புதிய ஜீப் காம்பஸ் நைட் ஈகிள் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.21.95 லட்சம்

புதிய ஜீப் காம்பஸ் நைட் ஈகிள் எடிசன் இந்திய சந்தையில் ரூ.21.95 லட்சம் என்கிற விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய காம்பஸ் ஸ்பெஷல் எடிசனை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய ஜீப் காம்பஸ் நைட் ஈகிள் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.21.95 லட்சம்

அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான ஜீப் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யக்கூடிய ஒரே மாடலாக காம்பஸ் 5-இருக்கை எஸ்யூவி கார் விளங்குகிறது. இதனாலேயே விற்பனையை மேலும் அதிகரிக்கும் நோக்கில் காம்பஸில் அவ்வப்போது ஸ்பெஷல் எடிசன்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

புதிய ஜீப் காம்பஸ் நைட் ஈகிள் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.21.95 லட்சம்

இந்த வகையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காம்பஸ் நைட் ஈகிள் எடிசனின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையான ரூ.21.95 லட்சத்தில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் டீசல் என்ஜின் கிடைக்கும். அதுவே ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் & பெட்ரோல் என்ஜின் உடனான காம்பஸ் நைட் ஈகிள் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.22.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய ஜீப் காம்பஸ் நைட் ஈகிள் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.21.95 லட்சம்

காம்பஸ் மாடலில் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் குறித்து ஜீப் இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி நிபுன் ஜே மஹாஜன் கருத்து தெரிவிக்கையில், "ஜீப் காம்பஸ் நைட் ஈகிள் எடிசன் அதன் முழுக்க முழுக்க கருப்பு ஸ்டைலிங்குடன் புதிய அளவிலான தைரியத்தையும், நேர்த்தியையும் தருகிறது. அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு மாதங்களில் விற்றுத்தீர்ந்த டிரெயில்ஹாக்கிற்கான அதிக தேவை, ஜீப் காம்பஸுக்கு கிடைக்கும் வரவேற்பிற்கு சான்றாகும்.

புதிய ஜீப் காம்பஸ் நைட் ஈகிள் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.21.95 லட்சம்

மேலும் நைட் ஈகிளுக்கும் இதேபோன்ற உற்சாகத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றார். பெயருக்கு ஏற்ப காம்பஸ் நைட் ஈகிள் எடிசனானது முழுக்க முழுக்க கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. வெளிப்பக்கத்தில் இந்த புதிய காம்பஸ் மாடல் பளபளப்பான கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்ட க்ரில், க்ரில் வளைவுகள், 18-இன்ச் அலாய் சக்கரங்கள், மேற்கூரை கம்பிகள், ORVM-கள் மற்றும் ஃபாக் விளக்கு பெஸலை கொண்டுள்ளது.

புதிய ஜீப் காம்பஸ் நைட் ஈகிள் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.21.95 லட்சம்

வெளிப்பக்கத்திற்கு ஏற்ப காம்பஸ் நைட் ஈகிள் எடிசனின் உட்புற கேபினும் முழுவதுமாக கருப்பு நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இருக்கைகள் இளம் டங்க்ஸ்டன் நிற தையல்களுடன் கருப்பு நிற துணியால் மூடப்பட்டுள்ளன. காம்பஸின் டாப்-வேரியண்ட்டின் அடிப்படையில் (ட்ரைல்ஹாக் அல்ல) வடிவமைக்கப்பட்டுள்ளதால், புதிய நைட் ஈகிள் எடிசனில் ஏகப்பட்ட தொழிற்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளன.

புதிய ஜீப் காம்பஸ் நைட் ஈகிள் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.21.95 லட்சம்

7-இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளேவை ஏற்கக்கூடிய 10.1 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றை இந்த தொழிற்நுட்ப வசதிகளாக கூறலாம். பயணிகளின் பாதுகாப்பிற்கு புதிய நைட் ஈகிள் எடிசனிலும் இரட்டை-நிலை ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், 6 காற்றுப்பைகள், ஹில் ஸ்டார்ட் உதவி, அனைத்து-வேகத்திலும் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

புதிய ஜீப் காம்பஸ் நைட் ஈகிள் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.21.95 லட்சம்

இவை மட்டுமின்றி, எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் ப்ரேக் முதலியவற்றையும் காம்பஸ் நைட் ஈகிள் எடிசன் பெற்றுள்ளது. இயக்க ஆற்றலை வழங்க 2.0 லிட்டர் டீசல் & 1.4 லிட்டர் பெட்ரோல் என்ற 2 விதமான என்ஜின் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 3,750 ஆர்பிஎம்-இல் 168 பிஎச்பி & 1,750 ஆர்பிஎம்-இல் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

புதிய ஜீப் காம்பஸ் நைட் ஈகிள் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.21.95 லட்சம்

இதனுடன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 1.4 லிட்டர் மல்டிஏர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 5,500 ஆர்பிஎம்-இல் 161 பிஎச்பி மற்றும் 2,500 ஆர்பிஎம்-இல் 250 என்எம் டார்க் திறன் வரையில் காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது. இந்த டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் 7-ஸ்பீடு இரட்டை க்ளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

புதிய ஜீப் காம்பஸ் நைட் ஈகிள் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.21.95 லட்சம்

ஜீப் இந்தியா நிறுவனம் சமீபத்தில், 2 மாதங்களுக்கு முன்னர்தான் காம்பஸின் உயர்-நிலை வேரியண்ட்டாக ட்ரைல்ஹாவ்க்கை சந்தையில் அறிமுகப்படுத்தி இருந்தது. வழக்கமான காம்பஸ் மாடலை காட்டிலும் ஆஃப்-ரோட்டிற்கு ஏற்ற வெர்சனாக கொண்டுவரப்பட்ட ட்ரைல்ஹாவ்க்கின் முதல் தொகுப்பு வெறும் 2 மாதங்களில் முழுவதுமாக விற்று தீர்க்கப்பட்டுள்ளதாக நமது செய்திதளத்தில் கூட தெரிவித்திருந்தோம்.

புதிய ஜீப் காம்பஸ் நைட் ஈகிள் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.21.95 லட்சம்

இதனாலேயே குறிப்பாக காம்பஸ் டரைல்ஹாவ்க் வேரியண்ட்டிற்கு காத்திருப்பு காலம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி இந்த டாப்-காம்பஸ் வேரியண்ட்டை முன்பதிவு செய்து, வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய கால அளவு 4 மாதங்கள் வரையில் தற்சமயம் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 19, 2022, 13:58 [IST]
English summary
Jeep launched compass night eagle in india find here price and changes
மேலும்... #ஜீப் #jeep
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+