ஜேகே டயர் அறிமுகப்படுத்திய புதுமுக டயர்கள்... அனைத்துமே மின்சார வாகனங்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவை!

பிரபல டயர் உற்பத்தி நிறுவனமான ஜேகே டயர் (JK Tyre) மின்சார வாகனங்களுக்கான பிரத்யேக டயர்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஜேகே டயர் அறிமுகப்படுத்திய புதுமுக டயர்கள்... அனைத்துமே மின்சார வாகனங்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவை!

முன்னணி டயர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஜேகே டயர் (JK Tyre), தங்கள் நிறுவனம் மின்சார வாகனங்களுக்கான டயர்களை உருவாக்கியிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றது. எலெக்ட்ரிக் வாகனங்களின் இயக்கத்தை பல மடங்கு சிறப்பானதாக மாற்றக் கூடிய பிரத்யேகமான டயர்களையே ஜேகே நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.

ஜேகே டயர் அறிமுகப்படுத்திய புதுமுக டயர்கள்... அனைத்துமே மின்சார வாகனங்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவை!

பயணிகள் கார், பேருந்து, மினி வணிக வாகனம் (LCV) மற்றும் ட்ரக் உள்ளிட்ட மின்சார வாகனங்களுக்கான டயர்களையே தற்போது நிறுவனம் உற்பத்தி செய்திருக்கின்றது. இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களைத் தொடர்ந்து மின்சார கார்களுக்கும் நாட்டு மக்கள் மத்தியில் பல மடங்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது.

ஜேகே டயர் அறிமுகப்படுத்திய புதுமுக டயர்கள்... அனைத்துமே மின்சார வாகனங்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவை!

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே ஜேகே டயர் எலெக்ட்ரிக் கார் உள்ளிட்டவற்றிற்கான டயரை பிரத்யேகமாக அறிமுகப்படுத்தியிருக்கின்றது. தங்களின் ரகுபதி சிங்கானியா சிறப்பு மையத்தின் (Raghupati Singhania Centre of Excellence) பொறியாளர்களைக் கொண்டே இந்த டயர்களை வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் செய்திருப்பதாக ஜேகே டயர் தெரிவித்திருக்கின்றது.

ஜேகே டயர் அறிமுகப்படுத்திய புதுமுக டயர்கள்... அனைத்துமே மின்சார வாகனங்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவை!

ஏற்கனவே கூறியதைப் போல் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை பல மடங்கு சுவாரஷ்யமானதாக மாற்றும் வகையில் இந்த டயர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மிக தெளிவாகக் கூற வேண்டும் என்றால் வழக்கமான டயர்களைக் காட்டிலும் ஜேகே நிறுவனம் உருவாக்கியிருக்கும் இந்த டயர்கள் உங்களின் மின் வாகன இயக்கத்தை நம்ப முடியாத அளவிற்கு பன்மடங்கு சிறப்பானதாக மாற்றியமைக்குமாம்.

ஜேகே டயர் அறிமுகப்படுத்திய புதுமுக டயர்கள்... அனைத்துமே மின்சார வாகனங்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவை!

குறிப்பாக, ரேஞ்ஜ் திறனை அதிகரிக்கச் செய்தல் மற்றும் செயல் திறனை கூட்டுதல் உள்ளிட்டவற்றை இந்த டயர்கள் செய்யும் என தனது அறிக்கையின் வாயிலாக ஜேகே டயர் கூறியுள்ளது. இதுமட்டுமின்றி, மின்சார வாகனங்களை கூடுதல் சத்தமில்லாமல் இயங்க வைக்கவும் இந்த டயர்கள் உதவியாக இருக்கும் என அந்த அறிக்கையில் ஜேகே டயர் தெரிவித்துள்ளது.

ஜேகே டயர் அறிமுகப்படுத்திய புதுமுக டயர்கள்... அனைத்துமே மின்சார வாகனங்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவை!

ஈரமான மற்றும் கரடு முரடான சாலை என இந்தியாவின் பன்முக நிலப்பரப்பிற்கு ஏற்ற டயராகவும் மின் வாகனங்களுக்கான இந்த டயர்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர, நீடித்து உழைக்கும் திறனுடனும் அவை உருவாக்கப்பட்டுள்ளன. ஆகையால், மின் வாகன பயன்பாட்டாளர்களின் கவனத்தை இந்த டயர்கள் பெரியளவில் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜேகே டயர் அறிமுகப்படுத்திய புதுமுக டயர்கள்... அனைத்துமே மின்சார வாகனங்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவை!

17.5 மற்றும் 22.5 ஆகிய அளவுள்ள ட்யூப்-லெஸ் டயர்களையே ஜேகே டயர் தற்போது அறிமுகம் செய்திருக்கின்றது. மத்திய மற்றும் மாநில அரசுகள் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் மிக தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் அடிப்படையில் மானியம் வழங்குதல், சிறப்பு தள்ளுபடிகளை வழங்குதல் போன்ற மிக முக்கியமான சலுகைகளை அவை மின் வாகனங்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன.

ஜேகே டயர் அறிமுகப்படுத்திய புதுமுக டயர்கள்... அனைத்துமே மின்சார வாகனங்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவை!

இதுதவிர, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி கொடுக்கும் பணியிலும் அரசுகள் தீவரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே மின் வாகனங்களின் இயக்கத்தை பன் மடங்கு சிறப்பானதாக மாற்றக் கூடிய டயர்களை உருவாக்கி, அவற்றை தற்போது சந்தைக்குக் கொண்டு வந்திருக்கின்றது ஜேகே டயர்.

ஜேகே டயர் அறிமுகப்படுத்திய புதுமுக டயர்கள்... அனைத்துமே மின்சார வாகனங்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவை!

உலகின் டாப் 25 டயர் உற்பத்தியாளர்களில் ஒருவராக ஜேகே டயர் இருக்கின்றது. 1977ம் ஆண்டில் இருந்து இந்நிறுவனம் டயர் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றது. டிரக், பேருந்து ஆகியவற்றிற்கான டயர்களை உற்பத்தி செய்து வந்த நிறுவனம் தற்போது இருசக்கர வாகனம், ஆட்டோ ரிக்ஷா என அனைத்து விதமான வாகனங்களுக்குமான டயர்களையும் அது உற்பத்தி செய்துக் கொண்டிருக்கின்றது.

ஜேகே டயர் அறிமுகப்படுத்திய புதுமுக டயர்கள்... அனைத்துமே மின்சார வாகனங்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவை!

இந்த நிலையிலேயே புதிதாக அது மின்சார வாகனங்களையும் அதன் பட்டியலில் புதிதாக இணைத்திருக்கின்றது. உலக முழுவதிலும் 105க்கும் அதிகமான நாடுகளில் வர்த்தக பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இதுதவிர, உலகளவில் 12 உற்பத்தி ஆலைகளை அது இயக்கி வருகின்றது. இதில் ஒன்பது ஆலைகள் இந்தியாவிலும், 3 ஆலைகள் மெக்ஸிகோவிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த ஆலைகள் வாயிலாக ஆண்டிற்கு 32 மில்லியன் டயர்களை ஜேகே நிறுவனம் உற்பத்தி செய்துக் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, July 29, 2022, 19:39 [IST]
English summary
Jk tyre unveils new range of electric vehicle specific tyres
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+