தானே ஆறும் காயங்களை போல் பஞ்சரை செல்ஃப் ஹீல் செய்யும் டயர் அறிமுகம்... இது 4 சக்கர வாகனங்களுக்கானது!

மனித உடலில் ஏற்படும் காயங்கள் தானாக ஆறுவதை போல, தனக்குண்டான பஞ்சாரை தானே சரி செய்துகொள்ளும் டயர்களை ஜேகே டயர் நிறுவனம் உருவாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

தானே ஆறும் காயங்களை போல் பஞ்சரை செல்ஃப் ஹீல் செய்யும் டயர் அறிமுகம்... இது 4 சக்கர வாகனங்களுக்கானது!

நான்கு சக்கர வாகனங்களுக்கான பஞ்சர் குவார்ட் தொழில்நுட்பம் (Puncture Guard Technology) கொண்ட டயர்களை உருவாக்கியிருப்பதாக பிரபல டயர் உற்பத்தி நிறுவனம் ஜேகே டயர் மற்றும் இன்டஸ்ட்ரீஸ் (JK Tyre & Industries) அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை நேற்று (வியாழக் கிழமை) அது வெளியிட்டது. இதற்கு முன்னதாக இது போன்று ஓர் தொழில்நுட்ப வசதிக் கொண்ட டயரை எந்தவொரு நிறுவனமும் நான்கு சக்கர வாகனங்களுக்காக விற்பனைக்குக் கொண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

தானே ஆறும் காயங்களை போல் பஞ்சரை செல்ஃப் ஹீல் செய்யும் டயர் அறிமுகம்... இது 4 சக்கர வாகனங்களுக்கானது!

ஆகையால், நாட்டின் முதல் நான்கு சக்கர வாகனங்களுக்கான பஞ்சர் குவார்ட் தொழில்நுட்பம் கொண்ட டயர்களாக ஜேகே டயர்ஸ் உருவாக்கியிருக்கும் இந்த டயர்கள் காட்சியளிக்கின்றன. இந்த டயர்கள் பிரத்யேகமாக பஞ்சரை தானே சரி செய்து கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இதுவே டயரின் ஸ்பெஷல் ஆகும்.

தானே ஆறும் காயங்களை போல் பஞ்சரை செல்ஃப் ஹீல் செய்யும் டயர் அறிமுகம்... இது 4 சக்கர வாகனங்களுக்கானது!

இதற்காக எளாஸ்டோமர் எனும் கோட்டிங்கை டயரின் உட்பக்கத்தில் ஜேகே டயர் பயன்படுத்தியிருக்கின்றது. இதுவே, ஒவ்வொரு முறையும் டயர் பஞ்சராகும்போது, அதனை சரி செய்யும். அதாவது, மனிதனின் உடலில் காயம் ஏற்பட்ட பின்னர் உருவாகும் புதிய தோலினை போல், டயருக்குள் இருக்கும் எளாஸ்டோமர் கோட்டிங் செயல்படும்.

தானே ஆறும் காயங்களை போல் பஞ்சரை செல்ஃப் ஹீல் செய்யும் டயர் அறிமுகம்... இது 4 சக்கர வாகனங்களுக்கானது!

இந்த செயல் உடனடியாக நடைபெறும் என்பதால் காற்று வெளியேறு தவிர்க்கப்படும். அதேநேரத்தில், ஒன்றுக்கும் மேற்பட்ட பஞ்சர்களையும் இது செல்ஃப் ஹீலிங் செய்யும் திறனைக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், 6 மிமீ வரையிலான பஞ்சர்களைக் கூட இது உடனடியாக சரி செய்து கொள்ளும்.

தானே ஆறும் காயங்களை போல் பஞ்சரை செல்ஃப் ஹீல் செய்யும் டயர் அறிமுகம்... இது 4 சக்கர வாகனங்களுக்கானது!

இத்தகைய திறன் கொண்ட டயரை அனைத்து விதமான நான்கு சக்கர வாகனங்களுக்காகும் விரைவில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக ஜேகே டயர் அறிவித்திருக்கின்றது. இந்த டயர் அதன் வாழ்நாள் முழுவதும் காற்று இழப்பு இல்லா மற்றும் தொந்தரவுகள் இல்லாத பயணத்தை வழங்க உதவும்.

தானே ஆறும் காயங்களை போல் பஞ்சரை செல்ஃப் ஹீல் செய்யும் டயர் அறிமுகம்... இது 4 சக்கர வாகனங்களுக்கானது!

இதன் அறிமுகம் குறித்து ஜேகே டயர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ரகுபதி சிங்கானியா கூறியதாவது, "அட்வான்ஸ்ட் தொழில்நுட்பத்திலான வாகன இயக்கத்தை வழங்க நாங்கள் எங்களை ஈடுபடுத்தி வருகின்றோம். இதன் அடிப்படையில், 2020ம் ஆண்டில் ஸ்மார்ட் டயர் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினோம். இப்போது பஞ்சர் குவார்ட் தொழில்நுட்பம் கொண்ட டயர்களைக் கொண்டு வந்திருக்கின்றோம். இந்த தொழில்நுட்பம் மிக உயர் ரக பாதுகாப்பு மற்றும் வசதியை வழங்கும்" என்றார்.

More from DriveSpark

Article Published On: Friday, March 25, 2022, 12:45 [IST]
English summary
Jk tyre introduces country s first puncture guard tyre for four wheelers
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+