வெகு நாள் எதிர்பார்ப்பு! Jeep Meridian இந்தியாவில் வெளியீடு! யப்பா இத்தன சூப்பரான அம்சங்களோட கிடைக்க இருக்குதா

ஜீப் நிறுவனம் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெரிடியன் (Jeep Meridian) எஸ்யூவி காரை இந்தியாவில் வெளியீடு செய்திருக்கின்றது. இந்த புதுமுக வாகனம் குறித்த கூடுதல் முக்கிய விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

வெகு நாள் எதிர்பார்ப்பு... Jeep Meridian இந்தியாவில் வெளியீடு! யப்பா இத்தன சூப்பரான அம்சங்களோட கிடைக்க இருக்குதா!

ஜீப் நிறுவனம் அதன் புதுமுக கார் மாடலான மெரிடியன் எஸ்யூவி காரை இந்திய சந்தையில் வெளியீடு செய்திருக்கின்றது. அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் ஜீப், இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் மிக முக்கியமான தயாரிப்பாக காட்சியளிக்கின்றது. முன்னதாக காம்பஸ் ட்ரையல்ஹாக் கார் மாடலை அது அறிமுகப்படுத்தியது.

வெகு நாள் எதிர்பார்ப்பு... Jeep Meridian இந்தியாவில் வெளியீடு! யப்பா இத்தன சூப்பரான அம்சங்களோட கிடைக்க இருக்குதா!

இந்த நிலையிலேயே புதுமுக வாகனமான மெரிடியன் கார் மாடலை அது வெளியீடு செய்திருக்கின்றது. இது ஓர் 7 சீட்டர் எஸ்யூவி ரக காராகும். மிக சமீபத்திலேயே இக்காரின் பெயரை ஜீப் நிறுவனம் உறுதிப்படுத்தியிருந்தது. இந்த நிலையில் அதனை தற்போது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

வெகு நாள் எதிர்பார்ப்பு... Jeep Meridian இந்தியாவில் வெளியீடு! யப்பா இத்தன சூப்பரான அம்சங்களோட கிடைக்க இருக்குதா!

இந்த காரை ஜீப் நிறுவனம் அதன் ரஞ்ஜன்கான் உற்பத்தி ஆலையில் வைத்தே தயாரித்து வருகின்றது. இங்கிருந்தே ஆசிய கண்டங்கள், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஜீப் மெரிடியன் ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றது. தற்போது இக்காரை நிறுவனம் வெளியீடு மட்டுமே செய்திருக்கின்றது.

வெகு நாள் எதிர்பார்ப்பு... Jeep Meridian இந்தியாவில் வெளியீடு! யப்பா இத்தன சூப்பரான அம்சங்களோட கிடைக்க இருக்குதா!

விற்பனைக்கான அறிமுகத்தை வெகு விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. ஆனால், இதற்கான காலக்கெடுவை அது வெளியிடவில்லை. அதேநேரத்தில் விற்பனையாளர்கள் மற்றும் ஆன்-லைன் வாயிலாக காருக்கான புக்கிங் பணியை அது தொடங்கியுள்ளது.

வெகு நாள் எதிர்பார்ப்பு... Jeep Meridian இந்தியாவில் வெளியீடு! யப்பா இத்தன சூப்பரான அம்சங்களோட கிடைக்க இருக்குதா!

ஜீப் மெரிடியன் காரில் 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜினுடன் 9 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷன் அல்லது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி, முன் பக்க வீல் இயக்கம் மற்றும் அனைத்து வீல்கள் இயக்கம் ஆகிய வசதிகளுடன் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும் என கூறப்படுகின்றது.

வெகு நாள் எதிர்பார்ப்பு... Jeep Meridian இந்தியாவில் வெளியீடு! யப்பா இத்தன சூப்பரான அம்சங்களோட கிடைக்க இருக்குதா!

மெரிடியன் காரில் கூடுதல் சிறப்பு வசதியாக மூன்று விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட உள்ளன. ஸ்நோவ், சேன்ட்/மட் மற்றும் ஆட்டோ ஆகிய தேர்வுகளே வழங்கப்படும். மெரிடியனின் டாப் ஸ்பீடு மணிக்கு 198 கிமீ ஆகும். அதேநேரத்தில் இக்கார் வெறும் 10.8 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனைக் கொண்டதாகவும் காட்சியளிக்கின்றது.

வெகு நாள் எதிர்பார்ப்பு... Jeep Meridian இந்தியாவில் வெளியீடு! யப்பா இத்தன சூப்பரான அம்சங்களோட கிடைக்க இருக்குதா!

ஜீப் நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றே காம்பஸ். இந்த காரின் 7 சீட்டர் வெர்ஷனாகவே மெரிடியன் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, ஆறு இருக்கைகள் தேர்விலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

வெகு நாள் எதிர்பார்ப்பு... Jeep Meridian இந்தியாவில் வெளியீடு! யப்பா இத்தன சூப்பரான அம்சங்களோட கிடைக்க இருக்குதா!

காம்பஸ் காரிடம் இருந்து மாறுபட்டு காட்சியளிக்கும் விதமாக பன்முக புதிய சிறப்பம்சங்கள் மெரிடியன் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. 7 சிலேட்டுகள் அமைப்புடைய க்ரில், பை-ஃபங்க்சன் எல்இடி ஹெட்லைட், சங்கியான பம்பர், பகல் நேர மின் விளக்கு, எல்இடி பனி மின் விளக்கு, பாடி கிளாடிங், ரூஃப் ரெயில் உள்ளிட்டவை மெரிடியனில் வழங்கப்பட்டுள்ளன.

வெகு நாள் எதிர்பார்ப்பு... Jeep Meridian இந்தியாவில் வெளியீடு! யப்பா இத்தன சூப்பரான அம்சங்களோட கிடைக்க இருக்குதா!

பாதுகாப்பு அம்சங்கள்:

ஜீப் மெரிடியன் காரில் 7 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், டிராக்சன் கன்ட்ரோல், அடாஸ் போன்ற நவீன கால பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அடாஸ் தொழில்நுட்பத்தின் வாயிலாக இக்கார் கூடுதல் பாதுகாப்பான வாகனமாக மாறியிருக்கின்றது. இது. அவசர கால தானியங்கி பிரேக், லேன் அசிஸ்ட், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்சன் உள்ளிட்ட வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும்.

வெகு நாள் எதிர்பார்ப்பு... Jeep Meridian இந்தியாவில் வெளியீடு! யப்பா இத்தன சூப்பரான அம்சங்களோட கிடைக்க இருக்குதா!

தொழில்நுட்ப அம்சங்கள்:

ஜீப்பின் யு-கனெக்ட் அம்சம் கொண்ட 10.1 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதியும் இதில் வழங்கப்படும்), 10.25 இன்ச் அளவுள்ள டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்டபிள் மற்றும் வென்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை, ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் ஜீப் மெரிடியன் காரில் வழங்கப்பட்டுள்ளன.

வெகு நாள் எதிர்பார்ப்பு... Jeep Meridian இந்தியாவில் வெளியீடு! யப்பா இத்தன சூப்பரான அம்சங்களோட கிடைக்க இருக்குதா!

இந்த கார் இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஸ்கோடா கோடியாக், டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி குளோஸ்டர் உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வந்திருக்கின்றது. அனைத்தும் பிரீமியம் தர எஸ்யூவி கார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 29, 2022, 19:43 [IST]
English summary
Jeep revealed meridian suv car in india bookings open
மேலும்... #ஜீப் #jeep
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+