022, 7:30 [IST]
English summary
Jeep compass trailhawk proves its mettle becomes the first suv to cross the great indian desert
மேலும்... #ஜீப் #jeep
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+