அன்பளிப்புனா இப்படி இருக்கணும்... விக்ரம் இயக்குநர் லோகேஷுக்கு பரிசளிக்கப்பட்ட காரு எவ்ளோ சூப்பரானது தெரியுமா?

நடிகர் கமலஹாசன், விக்ரம் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜிக்கு விலையுயர்ந்த சொகுசு காரையும், துணை இயக்குநர்களுக்கு விலையுயர்ந்த டிவிஎஸ் பைக்கையும் பரிசாக வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

அன்பளிப்புனா இப்படி இருக்கணும்... விக்ரம் இயக்குநர் லோகேஷுக்கு பரிசளிக்கப்பட்ட காரு எவ்ளோ சூப்பரானது தெரியுமா?

நடிகர் கமல்ஹாசன், தனது விக்ரம் படத்தை இயற்றிய லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் நிறுவனத்தின் விலையுயர்ந்த சொகுசு காரையும், இப்படத்தில் பணியாற்றிய துணை இயக்குநர்களுக்கு டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கையும் பரிசாக வழங்கியிருக்கின்றார். இந்த படத்தில் 13 பேர் உதவி இயக்கநர்களாக பணியாற்றியதாகக் கூறப்படுகின்றது. அவர்கள் அனைவருக்கும் பைக்கை நடிகர் கமல்ஹாசன் பரிசாக வழங்கியிருக்கின்றார். இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் இணையத்தில் தற்போது புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அன்பளிப்புனா இப்படி இருக்கணும்... விக்ரம் இயக்குநர் லோகேஷுக்கு பரிசளிக்கப்பட்ட காரு எவ்ளோ சூப்பரானது தெரியுமா?

குறிப்பாக, சொகுசு காருக்கான சாவியை இயக்குநர் லோகேஷ் கனகராஜியிடத்தில் நடிகர் கமல் வழங்குவதைப் போன்ற படங்கள் தற்போது தமிழ் திரையுலகினர் மத்தியில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. படத்தின் வெற்றியை அனைவரும் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற வேலையில் ரசிகர்களையும், இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்களையும் ஆச்சரியத்தில் திகைக்கும் வகையில் கார் மற்றும் பைக் பரிசளிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் கமலுக்கு பெரும் புகழை தேடி தரும் வகையில் விக்ரம் படம் அமைந்துள்ளது.

அன்பளிப்புனா இப்படி இருக்கணும்... விக்ரம் இயக்குநர் லோகேஷுக்கு பரிசளிக்கப்பட்ட காரு எவ்ளோ சூப்பரானது தெரியுமா?

இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையிலேயே வாகனங்கள் பரிசளிக்கப்பட்டுள்ளன. விக்ரம் படம் முதல் நாளிலேயே ரூ. 32 கோடி வசூலை பெற்றது. இது இந்தியாவில் மட்டுமே பெறப்பட்ட வசூல் வேட்டையின் புள்ளி விபரம் ஆகும். உலக அளவில் ரூ. 48.64 கோடியை அது வசூல் வேட்டை செய்தது. படம் வெளியாகி பல நாட்கள் ஆகின்ற நிலையில் தற்போதும் திரையரங்குகள் பிசியாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. மேலும், இப்போதே 120க்கும் அதிகமான கோடி ரூபாயை அது வசூலித்திருப்பதாக படத்தை விநியோகம் செய்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அன்பளிப்புனா இப்படி இருக்கணும்... விக்ரம் இயக்குநர் லோகேஷுக்கு பரிசளிக்கப்பட்ட காரு எவ்ளோ சூப்பரானது தெரியுமா?

எனவே முன்னதாக வசூலில் சாதனைப் படைத்த படங்களை விரைவில் விக்ரம் ஓரம் கட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் வெளி வந்த சில வெற்றிப் படங்களை காட்சிகளில் இருந்து விக்ரம் ஓரம் கட்ட தொடங்கிவிட்டது. விக்ரம் படத்தின் காட்சிகளே அனைத்து திரைகளிலும் ஒளிபரப்பட்டு வருகின்றன.

அன்பளிப்புனா இப்படி இருக்கணும்... விக்ரம் இயக்குநர் லோகேஷுக்கு பரிசளிக்கப்பட்ட காரு எவ்ளோ சூப்பரானது தெரியுமா?

இந்த நிலையிலேயே வாகன பரிசளிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த பரிசளிப்பிலேயே மிகவும் முக்கியமான ஒன்றாக இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு சொகுசு கார் வழங்கப்பட்டது இருக்கின்றது. லெக்சஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றான இஎஸ் 300எச் மாடலையே விக்ரம் படத்தின் நடிகரும், தயாரிப்பாளருமான கமலஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜிக்கு பரிசாக வழங்கியிருக்கின்றார்.

அன்பளிப்புனா இப்படி இருக்கணும்... விக்ரம் இயக்குநர் லோகேஷுக்கு பரிசளிக்கப்பட்ட காரு எவ்ளோ சூப்பரானது தெரியுமா?

கார் பரிசளிப்புகுறித்த தகவலை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். காருடன் தானும், பரிசளிக்கப்பட்ட காரும், கூடவே கமலஹாசன் நிற்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். இத்துடன், காரை பரிசளித்ததற்கு கமலுக்கு நன்றி தெரிவித்தும் அந்த ட்வீட்டை பதிவிட்டுள்ளார். லெக்சஸ் இஎஸ் 300எச் சொகுசு கார் இந்தியாவில் இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எக்ஸ்க்யூசைட் மற்றும் லக்சரி ஆகியவையே அந்த தேர்வுகள் ஆகும். இதில், உயர்நிலை தேர்வான லக்சரி-யையே கமல் பரிசாக வழங்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது.

அன்பளிப்புனா இப்படி இருக்கணும்... விக்ரம் இயக்குநர் லோகேஷுக்கு பரிசளிக்கப்பட்ட காரு எவ்ளோ சூப்பரானது தெரியுமா?

இஎஸ் 300எச் லக்சரி ஓர் உயர்நிலை தேர்வு என்பதால் அதில் சிறப்பம்சங்கள் மிக ஏராளமாக உள்ளன. அதுமட்டுமின்றி அதன் விலையும் சற்று அதிகமானதாகக் காட்சியளிக்கின்றது. ரூ. 65.60 லட்சம் என்ற உச்சபட்ச விலையில் சொகுசு கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரும் விலை மட்டுமே ஆகும்.

அன்பளிப்புனா இப்படி இருக்கணும்... விக்ரம் இயக்குநர் லோகேஷுக்கு பரிசளிக்கப்பட்ட காரு எவ்ளோ சூப்பரானது தெரியுமா?

இந்த காரில் 2.5 லிட்டர், டைரக்ட் இன்ஜெக்சன் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், தானாக சார்ஜ் செய்து கொள்ளும் ஹைபிரிட் வசதியும் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், மின் மோட்டார் ஒன்றும் இக்காரில் இடம் பெற்றிருக்கின்றது. இவ்விரண்டும் சேர்ந்து காரை 214 குதிரை திறனில் இயங்கச் செய்கின்றன.

அன்பளிப்புனா இப்படி இருக்கணும்... விக்ரம் இயக்குநர் லோகேஷுக்கு பரிசளிக்கப்பட்ட காரு எவ்ளோ சூப்பரானது தெரியுமா?

இதுமட்டுமின்றி ஒரு லிட்டருக்கு 22.6 கிமீ மைலேஜை வழங்கவும் இந்த அம்சம் உதவுகின்றது. 2,487 சிசி 4 சிலிண்டர் இன்-லைன் மோட்டாரே இஎஸ் 300எச் லக்சரி வேரியண்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 5,700 ஆர்பிஎம்மில் 131 கிலோவாட் பவரையும், 5,200 ஆர்பிஎம்மில் 221 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

அன்பளிப்புனா இப்படி இருக்கணும்... விக்ரம் இயக்குநர் லோகேஷுக்கு பரிசளிக்கப்பட்ட காரு எவ்ளோ சூப்பரானது தெரியுமா?

இதில் கூடுதலாக வழங்கப்பட்டிருக்கும் பர்மனென்ட் மேக்னட் மின் மோட்டார் அதிகபட்சமாக 88kW மற்றும் 202 என்எம் திறனை வழங்கும். இந்த மின் மோட்டாருக்கான மின்சார சக்தியை வழங்கும் விதமாக 244.8 V பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. 160 kW வரை பவரை வழங்கும். சொகுசு வசதிகளும் மிக ஏராளமாக இக்காரில் இடம் பெற்றிருக்கின்றன.

அன்பளிப்புனா இப்படி இருக்கணும்... விக்ரம் இயக்குநர் லோகேஷுக்கு பரிசளிக்கப்பட்ட காரு எவ்ளோ சூப்பரானது தெரியுமா?

அந்தவகையில், செமி அனிலைன் லெதர் இருக்கைகள், 14 விதமான் வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளக் கூடிய வசதிக் கொண்ட டிரைவர் இருக்கை, முன்னிருக்கையில் வென்டிலேட் மற்றும் ஹீட் வசதி, 7 அங்குல டிஎஃப்டி திரை, எல்இடி ஆம்பியன்ட் லைட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அன்பளிப்புனா இப்படி இருக்கணும்... விக்ரம் இயக்குநர் லோகேஷுக்கு பரிசளிக்கப்பட்ட காரு எவ்ளோ சூப்பரானது தெரியுமா?

இதுமட்டுமின்றி கம்ஃபோர்டான பயண அனுபவத்தை வழங்கும் விதமாக க்ரூஸ் கன்ட்ரோல், பேடில் ஷிஃப்ட், எலெக்ட்ரிக் டில்ட் வசதியுடன் கூடியி எலெக்ட்ரிக் பவர் ஸ்டியரிங், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஒயர்லெஸ் சார்ஜர், ஹெட்ஸ் அப் திரை, ரெயின் சென்சிங் வைப்பர், தானியங்கி 3 ஜோன் ஏர் கன்டிஷனர், முன் மற்றும் பின் பக்கத்தில் பார்க்கிங் சென்சார் ஸ்மார்ட் போன் இணைப்பு மற்றும் ஸ்மார்ட் கேமிரா உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இதுமட்டுமின்றி மிக பாதுகாப்பு அம்சங்களையும் மிக தாராளமாக இக்கார் கொண்டிருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kamalhaasan gifts lexus car to vikram director lokesh kanagaraj
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X