ஜீப் மெரிடியன் அதிகாரப்பூர்வமாக வெளியீடு! உற்பத்தி பணிகள் எப்போ தொடங்க போகுது தெரியுமா?
ஜீப் (Jeep) நிறுவனம் அதன் மெரிடியன் (Meridian) காரை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

ஜீப் (Jeep) நிறுவனத்தின் பிரபல கார் மாடல்களில் ஒன்றாக காம்பஸ் (Compass) இருக்கின்றது. இதன் ஸ்டைலை தழுவியே நிறுவனம் மெரிடியன் (Meridian) எனும் புதுமுக எஸ்யூவி காரை உருவாக்கியிருக்கின்றது. இந்த காரையே மிக விரைவில் ஜீப் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

இந்த நிகழ்வை முன்னிட்டு மெரிடியன் காரை ஜீப் நிறுவனம் இன்று (பிப்ரவரி 24) அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்திருக்கின்றது. மூன்று வரி இருக்கை அமைப்பை இக்கார் கொண்டிருக்கின்றது. இந்த மெரிடியன் காரில் ஏழு பேர் வரை தாரளமாக அமர்ந்து பயணிக்க முடியும். இந்தியர்களுக்காக இந்தியாவிலேயே வைத்து இக்காரை உருவாக்க இருக்கின்றது, ஜீப் நிறுவனம்.

காரின் உற்பத்தி பணிகள் வரும் மே மாதம் தொடங்கப்பட இருப்பதாக நிறுவனம் அறிவித்திருக்கின்றது. ஜீப் காம்பஸ் காரை தழுவி உருவாக்கப்பட்டாலும் இந்த மெரிடியன் பல விஷயங்களில் மாறுபட்டதாகக் காட்சியளிக்கின்றது. சற்று மாறுபட்ட தோற்றம் கொண்ட க்ரில் மற்றும் முகப்பு பகுதி, புதிய டிசைன் கொண்ட வீல் உள்ளிட்டவை மெரிடியன் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இவையே காம்பஸ் எஸ்யூவி இடம் இருந்து மெரிடியன் எஸ்யூவி-யை மாறுபட்டு காட்சியளிக்க வைக்கின்றது. இக்காரின் கவர்ச்சியின் கூட்டும் வகையில் ஜீப் நிறுவனம் இரட்டை நிறங்களால் அலங்கரித்திருக்கின்றது. ஆகையால், இக்கார் ட்யூவல் டோன் தேர்விலும் கிடைக்க இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது வெளியாகியிருக்கும் படங்கள் உள்ளன.

அதேவேலையில், லெதர் இருக்கைகள், ஃப்ளோட்டிங் ரக தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பவர் ரக பேசஞ்ஜர் இருக்கை மற்றும் குரோம் பெசல் டேஷ்போர்டு மற்றும் சென்டர் கன்சோல் உள்ளிட்ட அம்சங்களும் மெரிடியனில் இடம் பெற இருப்பதை தற்போது வெளியாகியிருக்கும் படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஜீப் காம்பஸ் காரில் பயன்படுத்தப்பட்டு வரும் 2.0 லிட்டர் டீசல் எஞ்ஜினே மெரிடியன் காரிலும் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இதே எஞ்ஜினையே விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் மற்றுமொரு ஜீப் தயாரிப்பான ட்ரைல்ஹாவ்க் (Trailhawk) காரும் பெற இருக்கின்றது. இது தவிர பெரிய பெட்ரோல் எஞ்ஜினும் இதில் எதிர்பார்க்கப்படுகின்றது.

நிறுவனம் 80 சதவீதம் உள்ளூர் பாகங்களைக் கொண்டே மெரிடியன் எஸ்யூவி காரின் உற்பத்தியை மேற்கொண்டிருக்கின்றது. ஆகையால், சற்று குறைவான விலையில் மெரிடியன் எதிர்பார்க்கப்படுகின்றது. ரூ. 26 லட்சம் முதல் ரூ. 32 லட்சம் வரையிலான விலையில் அது எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்தகைய சூப்பரான காரின் உற்பத்தி பணியையே ஜீப் நிறுவனம் வரும் மே மாதம் புனேவில் உள்ள ரஞ்ஜன்கவுன் ஆலையில் வைத்து தயாரிக்க இருக்கின்றது. இதன் விற்பனைக்கான அறிமுகம் 2022ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்குள் அரங்கேறிவிடும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








