எம ராஜா வாங்கிய சொகுசு கார்... அடேங்கப்பா இவ்ளோ அதிக விலை கொடுத்தா இந்த கார வாங்கியிருக்காரு!
'கர்ணன்' திரைப்படத்தில் எம ராஜா கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் லால் விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

பிரபல நடிகர் லால் விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ சொகுசு காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என இந்தியாவின் பன்மொழி திரையுலகில் வலம் வந்துக் கொண்டிருப்பவர்களில் இவரும் ஒருவர். நடிகராக மட்டுமின்றி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என கூடுதல் சில ரோல்களையும் இவர் மேற்கொண்டு வருகின்றார்.

இவரின் பூர்வீகம் கேரளாவாக இருந்தாலும் அதிகம் தமிழ் திரையுலகிலேயே தோன்றி வருகிறார். சண்டக்கோழி, ஆழ்வார், காளை, காட்ஃபாதர், சுல்தான் மற்றும் கர்ணன் என பல முன்னணி தமிழ் திரைப்படங்களில் அவர் நடித்திருக்கின்றார். முக்கியமாக கர்ணன் படத்தில் நடித்த பின்னர் இவருக்கு தமிழ் திரையுலகில் சற்று இமேஜ் கூடிவிட்டது.

அப்-படத்தில் அவர் 'எம ராஜா' எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். குறிப்பாக, மஞ்சனத்தி பாடலின் வாயிலாகவே பலரை அவர் கவர்ந்தார் என்றும்கூட கூறலாம். அந்தளவிற்கு மிகப் பெரிய ரீச்சை தமிழ் மக்கள் மத்தியில் இப்பாடல் பெற்றது. இப்படியான ஓர் நடிகரே தற்போது மிக மிக விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கியிருக்கின்றார்.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எக்ஸ்7 ஆடம்பர காரையே லால் வங்கியிருக்கின்றார். இந்த கார் இந்தியாவில் ரூ. 1.46 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இது ஆன்-ரோடு விலை மதிப்பாகும். எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 1.15 கோடி ஆகும். நடிகர் லால் வாங்கியிருக்கும் இந்த கார் மற்றுமொரு சிறப்பு தகவலையும் அடக்கியிருக்கின்றது.

நடிகர் வாங்கியிருப்பது எக்ஸ்7 கார் மாடலின் சிக்னேச்சர் எடிசன் எனும் சிறப்பு பதிப்பு என்பதே அந்த தகவல் ஆகும். இது ஓர் டீசல் மோட்டார் கொண்ட வாகனம் ஆகும். பெட்ரோல் எஞ்ஜின் தேர்விலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், லால் டீசலையே தேர்வு செய்திருக்கின்றார்.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்த தயாரிப்பு அதிக சொகுசு வசதிகளைக் கொண்ட வாகனம் மட்டுமல்ல, ஸ்போர்ட்ஸ் வாகனம் போன்று செயல்படக் கூடிய அம்சங்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே சொகுசு மற்றும் ஸ்போர்ட்ஸ் வாகனங்களை விரும்புவோர் மத்தியில் எக்ஸ்7-க்கு நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.

3.0 லிட்டர் டர்போசார்ஜட் இன்லைன்-6 சிலிண்டர் இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 265 பிஎச்பி மற்றும் 620 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 8 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் வசதி இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

இத்துடன், கூடுதல் தொழில்நுட்ப வசதியாக பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு காரில் 12.3 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 5 ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், சன்ரூஃப், பார்க் அசிஸ்ட் போன்ற பன்முக சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர அதிக பாதுகாப்பான பயணத்தை வழங்கக் கூடிய அம்சங்களும் அதிகளவில் இக்காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
Source: manoramaonline


Click it and Unblock the Notifications








