டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு புதிய சவால்... ஜீப் மெரிடியன் கார் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

ஜீப் மெரிடியன் எஸ்யூவி கார் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு புதிய சவால்... ஜீப் மெரிடியன் கார் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த ஜீப் மெரிடியன் எஸ்யூவி (Jeep Meridian SUV) கார் சமீபத்தில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இது ஜீப் காம்பஸ் எஸ்யூவி (Jeep Compass) காரின் மூன்று வரிசை வெர்ஷன் (Three-row Version) என்பது வழக்கமான வாசகர்களுக்கு தெரியும்.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு புதிய சவால்... ஜீப் மெரிடியன் கார் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

காம்பஸிடம் இருந்து மெரிடியனை தனித்து தெரிய செய்வதற்காக ஜீப் நிறுவனம் மிக கடுமையாக உழைத்துள்ளது. சமீபத்தில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்ட ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து முக்கியமான தகவல்களையும் இங்கே பட்டியலிட்டுள்ளோம். வாருங்கள், செய்திக்குள் செல்லலாம்.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு புதிய சவால்... ஜீப் மெரிடியன் கார் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

வெளிப்புற டிசைன்

வெளிப்புற டிசைனில் நிறைய வேறுபாடுகள் இருப்பதால், ஜீப் காம்பஸ் எஸ்யூவியிடம் இருந்து மெரிடியனை எளிதாக வேறுபடுத்தி பார்க்க முடியும். ஜீப் மெரிடியனின் ஹெட்லேம்ப்களும், முன் பக்க க்ரில் அமைப்பும் வித்தியாசமான டிசைனை பெற்றுள்ளன. அத்துடன் முன் மற்றும் பின் பக்க பம்பர்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு புதிய சவால்... ஜீப் மெரிடியன் கார் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

மேலும் டெயில்லைட்கள் மற்றும் டெயில்கேட்டின் டிசைனும் வித்தியாசமாக இருக்கிறது. அத்துடன் ஜீப் மெரிடியன் எஸ்யூவி தனித்துவமான அலாய் வீல்களை பெற்றுள்ளது. கூடுதல் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளதால், ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரின் வீல் பேஸ் பெரியதாக உள்ளது. அத்துடன் காம்பஸ் எஸ்யூவியுடன் ஒப்பிடும்போது, மெரிடியனின் உயரம் மற்றும் அகலமும் கூட அதிகம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு புதிய சவால்... ஜீப் மெரிடியன் கார் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

இன்ஜின், கியர் பாக்ஸ்

ஆரம்பத்தில் ஒரே ஒரு இன்ஜின் தேர்வுடன் மட்டுமே ஜீப் மெரிடியன் விற்பனைக்கு வரவுள்ளது. இதன்படி இந்த எஸ்யூவி காரில், 2.0 லிட்டர், டர்போசார்ஜ்டு, இன்லைன்-4 டீசல் இன்ஜின் வழங்கப்படும். ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரிலும் இதே இன்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு புதிய சவால்... ஜீப் மெரிடியன் கார் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

அதே நேரத்தில் ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரில், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும். இந்த இரண்டு கியர் பாக்ஸ் தேர்வுகளிலும் ஃப்ரண்ட்-வீல் டிரைவ் (Front-Wheel Drive - FWD) ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த காரில் ஆல்-வீல் டிரைவ் ஆப்ஷனும் உள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு புதிய சவால்... ஜீப் மெரிடியன் கார் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

ஆனால் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுடன் மட்டுமே ஆல்-வீல் டிரைவ் (All-Wheel Drive - AWD) ஆப்ஷன் கூடுதலாக வழங்கப்படும். ஆரம்பத்தில் ஒரே ஒரு டீசல் இன்ஜின் தேர்வு மட்டுமே வழங்கப்பட்டாலும் கூட, வரும் மாதங்களில் ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரில், பெட்ரோல் இன்ஜின் தேர்வும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு புதிய சவால்... ஜீப் மெரிடியன் கார் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

வசதிகள்

ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரில், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு புதிய சவால்... ஜீப் மெரிடியன் கார் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

அதே நேரத்தில் பாதுகாப்பை பொறுத்தவரை, 6 ஏர்பேக்குகள், டிராக்ஸன் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், 360 டிகிரி பார்க்கிங் கேமரா உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன. தற்போது இந்திய வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு வசதிகளுக்கு அதிக முக்கியத்தும் வழங்க தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு புதிய சவால்... ஜீப் மெரிடியன் கார் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

எப்போது விற்பனைக்கு வரும்?

ஜீப் மெரிடியன் எஸ்யூவி தற்போது பொது பார்வைக்கு மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் நடப்பாண்டின் மத்தியில்தான் இந்த கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அனேகமாக வரும் மே அல்லது ஜூன் மாதங்களில் இந்த கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு புதிய சவால்... ஜீப் மெரிடியன் கார் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

இந்திய சந்தையில் டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி க்ளோஸ்ட்டர் உள்ளிட்ட பல்வேறு கார்களுடன் ஜீப் மெரிடியன் எஸ்யூவி போட்டியிடும். ஃபோர்டு நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறியதால், டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் எம்ஜி க்ளோஸ்ட்டர் ஆகிய கார்களுக்கு, ஃபோர்டு எண்டேவர் தற்போது போட்டியாக இல்லை. இருப்பினும் புதிய போட்டியாக ஜீப் மெரிடியன் எஸ்யூவி வரவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, April 1, 2022, 11:43 [IST]
English summary
Jeep meridian suv here s everything you need to know
மேலும்... #ஜீப் #jeep
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+