ஜூனியர் என்டிஆர் காரை நிறுத்தி ஜன்னல்களில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை அதிரடியாக நீக்கிய காவல்துறை!
தெலுங்கு திரையுலகின் நட்சத்திர நடிகர்களில் ஒருவரான ஜூனியர் என்டிஆர் காரின்மீது ஹைதராபாத் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் ஜூனியர் என்டிஆரும், அவரது மகனும் சொகுசு கார் ஒன்றில் ஹைதராபாத்தில் சென்றுக் கொண்டிருந்தபோதே காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையைக் காவல்துறையினர் மேற்கொண்டிருக்கின்றனர். ஜூனியர் என்டிஆரின் கார் ஜன்னல்களில் கருப்பு நிற டின்ட் ஃபிலிம் ஒட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.

அதனையே காவல்துறையினர் அதிரடியாக அகற்றியிருக்கின்றனர். வாகன தணிக்கையின்போது கார் நிறுத்தப்பட்டு இடத்தில் வைத்தே, அக்காரின் அனைத்து ஜன்னல்களிலும் ஒட்டப்பட்டிருந்த அனைத்து டின்ட் ஃபிலிம்களும் அகற்றப்பட்டிருக்கின்றன. இதன் பின்னரே அவரது கார் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கின்றது.

சம்பவத்தின்போது ஜூனியர் என்டிஆரின் ஓட்டுநரே காரை ஓட்டி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, ஜூனியர் என்டிஆர் அல்லது அவரது மகனால் கார் இயக்கப்படவில்லை என்பது தெரிய வந்திருக்கின்றது. ஹைதராபாத் நகர காவல்துறையினர் தற்போது டின்ட் செய்யப்பட்ட ஜன்னல் கண்ணாடிகளுக்கு எதிராக போர் தொடுக்க தொடங்கியிருக்கின்றனர். அதாவது, காரின் உட்புறத்தை மறைக்கின்ற வகையில் ஒட்டப்படும் டின்ட் ஃபிலிம்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள தொடங்கியிருக்கின்றனர்.

இதுமட்டுமின்றி, முறையற்ற நம்பர் பிளேட், ஊடகம், அரசு பணியாளர், எம்எல்ஏ மற்றும் காவல்துறை போன்ற ஸ்டிக்கர்களுக்கு எதிராகவும் ஹைதராபாத் காவல்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொள்ள தொடங்கியிருக்கின்றனர். இருப்பினும், டின்ட் ஃபிலிம்களுக்கு எதிராக சற்று தீவிரமான நடவடிக்கையில் அவர்கள் களமிறங்கியிருக்கின்றனர்.

இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே பிரபல திரை நட்சத்திரம் ஜூனியர் என்டிஆர் காரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை அமைந்துள்ளது. போக்குவரத்து விதிமீறல்கள் இல்லாத நகரமாக ஹைதராபாத்தை மாற்றும் முயற்சியில் அந்நகர காவல்துறை களமிறங்கியிருக்கின்றது. இதன் அடிப்படையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொள்ள தொடங்கியிருக்கின்றனர்.

அந்தவகையில், சிசிடிவி கேமிராக்கள் வாயிலாகவும் போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த மாதிரியான சூழ்நிலையில் காருக்குள் இருக்கும் நபர்களைக் கண்டறிவது, மோதலை ஏற்படுத்திவிட்டு தப்பி செல்போரைக் கண்டுபிடிப்பதில் பெருத்த சிக்கலை டின்ட் ஃபிலிம் ஏற்படுத்துவதாக காவல்துறை சார்பில் புகார் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையைக் களையும் பொருட்டே டின்ட் ஃபிலிம்களுக்கு எதிராக காவல்துறை தீவிரமாக களமிறங்கியிருக்கின்றது. இந்தியாவில் நிலவும் மிகக் கடுமையான வெயிலுக்கு ஏதுவாக சிலர் டின்ட் ஃபிலிம்களை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, காரின் கேபினுக்குள் ஏற்படும் அதிக வெப்பத்தைக் குறைக்கும் பொருட்டும் சன் ஃபிலிம்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இதனை சமூக விரோதிகள் சிலர் குற்றச் செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.

அதேநேரத்தில், சில வாகன உற்பத்தியாளர்கள் சிலர் தங்களின் கார்களில் யுவி எதிர்ப்பு தன்மைக் கொண்ட ஜன்னல் கண்ணாடிகளை தங்களின் முன்னணி கார் மாடல்களில் வழங்கி வருகின்றனர். கடும் வெயில்களில் இருந்து காக்க உதவும். ஆனால், இந்த கண்ணாடிகள் விலை அதிகம் கொண்ட உயர்நிலை தேர்வுகளில் மட்டுமே வழங்கப்படுகின்றது.

அவற்றைப் பயன்படுத்த எந்த தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஏனெனில் ஆர்டிஓ சான்றின்படியே அது வழங்கப்படுகின்றது. ஆகையால், எந்த மாதிரியான சட்ட ரீதியான பிரச்னைகளும் இந்த கண்ணாடியை பயன்படுத்துவோர் சந்திக்க மாட்டார்கள். அதேநேரத்தில், வெளிப்புற சந்தையில் இருந்து டின்ட் ஃபிலிம்களை வாங்கி பயன்படுத்தினால் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கக் கூடும் என்பதை நினைவில் கொள்ளவும்.
Source: Tollywood


Click it and Unblock the Notifications








